Author: admin

சுயமரியாதை கால்பந்து போட்டி நிகழ்ச்சி தள்ளிவைப்பு

சுயமரியாதை கால்பந்து போட்டி நிகழ்ச்சி தள்ளிவைப்பு

சென்னை தொடர் மழையின் காரணமாக, தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்தநாள் கால்பந்து போட்டி(20.10.2019) மற்றும் பரிசளிப்பு விழா, மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் (23.10.2019) ஆகியவை தள்ளி வைக்கப்படுகிறது.. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்   மயிலை பகுதி சென்னை திவிக  

தேசத் துரோக வழக்கு:  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி கண்டனம்

தேசத் துரோக வழக்கு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி: தனி மனிதர்கள் மீது மதத்தின் பெயரால் கும்பலாக தாக்குதல் நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதியதற்காக ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காந்தியாரைக் கொன்ற கோட்சேயை புகழ்ந்து தென்னாட்டுக் கோட்சே என்று எச்.இராஜாவிற்கு சுவரொட்டி அடிக்கப்படுகிறது. எது தேசதுரோகம் என்று தெரியாத நிலை உள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நகர நாகரிகம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை. தமிழகத் தொல்லியல் துறை மூலம், கீழடி ஆய்வை தொடர்ந்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதே நேரம் பூம்புகார், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7...

பொதுத் தேர்வு ஒரு சித்திரவதை ஆயிஷா நடராசன்

பொதுத் தேர்வு ஒரு சித்திரவதை ஆயிஷா நடராசன்

கற்றலும் கற்பித்தலும் இனிமையான மகிழ்வூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும் என்று நாம் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுமே ‘தேர்வு’ என்ற ஒற்றைச் சொல்லால் முறியடிக்கப்பட்டு விடுகிறது –  பேராசிரியர் யஷ்பால் (யஷ்பால் குழு அறிக்கை, 1993 – முன்னுரை) ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. (தற்போது 3 ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு எனக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்). இந்த அறிவிப்பு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உலகில் எங்குமே இல்லாத பேரிடரை நமது மண்ணில் செயற்கையாக உருவாக்கும் பின்விளைவைக் கொண்டது. பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) எனும் ஒரே தேர்வை முன்பு ஆங்கிலேய அரசு வைத்திருந்தது. அதை முடித்தால் கல்லூரி (பி.யூ.சி.) போய்விடலாம். ‘கோத்தாரி கல்விக் குழு’ பி.யூ.சி.யை மேல்நிலை வகுப்பாக்கிப் பள்ளிக் கல்வியில் இணைத்தபோது பிளஸ் 2 தேர்வு உருவானது. இப்படியாக, பள்ளியில் இரண்டு பொதுத்...

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிகள், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் (டிடி)நேரலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக தனியார்அமைப்புகள், இயக்கங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் என அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். அப்படியிருந்தும், அண்மையில் சென்னை ஐஐடி-யில் பிரதமர் மோடி பங்கேற்றபட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யவில்லை என்று, சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கைக்கு உள்ளானார்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தொடக்க நாள்,விஜயதசமி நிகழ்ச்சிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது மட்டுமன்றி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கட்காரி, வி.கே. சிங் ஆகியோரும், கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவரான எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந் தினராகவும் கலந்து...

தேசத் துரோகச் சட்டம் – தேசத்துக்கு  அவமானம்!

தேசத் துரோகச் சட்டம் – தேசத்துக்கு அவமானம்!

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோகச் சட்டம் கருத்து உரிமையைப் பறிக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் வைகோ மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்தது. கலைஞர்கள், ஆய்வாளர்கள் என்று 49 பேர் பிரதமருக்கு, கும்பல் கொலையைத் தடுத்து நிறுத்தச் சொல்லிக் கடிதம் எழுதிய ஆளுமைகள் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதனால், பழமையான அந்தக் காலனிய சட்டத்தின் மீது மறுபடியும் வெளிச்சம் விழுந்திருக்கிறது. தேசத் துரோகச் சட்டமானது அரசியல், கலாச்சார ரீதியான எதிர்ப்பை ஒடுக்கு வதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நுழைக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கையை அல்லது வெறுப்பைப் பரப்புவதைக் குற்றமாக்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காந்தி, பால கங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. வைகோவுக்கு எதிராக மட்டுமல்ல, சமீப காலம் வரை அது தொடர்ச்சியாகப் பலர் மீது...

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

தனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்?

குஜராத் மாநிலம் சபர்மதியில் 1917 முதல் இயங்கிவரும் காந்தி ஆசிரமத்தை, குஜராத் பாஜக அரசு கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், இது ஆசிரமத்தை சீர்குலைக்கும் செயல் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், ஆசிரமம் அமைந்துள்ள 32 ஏக்கர் நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சூறையாடும் திட்டமும் இதன் பின்னணியில் இருப்பதாக காந்தியவாதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கடந்த 1917-ஆம் ஆண்டு, குஜராத்மாநிலம் சபர்மதியில் அமைக்கப்பட்டது,சபர்மதி ஆசிரமம் ஆகும். இது அன்றையகாலத்தில் ஹரிஜன் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது. மயானம் மற்றும் சிறைச்சாலைக்கு இடையிலான தரிசு நிலத்தில், அமைக்கப்பட்டிருந்த இந்த ஆசிரமத்தில், மகாத்மா காந்தி 1917 முதல் 1930 வரை வசித்து வந்தார். காந்தியின் படுகொலைக்குப் பிறகும் தொடர்ந்து இயங்கி வரும் இந்த ஆசிரமத்தில், ஒரு மேல்நிலைப்பள்ளி, தலித் பெண்கள் தங்கும் விடுதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சிப்பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளன. குஜராத் காந்தி கிராமத்யோக் சார்பில்கதர்த் துணிகள் உள்ளிட்ட பல்வேறுகைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுவதுடன்,...

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

தீபாவளி: பகுத்தறிவுக்கு எதிரானது

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது...

ஓம் ‘ரபேல்’ நமஹ!

ஓம் ‘ரபேல்’ நமஹ!

பிரான்ஸ் துறைமுக நகரான போர்டோவில் பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்டாராம். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் விஜயதசமி. முதல் ரபேல் போர் விமானத்தை ராஜ்நாத் சிங் எப்படி பெற்றுக் கொண்டார்? விமான டயரின் கீழ் எலுமிச்சை வைத்து, விமானத்தின் மீது தேங்காய், பூ உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்களை வைத்தாராம். இந்தி மொழியில் ‘ஓம்’ என்று விமானத்தில் எழுதி பூஜை செய்திருக்கிறார். “உள்ளே இருக்கிற 250 ‘ஸ்பேர்பார்ட்ஸ்’ல ஓடாத லாரி, இந்த எலுமிச்சம் பழத்திலேயடா, ஓடப் போவுது?” என்று நடிகர் விவேக் ஒரு படத்தில் கேட்பார். பிரான்ஸ் தேசத்தில் விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் இந்தக் காட்சியைப் பார்த்து திக்குமுக்காடியிருப்பார்கள். தேங்காய், பூ, எலுமிச்சை எல்லாம் ரபேல் போர் விமானத்தைவிட சக்தி வாய்ந்ததா? இது என்ன புதிய கதை என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். சரசுவதி பூஜையின்போது குழந்தைகள் பாட நூல்களை வைத்து பூஜை செய்யச் சொல்லுவார்கள்....

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

மயிலாடுதுறையில் ஒரு நாள் பயிற்சி முகாம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 8.10.2019 அன்று பெரியாரியல் பயிற்சி முகாம் கீழ் நாஞ்சில் நாடு பகுதியிலுள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. குடந்தைப் பகுதியில் கழகத்தில் இணைந்த தோழர்கள் தரங்கம்பாடி நன்னிலம் பகுதி மற்றும் மயிலாடுதுறைத்  தோழர்கள் ஆதரவாளர்கள் 68 பேர் கலந்து கொண்டனர். பெரியார் யுவராஜ் கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் இளைய ராஜா பயிற்சி முகாம் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.  தஞ்சை தோழர் பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் அணுகுமுறை பெரியார் இயக்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து  வகுப்புகள் எடுத்தனர். பயிற்சியாளர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதற்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் விளக்கமாக பதில் அளித்தனர். மாலை 7 மணி வரை பயிற்சி வகுப்பு நடந்தது. மயிலாடுதுறை...

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது

இரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னையில் இருக்கிறது. இங்கே, கடந்த சில வாரங்களாக அமைதியற்றச் சூழல் நிலவுகிறது. கார்ப்பரேஷனாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி நடப்பதாக தி.மு.க. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் தொழிற் சங்கங்கள் உட்பட அத்தனை தொழிற் சங்கங்களும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிப்பது, ஐ.சி.எஃப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்ற முடிவானது, மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் முக்கியமான அம்சம். அதன்படி, டெல்லி – லக்னோ இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி யுள்ளது. அடுத்து, டெல்லி – அகமதாபாத் இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. இதையடுத்து உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்ப ரேஷனாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வருவதால், பதறிக்கிடக்கிறார்கள் தொழிலாளர்கள். ‘‘தமிழகத்தின் பெருமையை தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்!’’ மேற்கு...

நன்கொடை

நன்கொடை

கழகத் தோழர் பெரியார் யுவராஜ்-லீலாவதி, ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு மணவிழா மயிலாடுதுறையில் செப்.22 2019இல் நடந்தது. மண விழா மகிழ்வாக, மணமக்கள் கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.5000 நன் கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102019 இதழ்

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

குமாரபாளையத்தில் : 28.09.2019 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு, மு.கேப்டன் அண்ணாதுரை தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் சரவணன், காளிபட்டி பெரியண்ணன், இராசிபுரம் பிடல் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கமாக காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் கோபி வேலுச்சாமி, பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்துக் கூறினார். இறுதியாக கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வின் மோசடிகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார். குமாரபாளையம் பகுதி  மோகன் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்திற்கு காளிப்பட்டி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், இராசிபுரம், ஈரோடு, பவானி பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் இல்லம் திராவிடமணி இல்லத்தில் தோழர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரையில் :  30...

காந்தி 150 ஜாதிய கட்டுப்பாடுகளைத் தகர்த்தார்

காந்தி 150 ஜாதிய கட்டுப்பாடுகளைத் தகர்த்தார்

ஜாதி அமைப்பை ஆதரித்து எழுதிய காந்தி, ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இளம் வயதிலிருந்தே மீறி வந்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை காந்தி பிறந்த ஜாதி தடை செய்திருந்தாலும், காந்தி சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். அவரது சொந்த ஜாதிக்காரர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். “ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப் போவதாக – ஜாதித் தலைவர்கள் கூறினாலும், அப்படி விலக்கினாலும் எனது வெளி நாட்டுப் பயணத்தைத் தடுக்க முடியாது” என்றார் காந்தி. பெரியார் முழக்கம் 10102019 இதழ்

காந்தி 150 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’

காந்தி 150 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’

‘முன் ஜென்ம பலன்’ என்பதற்கு வைதிக மதம் தரும் விளக்கங்களை காந்தி புறந்தள்ளி இவ்வாறு எழுதுகிறார்: “ ‘கர்மா’ என்ற முன்ஜென்ம விதி தத்துவம் மனிதர்களை மதிக்கவில்லை என்றால், அந்த தத்துவத்தை மத பழமைவாதிகளிடமே விட்டு விடுங்கள்; தனது ‘தலைவிதி’யை நிர்ணயிப்பது மனிதன் மட்டும்தான். எனவே உங்கள் ‘தலைவிதி’யை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்களாக மாறுங்கள் (Man is the makers of his own destiny, and I therefore ask you to become makers of your own destiny).” அவரது நடைமுறை வாழ்விலேயே ‘முன்ஜென்மப் பயன்’ என்ற கருத்தை நிராகரித்தார் என்பதற்கு சான்றுகள் உண்டு. நோயால் அவதிப்பட்ட ஒரு பசுவை கொன்றுவிடச் சொன்னார். முன் ஜென்ம விதிப்படியே பசு இந்த நோயை அனுபவிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார். 1928ஆம் ஆண்டில் தனது ‘ஆஸ்ரமத்தில்’ தீர்க்க முடியாத ஒரு நோயினால் அவதிப்பட்ட பசுவின் கன்றுகுட்டியை கொன்றுவிட காந்தி...

காந்தி 150 பூணூல் போட மறுத்தார்

காந்தி 150 பூணூல் போட மறுத்தார்

வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் (சூத்திரர் தவிர) மேலே உள்ள மூன்று வர்ணப் பிரிவினரும் பூணூல் போடும் உரிமை பெற்றவர்கள். காந்தியும் இளம் வயதில் அதற்குரிய சடங்குகள் நடத்தப்பட்டு ‘பூணூல்’ போடப்பட்டவர்தான். இது குறித்து தனது சுயசரிதையில் “நானும் பூணூல் போட் டிருந்தேன். அந்தப் பூணூல் தொலைந்து போனபோது அது பற்றி எனக்கு எந்தக் கவலையும் வரவில்லை. ஆனால் புதிய பூணூலை அணிவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் என்பது எனக்கு தெரியும் (But I know that I did not go for a fresh one). காந்தியின் குடும்பம் வைசியர் பிரிவு. கழுத்தில் துளசி மாலை அணிவது கட்டாயம். “நான் இங்கிலாந்து போக முடிவு செய்தவுடன், துளசி மாலையை கழற்றிவிட்டேன்”. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும் துளசி மாலையை அணியும் பழக்கத்தை காந்தி கைவிட்டு விட்டார். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

காந்தி 150  ‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்

காந்தி 150 ‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்

நான்கு வேதங்கள், உபநிஷத்துகள், புராணங் கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களே இந்து மதத்தின் அதிகாரம் படைத்தவை. இவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதே பாமர இந்துக்களின் நம்பிக்கை. இவைகளை ‘மாற்றவே முடியாது’ என்போரே ‘சனாதனிகள்’ (மாற்றவே முடியாது என்று நம்புவோர்) காந்தி தன்னை சனாதனி என கூறிக் கொண்டார்.  அப்படி கூறிக் கொண்டே “சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி என்னை யாரும் – எனது கருத்துகளிலிருந்து மாற்றிவிட முடியாது” என்று கூறினார். “எனது குழந்தைப் பருவத்தில் புனித நூல்களின் கருத்துகள் எனக்கு வாழ்க்கை யில் பெரிதும் உதவும் என்று கருதினேன். ஆனால் வேதங்களின் கருத்துகள் எனது வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கவில்லை. (The Vedas could not supply that need). “எனக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை உண்டு; ஆனால் அவைதான் இறுதியானவை. கடவுளால் சொல்லப்பட்டவை என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்றார். அப்படியானால் இறுதியான அதிகாரம் படைத்த...

காந்தி 150 கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

காந்தி 150 கோயில் தரிசனத்தை விரும்பாதவர்

அருகே உள்ள கோயில்களுக்குச் சென்று ‘கடவுளை’ வணங்குதல்; தங்களுக்கு விருப்பமான கடவுளை வணங்குதல் – இவையெல்லாம் இந்துக்களின் வழிபாட்டு முறை. காந்தியின் வரலாற்றை அண்மையில் எழுதியுள்ள ஜோசப் லேலிவெல்ட் (Joseph Lelyveld) “காந்தி கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவரல்ல” என்று எழுதியிருக் கிறார். அது மட்டுமல்ல, ‘காந்தி புரோகிதர்களின் அதிகாரத்தை ஏற்கக்கூடிய இந்து அல்ல’ என்றும் அவர் கூறுகிறார். இது குறித்து தனது சுயசரிதையில் காந்தி இவ்வவாறு கூறுகிறார்: ‘வைசிய குடும்பத்தில் பிறந்ததால் நான் அடிக்கடி கோயிலுக்குப் போக வேண்டி யிருந்தது. ஆனால் கோயில்கள் என்னை ஈர்க்கவில்லை. அங்கே நடக்கும் ஆடம்பரத் திருவிழாக்களையும் பகட்டு வெளிச்சங்களையும் நான் விரும்பவில்லை. கோயிலுக்குள் ‘ஒழுக்கக் கேடுகள்’ நடக்கின்றன என்ற செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகின்றன. எனவே அங்கே போவதற்கு எனக்கு ஈடுபாடோ விருப்பமோ வரவில்லை. கோயில்களுக்குப்போய் எனக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை” (I could gain nothing from the haveli temple)...

காந்தி 150 ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்க்கு தடை போட்டார்

காந்தி 150 ஆசிரமத்துக்குள் ஒரே ஜாதி திருமணத்க்கு தடை போட்டார்

சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியின் மகன் இராமதாஸ் திருமணம் நடந்தது. (ராமதாஸ் காந்தியின் ஜாதிக்குள் வேறு உட்ஜாதிப் பிரிவைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்) அந்தத் திருமண நிகழ்வின்போது காந்தியின் பேச்சு: “இப்போது நடந்து முடிந்துள்ள இத் திருமணம்தான், இந்த ‘ஆஸ்ரமத்தில்’ ஒரே ஜாதிக்குள் நடக்கும் கடைசி திருமணமாக இருக்க வேண்டும். ஜாதி கடந்த திருமணங்களை நடத்துவதில் இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். காரணம், இந்த சீர்திருத்தத்தை முன்னெடுப்பது ஆஸ்ரமத்துக்கு வெளியே உள்ள மக்களுக்கு கடினமானது. ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களை கைவிட வேண்டும் என்பதே இந்த ஆஸ்ரமத்தின் விதிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் பல்வேறு உள் ஜாதிப் பிரிவினரிடையே நடக்கும் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் (The rule should be on the part of the Ashramam to discountenance marriage between the parties of the some caste and to encourage those...

காந்தி 150 ஜாதி-மத மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்

காந்தி 150 ஜாதி-மத மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்

  காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ஹென்னிபோலர் என்ற யூதருக்கும் – மில்லிகிரகாம் டவுன்ஸ் என்ற ஸ்காட்லாந்து கிறித்துவப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். காந்தியின் ஜோகன்ஸ்பர்க் நகரி லுள்ள இல்லத்தில் இந்த தம்பதிகள் ஓராண்டு காலம் காந்தியுடன் தங்கியிருந்தனர். பிறகு காந்தி, தனது குடும்பத்துடன் ஃபோனிக்ஸ் நகரத்துக்கு குடியேறியபோது இந்த தம்பதி யினரும் அந்த நகரத்துக்கே குடியேறினர். இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். “தங்களுக்கிடையிலான உறவில் மதங்கள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அவை தேவையற்றது என்றே கருதினர். திருமதி போலர் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். போலர் ஒரு யூதர். இருவருக்கும் பொதுவான மதம் – ஒழுக்கம் என்ற மதமே” (Their comman religion was the relgion of ethics) என்று எழுதினார் காந்தி. தன்னுடைய மகன் இராமதாஸ், தனது ஜாதிக்கு வெளியே வேறு ஒரு உட்ஜாதியில் திருமணம் செய்து கொள்ள காந்தி அனுமதித்தார்....

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரி கோவை கழகம் காவல்துறையில் மனு

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்று அரசாணை உள்ளது. எனவே அந்த அரசாணையை அரசு அதிகாரிகள் முறையாக காப்பாற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  5.10.2019  அன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும்  கழகத் தோழர்கள்  நிர்மல், வெங்கட், கிருஷ்ணன், இயல் ஆகியோர் மனு கொடுத்தனர். பெரியார் முழக்கம் 10102019 இதழ்

2021க்குள் முஸ்லிம்-கிறித்துவர்கள் ஒழிக்கப்படுவார்கள்: பா.ஜ.க. தலைவரின் ‘தேச பக்தி’ப் பேச்சு

2021க்குள் முஸ்லிம்-கிறித்துவர்கள் ஒழிக்கப்படுவார்கள்: பா.ஜ.க. தலைவரின் ‘தேச பக்தி’ப் பேச்சு

மதத்தின் பெயரால் நடத்தப்படும் கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்தக் கோரி திரைத் துறை, கலைத் துறையைச் சார்ந்த 42பேர் மோடிக்கு கடிதம் எழுதியதால் அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் ‘தேச பக்தர்கள்’ எப்படி பேச வேண்டும்? இப்படித்தான்! டிசம்பர் 31, 2021க்குள் இந்தியாவிலிருந்து முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராஜேஸ்வர் சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் “இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களையும் ஒழித்து விடுவோம்; இது நாங்கள் எடுத்துள்ள உறுதி” என்றும் அவர் பேசியுள்ளார். மேற்கு உ.பி.யில் வாழும் இவர் தொடர்ந்து இனவெறுப்பு இன அழிப்புக் கருத்துகளைப் பேசி வருபவர். ‘லவ் ஜிகாத்’ அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் இவரைத் தான், மீண்டும் “தாய் மதம் திரும்புதல்” என்ற இயக்கத்துக்கு  ஆர்.எஸ்.எஸ். தலைவராக நியமித்தது. ‘தர்ம ஜக்ரான் சமிதி’ என்ற அமைப்பின்...

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும்  7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

காந்தி 150ஆவது பிறந்த நாளிலும் 7 தமிழர்கள் விடுதலைக்குத் தடை ஏன்?

பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி சுமார் 400 நாட்கள் ஓடிவிட்டன. அதுவும் உச்சநீதிமன்றம் தமிழக அமைச்சரவைக்கு  அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று தெளிவாக்கிய பிறகு அமைச்சரவை எடுத்த முடிவு அது. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் உடன்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது. தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தன்னிச்சையாக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட அனுமதித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநருக்கான உரிமைஅமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுவது மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஆளுநரின் முடிவை நிறுத்தியது. அதற்குப் பிறகு தி.மு.க. அமைச்சரவை கூடி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தபோது ஆளுநர் பாத்திமா பீவி அதற்கு ஒப்புதல் வழங்கினாரே தவிர, தற்போது ஆளுநர் செய்ததுபோல் கிடப்பில் போடவில்லை. காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் 617 சிறைவாசிகளை விடுதலை செய்ய...

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

தமிழகம் தழுவி கழகம் ஆர்ப்பாட்டம் கல்வி நகலைக் கிழித்து கழகத்தினர் கைது

காமராசர் நினைவு நாளான அக்.2 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகலைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தித் தொகுப்பு: சென்னை : தேசிய கல்விக் கொள்கையின் நகல் கிழிப்புப் போராட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் காமராசர் நினைவு நாளான அக். 2ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் நடந்தது. காமராசர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்துடன் கல்விக் கொள்கை நகலை கிழித்து எறிந்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெண் தோழர்கள் உள்ளிட்ட 70 தோழர்கள் கைதானார்கள். சிந்தாதிரிப் பேட்டையில் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டனர். அங்கே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் புதிய கல்வித் திட்டத்தின் ஆபத்துகளை...

கோவையில் 2019 டிசம்பர் 15 – நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 – நீலச் சட்டைப் பேரணி

கோவையில் 2019 டிசம்பர் 15 – நீலச் சட்டைப் பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்வைத்து, எதிர்வரும் 2019 டிசம்பர் 15 ஞாயிறு அன்று கோவை மாநகரில் நீலச்சட்டைப் பேரணியும், ஜாதி ஒழிப்பு மாநாடும் நடத்துவதென 20-10-2019 ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கழகத் தோழர்களும், ஜாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும், நீலச் சட்டையோடு பேரணியிலும் மாநாட்டிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டு, ஜாதி ஒழிப்புக்கு வலுசேர்க்க, உடனே திட்டமிடுமாறு உரிமையுடன் வலியுறுத்துகிறோம்   கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா,  திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, திருக்குறள் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்

தந்தை_பெரியார்_பிறந்தநாள்_விழா, #திருக்குறள்_மாநாடு_விளக்கப்_பொதுக்கூட்டம்.. நாள்: 12.10.2019 மாலை 5 மணி இடம்: அம்பத்தூர், முருகன் கோவில் அருகில் சிறப்புரை: #தோழர்_கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் #தோழர்_பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி #தோழர்_திருமுருகன்_காந்தி ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம் #தோழர்_குடந்தை_அரசன் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி

திருப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப்பிரச்சாரம் !

திருப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப்பிரச்சாரம் !

திருப்பூரில், பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரம் ! பறையிசையுடன்………. நாள் : 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ! தெருமுனை பிரச்சாரம் நடைபெறும் இடங்கள் : 1)கொங்கணகிரி 2)பாரதிநகர் 3)சாரதா நகர் 4)கிருஷ்ணா நகர் 5) மாஸ்கோநகர் நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் திருப்பூர் மாவட்டம்.

கழக ஏடுகளுக்கு நன்கொடை

கழக ஏடுகளுக்கு நன்கொடை

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வடசென்னை கழக  இணையர்கள் தினகரன்-ஜெயந்தி ஆகியோர் குழந்தைப் பிறந்த மகிழ்வாக கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.10,000/-த்தை பெரியார் பிறந்த நாளான செப். 17 அன்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 03102019 இதழ்

பெரியார் யுவராஜ்-லீலாவதி  ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளரும் கழக செயற்பாட்டாளருமான பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-சடங்கு-தாலி மறுப்பு மணவிழா, செப். 22, 2019 அன்று மயிலாடுதுறை சோழம்பேட்டை கே.ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ந்தது. நாகை மாவட்ட கழகச் செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கோவை கழகத் தோழர் இசைமதி – பெண்ணுரிமைப் பாடல் பாடினார். கோவை கழக செயல்பாட்டாளர் நிர்மல்குமார், கழகத் தோழர் இசைமதி ஆகியோர் ஜாதி மறுப்பு மணவிழாவை பொதுக் கூட்ட மேடையில் நடத்திக் கொண்டனர். தோழர் இசைமதியின் சகோதரியே லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கையை உறவாக்கிக் கொள்ளும் பண்பாட்டுப் புரட்சியை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிகழ்த்தி கழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கோவையிலிருந்து தனி...

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

வீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்

17.09.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாளில் மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரைப் பயணம் சமத்துவபுரத்தில் காலை 10 மணிக்கு  தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். பயணம் சமத்துவபுரம், மல்லிகுந்தம், மேச்சேரி, நங்கவள்ளி, குஞ்சாண்டியூர், சுஊ பிளாண்ட், ராமன் நகர், புதுச் சாம்பள்ளி, மேட்டூர் சுளு, தேசாய் நகர், சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டிணம், காவேரி கிராஸ், மாதையன் குட்டை, புதுக் காலனி, பெரியார் நகர், தூக்கணாம்பட்டி, காவேரி நகர், சின்ன பார்க், பாரதிநகர், குமரன் நகர், பொன்னகர், ஆஸ்பத்திரி காலனி, ஒர்க் ஷாப் கார்னர், பெரியார் பேருந்து நிலையம், மேட்டூர் நகர படிப்பகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் கொடி யேற்று விழாவாகவும் இரு சக்கர வாகன பேரணியாகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கழகப் பொறுப்பாளர்களும் தோழர் களும் சிறப்பாக நடத்தினார்கள். கொடியேற்று...

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மக்கள் பேராதரவோடு நடந்த திருப்பூர், கோவை பரப்புரை

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பிரச்சாரப் பயணத்தில் 4 நாட்களிலும் பெண் தோழர்கள் துண்டறிக்கை கொடுப்பது கடைகளில் வசூல் செய்வது என்று சிறப்பாக செய்தார்கள், குறிப்பாக, பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளிடம் கருத்துகளை அதிகம் கொண்டு சேர்க்கப்பட்டது, திருப்பூர் அருள்புரம் பகுதி இந்து முன்னணி அதிகம் உள்ள பகுதி அங்கு நிறைய பேர் நிகழ்ச்சியை கேட்டார்கள்; புத்தகங்களும் வாங்கி சென்றார்கள், கோவை, செட்டிபாளையம், பனப்பட்டி, புதிய பகுதி எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நிகழ்வு நடந்தது, உடுமலை பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பயணம் செய்வேரிடம், ஒவ்வொரு பேருந்திலும் நிர்மல்குமார் கருத்துகளை சொல்ல தோழர்கள், முனியப்பன், கிருஷ்ணன் இருவரும் நிதி வசூல் செய்தார்கள். நல்ல வரவேற்பு இருந்தது 1 மணி நேரத்தில் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒரு ரூபாய் வசூல் செய்தார்கள், காங்கேயம் பேருந்து நிலையத்தில் நிகழ்வு நடக்கும் போது இந்து முன்னணியைச் சேர்ந்த 4 – 5 பேர் வந்து வீடியோ எடுத்து...

அண்ணா பல்கலையில் ‘பகவத் கீதை’ ஏன் நுழைகிறது?

அண்ணா பல்கலையில் ‘பகவத் கீதை’ ஏன் நுழைகிறது?

இந்திய தத்துவத்தில் கருத்து முதல்வாதம் என்பது வெறும் ஆன்மீக வாதமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக சமூகத்தில் நிலவிய பிற்போக்கு கருத்துகளை, குறிப்பாக வர்ணா சிரமத்தை-கருத்து முதல்வாதம் வலுவாக தூக்கிப் பிடித்தது. வர்ணாசிரமத்தை -சமூகத்தின் பிரிக்க முடியாத அம்ச மாக நிலைநாட்டிட கருத்து முதல்வாதமும் ஏற்றத்தாழ்வான சமூகக் கோட்பாடுகளை முன்வைத்த சட்டக் கோட்பாடுக ளான மனுஸ்மிருதியும் அர்த்தசாஸ்திரமும் ஒன்றுக் கொன்று துணை போயின. அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு “தத்துவம்” என்ற பெயரில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனை எடப்பாடி அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பது தெளிவு. திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி எனும் தகுதியை அ.தி.மு.க. வெகு நாட்களாகவே இழந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாற்றிவிடுவார்களோ என கருதும் அளவிற்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் கூட்டணியின் சரணாகதி வேகமாக அரங்கேறி வருகிறது. இந்த சரணாகதியின் தற்போதைய நிகழ்வுதான்...

நகல் கிழிப்பு ஏன்? சென்னையில் ஒரு நாள் பரப்புரைக் கூட்டங்கள்

நகல் கிழிப்பு ஏன்? சென்னையில் ஒரு நாள் பரப்புரைக் கூட்டங்கள்

கல்விக் கொள்கை நகல் கிழிப்புப் போராட்டத்தை விளக்கி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் செப். 30 அன்று காலை முதல் இரவு வரை சென்னையில் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடந்தது. ஓட்டேரி, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, மேற்கு சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நடந்த பரப்புரை கூட்டங்களுக்கு முறையே தட்சிணாமூர்த்தி, சங்கிதா, இராஜி, ப. அருள், மனோகர், கரு. அண்ணாமலை தலைமை தாங்கினர். இரா. உமாபதி, அய்யனார், சுகுமார் கூட்டங்களில் உரையாற்றினர். நாத்திகன் பாடல்களைப் பாடினார். 22 தோழர்கள் பயணக் குழுவில் இடம் பெற்றனர். துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டன. பெரியார் முழக்கம் 03102019 இதழ்

உ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்

உ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்

உத்திரப் பிரதேசம் கோராக்பூர் மருத்துவமனை யில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவர் கஃபீல்கான் குற்றமற்றவர் என துறை ரீதியாக விசாரணை நடத்திய குழு அறிக்கை அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சுமார் 80-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த தனியார் நிறுவனம் தனது நிலுவைத் தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் பலியானதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் குழந்தைகளக் காப்பாற்ற தனது சொந்த பணத்தில் வெளியிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வந்து பல குழந்தைகளைக் காப்பாற்றி நற்பெயர் எடுத்த குழந்தைகள் மருத்துவர் கஃபீல்கான் ஆளும் பாஜக அரசால் கைது செய்யப்பட்டார். பணியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால்,...

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

28.9.2019 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக் கோட்டையை அடுத்த சிகரபள்ளி குமார் தோட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி  முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களை மாவட்டக் கழகச் செயலாளர் குமார் வர வேற்றுப் பேசினார். வாஞ்சிநாதன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர் தொடர்ந்து அலேசீபம் பழனி, நீலகிரி கிருஷ்ணன், உத்தனப்பள்ளி முனிராஜ், தாசனபுரம் சுப்பு, யூபுரம் மல்லேஷ் ஆகியோர் தங்கள் கருத்துக்களையும், கழக செயல்பாட்டு திட்டங் களையும் குறித்து கருத்துக்களை முன் வைத்தனர். அவரைத் தொடர்ந்து கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு இரத்தினசாமி கழகத்தின் நிலைப் பாடுகள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எழுச்சியுடன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும், பெரியாரியல் கொள்கைகளை விளக்கியும் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளை எடுத்துக் கூறியும்...

ஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா? முகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

ஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா? முகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள்

மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசுவதே ‘தேச விரோதம்’ – ‘ஆன்டி நேஷனல்’ என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடு கிறார்கள். இவர்கள் பேசும் ‘தேசபக்தி’ வரையறைக்குள் ஆர்.எஸ்.எஸ். வருகிறதா? மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசினாலே ‘தேச விரோதிகள்’ – ‘ஆன்டி இண்டியன்’ என்று எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ஓலமிடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மட்டுமே ‘தேச பக்தி’ கொண்ட அமைப்பு என்கிறார்கள். நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். என்ற ‘தேசபக்த’ நெருப்பில் புடம் போட்டு வந்தவர்கள் என்று பூணூலை உருவுகிறார்கள். உண்மையில் இவர்கள் பேசுகிற தேசபக்தி என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் தேசியக் கொடிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பதுதான். சரி, அந்த அளவுகோலின்படியாவது இவர்கள் தேச பக்தர்கள் தானா? இல்லை என்பதே இதற்கான பதில். இது குறித்து ஆய்வாளரும் எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி ‘டான்’ இதழில் எழுதிய கட்டுரையை ‘டெக்கான் குரோனிக்கல்’ ஏடு (செப். 29,...

‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ – ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது

‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ – ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது

நீட் தேர்வு – தகுதிக்கான தேர்வு என்றது மோடி ஆட்சி. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானத்தையும் கிடப்பில் போட்டார்கள். அனிதா உள்ளிட்ட மருத்துவராகும் கனவோடு படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மூன்று சகோதரி களின் உயிரை ‘நீட்’ பறித்தது. நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் நடந்தன. தவறான விடைகளைத் தந்து பிறகு சலுகை மதிப்பெண் வழங்கினார்கள். வடநாட்டில் நீட் தேர்வுக்கான பயிற்சி மய்யங்கள் தில்லுமுல்லு களை செய்து குறுக்கு வழி களில் தேர்ச்சி பெறும் மோசடி வித்தைகளை அரங் கேற்றுவதற்கு ‘நீட்’ பயன் பட்டது; பயன்படுகிறது. தமிழ்நாட்டிலருந்து நீட் தேர்வு எழுதுவதற்கு வெளி மாநிலங்களில் தேர்வு மய்யங்களை ஒதுக் கினார்கள். உடன் சென்ற தமிழ்நாடு பெற்றோர் சிலரும் வெளி மாநிலங்களிலே மாரடைப்பால் பிண மானார்கள். நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவச் செல்வங் களை உள்ளாடை வரை ‘சோதனை’ செய்து அவமதித்...

இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல

இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல

20.9.2019 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஒரே நாடு – ஒரே வரி – ஒரே தேர்வு – ஒரே கல்வி – ஒரே குடும்ப அட்டை – ஒரே பண்பாடு என்பதன் தொடர்ச்சியாக ஒரே மொழி என்ற ஒற்றை இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படும் நடுவண் ஆட்சி, இந்தியை ஒற்றை அடை யாளமாகத் திணிக்கத் தொடங்கி விட்டது. இந்தி எதிர்ப்பில் களம் பல கண்ட தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஒன்றுபட்டு எதிர்த்து வருவது பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியதாகும். அதுபோலவே இறை நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளிலும்,  அவர்கள் நடத்தும் வழிபாடுகளிரும் ஒற்றை இந்து பண்பாடாக பார்ப்பனியத்தால் திணிக்கப்படும் சமஸ்கிருத புரோகிதத்தைப் புறம் தள்ள வேண்டும் என்று இம்மாநாடு இறை நம்பிக்கைக் கொண்ட பார்ப்பனரல்லாதாரை கேட்டுக் கொள்கிறது. குழந்தைகளுக்கு...

ஆர்.எஸ்.எஸ். பாசிசத்துக்கு துணை போகிறார்: மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ். பாசிசத்துக்கு துணை போகிறார்: மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

சுமார் 50,000 பேர் கலந்துகொண்ட பேரணி இந்திய பிரதமர் மோடி அவர்களை டெக்ஸஸ் மாகாணத்தில் “Howdy Modi” (நலமா மோடி) என்ற நிகழ்ச்சியில் பாராட்டி கவுரவித்தது. இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றை பாஸ்டன் நகர மேயர் மார்ட்டின் வால்ஷ் நடத்தினார். பலரும் தம் கருத்துக்களை பகிர்ந்த அந்த அரங்கில் கீழ்க்கண்ட கருத்து ஒரு டெமோக்ரடிக் கட்சி உறுப்பினரால் முழங்கப்பட்டது. காணொளியில் வெளி வந்த அவரது உரையின் சில பகுதிகள். “கடந்த மாதம், டெக்சாஸின் எல்-பாஸோ நகரில் ஒரு வெள்ளை நிற வெறி பயங்கரவாதி 22 பேரைக் சுட்டுக் கொன்றான். தன் செயலுக்குக் காரணமாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது, நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்று தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டான். நியூசிலாந்தில் கோர தாண்டவமாடிய மனிதனோ, 2011இல் நார்வே நாட்டில் 77 பேர் கொல்லப்பட்ட செய்திதான் இந்த படுகொலை செய்ய தன்னைத்...

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அக்.2 ஆர்ப்பாட்டத்துக்கு தயாராவீர்! தோழர்களே!

அனைவருக்குமான கல்வி, சமத்துவத்துக்கான கல்வி பற்றிப் பேசியது எல்லாம் போதும்; சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அதையே பேச வேண்டுமா? அதைவிட தரமான கல்விதான் இப்போது முக்கியம் என்கிறது – புதிய கல்விக் கொள்கை. போதுமான மாணவர்கள் வராத பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு வேறு பள்ளிகளுடன் இணைத்து விட வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. இராஜகோபா லாச்சாரி பள்ளிகளை மூடிய அதே காலத்துக்கு மீண்டும் இழுத்துச் செல்கிறது, இந்தக் கல்விக் கொள்கை. 5ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு நடத்த வேண்டுமாம்; தேர்ச்சி பெறும் வரை அதே வகுப்பில் குழந்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டுமாம்; இந்தத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம்; இப்படிக் கூறுகிறது, இந்தக் கல்விக் கொள்கை. 1953இல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிச் சிறுவர்கள், பிற்பகலில் அரை நேரம் அவரவர் பெற்றோர் செய்த குலத் தொழிலை செய்ய உத்தவிட்டார் இராஜ கோபாலாச்சாரி. 5ஆம் வகுப்போடு மாணவர்களைப் பள்ளியிலிருந்து...

பழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்

பழனி முருகனுக்கே மொட்டை போடும் புரோகிதர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகம் கூடும் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோயில். அதிக வருமானம் வரக்கூடிய கோயிலும் கூட! இந்தக் கோயிலில் 32 பார்ப்பன அர்ச்சகக் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பூஜைகளையும் சடங்குகளையும் நடத்தி வருகின்றன. 32 பார்ப்பன அர்ச்சகர்கள் யார்? அவர்கள் பெயர் என்ன? முகவரி என்ன? என்பது குறித்து தங்களிடம் எந்தப் பதிவேடுகளும் இல்லை என்று கோயில் நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது பதில் அளித்துள்ளது. அருண்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவல்களைக் கேட்டார். இந்த 32 அர்ச்சகப் பார்ப்பனர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதற்கான அரசு ஆணைகளும் இல்லை. ஒரு அர்ச்சகர் முதுமை அடைந்து விட்டால் தனது குடும்பத்தின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு அவரே அர்ச்சகர் உரிமை வழங்கிவிடுகிறார். அர்ச்சகர் பதவி, பரம்பரை அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட...

அமெரிக்காவில் டிரம்ப்-மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன?

அமெரிக்காவில் டிரம்ப்-மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன?

இந்தியாவுக்கு விசுவாசமின்றி அமெரிக்காவிடம் மட்டுமே தேசப்பற்று காட்டுவோம் என்று உறுதிப் பத்திரம் தந்து, அமெரிக்க குடிமக்களாகப் பதிவு செய்த பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதிப் பிரிவினர் மோடிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்தினார்கள். மோடியின் பார்வையில் இவர்கள் ‘தேச விரோதிகள்’ என்றாலும் பார்ப்பனர்களாக இருப்பதால் தேசபக்தர்களாகி விடுகிறார்கள். இந்தக் கேள்விகளை எழுப்பி ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம். டிரம்ப் – மோடி பங்கேற்ற அமெரிக்காவின் ஹுஸ்டன், டெக்சாஸ் மாநிலங்களில் நடந்த பேரணி யில் (மக்கள் கூடுகை) 50,000 அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றதாக செய்திகள் வந்துள்ளன. டிரம்ப், மோடியின் அரசியல் கொள்கை ஒரு பகுதி அமெரிக்க இந்தியர்களுக்கு உற்சாகம் தரலாம். ஆனால் பெரும் பான்மை மக்களுக்கு நெருக்கடியை உருவாக்குவ தோடு அவர்களுக்கிடையே சமூகத்தில் பிளவுகளை கூர்மைப்படுத்தும் ஆபத்தும் அடங்கியுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும் பான்மையான அமெரிக்க இந்தியர்கள் யார்? அமெரிக்காவின் குடிமக்களாக தங்களை மாற்றிக் கொண்டவர்கள். அமெரிக்கக் குடிஉரிமைக்கு உரிமை...

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

மண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக!

தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வரும்.  வேலை வாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டுப் பண்பாட்டில் மூழ்கச் செய்யும் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது. இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு  வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக இருப்பதைத் தமிழக அரசு உணர வேண்டும் என்றும் மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. – பள்ளிபாளையம் மாநாட்டுத் தீர்மானம் பெரியார் முழக்கம் 26092019 இதழ்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகளைக் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள்  திருத்தி அமைத்தது. இந்தத் திருத்தத்தின் காரணமாக, வெளி மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிவாய்ப்புகளைப் பறிப்பதற்கு தமிழக அரசால் கதவு திறந்து விடப்படுள்ளது. இதன் காரணமாக கடந்த 2019, மே மாத இறுதியில் நடத்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 39 இடங்களைப் பிற மாநிலத்தவர்கள் பெற்றுவிட்டனர். அதுபோலவே  கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பதவிகளிலும் இதுவே நடந்தது. மின்னணு தொடர்பியல் துறைக்கான விரிவுரையாளர்களுக்கான 36 பதவிகளில் 31ஐயும், இயந்திரப் பொறியியல் துறைக்கான விரிவுரையாளர் பணிகள் 67இல் 46 பணிகளையும் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் பறிக்க வழிவகுக்கும் 26.11.2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது....

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

நடுவண் அரசுப் பணிகளுக்கு மாநில அளவிலே தேர்வு நடத்துக!

தமிழ்நாட்டில் நடுவண் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் என்பதோடு,  வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்திலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டு நடந்த பணியாளர்த் தேர்வில் 116 வேலை வாய்ப்புகளில் 15 மட்டுமே கிடைத்த நிலையில், குஜராத்தியர்  புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் குஜராத் மாநில அரசும் தன்னை இணைத்துக் கொண்டு குஜராத்திகளுக்கே வேலை வழங்கக் கோரியது. அதுமட்டுமின்றி குஜராத்தில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளை குஜராத்தியருக்கு...

காமராசர் நினைவு நாளான அக்.2இல்  புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

காமராசர் நினைவு நாளான அக்.2இல் புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் கழக மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானம். ஆரியர்களின் வேத காலத்திலிருந்தே, பெரும்பான்மை உழைக்கும் மக்களான ‘சூத்திர பஞ்சம’ மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை கல்வி உரிமை தடையின்றி கிடைக்கவும், உயர் கல்வியை நோக்கி அவர்கள் முன்னேறிச் செல்வதற்குமான இலகுவான சமூகச் சூழலை உருவாக்கி சமூக நீதி அடிப்படையிலான கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதை முழுமையாக சிதைத்து வெகு மக்களிடம் கல்வி சென்று அடைந்து விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் தடைகளை எழுப்பி கல்வி அனைவருக்கும் பரவிடாது தடுக்கவே புதிய கல்விக் கொள்கை வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்க உரையிலேயே இது வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எல்லோருக்கும் கல்வி – சமமான கல்வி வழங்குவதிலேயேதான் நாம் முயற்சித்தோமே தவிர, அதை விட முக்கியமான ‘தரமான கல்வி’ பற்றி கவலைப்படவே இல்லை என்று...

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

‘சமூக நீதியைப் பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தைத் திணிக்காதே’ என்ற முழக்கங்களை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கான பரப்புரைப் பயணக் குழுக்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒன்று சேர்ந்தன. சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர், கோபி, மேட்டூரிலிருந்து கழக செயல்பாட் டாளர்கள், பெண்களும் ஆண்களும் மக்களைச் சந்தித்து தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் வேலை, கல்வி உரிமைகள் பறி போகும் ஆபத்துகளை எடுத்து விளக்கினர். கலை நிகழ்வுகள், மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள், நூல்கள் வழியாக மக்களிடம் கருத்துகள் கொண்டு போய் சேர்க்கப் பட்டன. கட்சிகளைக் கடந்து கிராமங் களிலும் நகரங்களிலும் மக்கள் பேராதரவுடன் இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. செப். 20ஆம் தேதிபிற்பகல் பயணக் குழுவினர் பள்ளிப்பாளையம் நோக்கி வரத் தொடங்கினர். நேரு திடலில் நிறைவு விழா மாநாடு மாலை 6 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்....

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு அவர்களின் கண்டன முழக்கங்கள் எழுப்ப அதை தொடர்ந்து கழக தலைவர் அவர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெரியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து நம் தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெரிய பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில்...

திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !  தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !

திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் -2 தேர்வில் தமிழ் மொழித்தாள் நீக்கம் !* தமிழக அரசின் இந்த அறிவிப்பு *தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை முற்றிலும் பறிக்கும் சூழ்ச்சித் திட்டம்* ! *திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !* *தமிழ் மொழித்தாள் நீக்க அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசுக்கு வலியுறுத்தல் !* தமிழக அரசால் தமிழ்நாட்டில் பணிபுரிவதற்காக பணியாளர்களைத் தெரிவு செய்ய தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது நடைபெற உள்ள குரூப்- 2 தேர்வில் தமிழ் மொழித்தாளை நீக்குவதாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் மத்திய அரசுப் பணிக்காக தமிழ்நாட்டில் பணி புரிவதற்கு, தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கே அந்த வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் மத்தியில் பரப்புரை செய்து போராட்டங்கள் நடத்தி வரும் இச்சூழலில் தமிழக...

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் நகர திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம் தோழர் முத்துலட்சுமி அவர்கள் வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிபாளையம் மாநாட்டு தீர்மானத்தின் படி புதிய கல்வி கொள்கை 2019 வரைவு அறிக்கை கிழித்தெரியும் போராட்டத்தை மாவட்ட தோழர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து அக் 2ஆம் தேதி சிறப்பாக நடத்துவது எனவும் அய்யா பெரியாரின் 141 வது பிறந்த நாள் விழாவை  நகரம் முழுவதும் கொடியேற்று விழாவாக அக் 9ஆம் தேதி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தோழர்கள் முத்துலட்சுமி, முத்து, நீதிராசன், முகில்ராசு, துரைசாமி, அகிலன், அய்யப்பன், தனபால், யாழினி, யாழிசை ஆகியோர் கலந்து கொண்டனர்

தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் பொதுக்கூட்டம் மேலூர் மதுரை 23092019

தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் பொதுக்கூட்டம் மேலூர் மதுரை 23092019

மேலூர் மண்ணில் பெரியார் கொள்கையை பரப்பும் பொதுக் கூட்டம்.. தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் .. செப்டம்பர் 23 மாலை 6 மணிக்கு துவங்குவதாக இருந்த பொதுக்கூட்டம் மழை காரணத்தால் நாளை 4 மணிக்கே மேலூரில் கலை நிகழ்ச்சிகளோடு – பொதுக்கூட்டம் துவங்கியது திருநங்கை செயற்பாட்டாளர் அன்பு அம்மா பாரதி கண்ணம்மா… பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்கள் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களுக்கும் கூட்டத்திற்க்கு முக்கிய பங்காற்றிய தோழர் பக்ருதீன் அவர்களுக்கும் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நினைவு பரிசை வழங்கி சிறப்பித்தார்கள் செய்தி மணி அமுதன்