Author: admin

கிரிக்கெட்டில் சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு

கிரிக்கெட்டில் சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு

உ.பி. தேர்தலில் மக்கள் செல்வாக்கை இழந்துள்ள பா.ஜ.க. ஆட்சி, இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி, இந்துக்கள் வாக்குகளை மத அடிப்படை யில் வாரிக் கொள்ளலாம் என்ற வழமையான தந்திரத்தில் இறங்கியிருக்கிறது. டி-20 கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் – இந்தியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக ஜம்மு-காஷ்மீர், உ.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உ.பி., ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் (ரயயீய) பாய்ந்துள்ளது. 2 ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கலாம். இராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியும், ஒரு பெண் ஆசிரியை பதவி நீக்கம் செய்து கைது செய்திருக்கிறது. அனைவருமே இஸ்லாமியர்கள். நடப்பது ஒரு விளையாட்டுப் போட்டி. இதில் இந்தியாவிலுள்ள அனைவருமே இந்தியர் தான் வெற்றி பெற வேண்டும் என்ற மன நிலையில் கட்டாயம் இருக்க வேண்டும். மாற்றி சிந்திப்பது, தேசத் துரோகம் என்றால், தே பக்தியை இவர்களே கேலிப் பொருளாக்குகிறார்கள்...

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகமே, விநாயகர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்து

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகமே, விநாயகர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்து

பொது இடங்களில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்டுவது கூடாது என்று அரசு ஆணைகள் தெளிவாக கூறுகின்றன. உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு உயர்நீதி மன்றமும் பல வழக்குகளில் இதை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அண்மையில் கூட சென்னை உயர்நீதி மன்றம், பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கு மேல் எந்த பொது இடங்களிலும் எவரும் சிலைகள் வைக்க கூடாது என்றும் ஒரு தீர்ப்பை அண்மையில் வழங்கியிருக்கிறது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இது போன்ற கோவில்கள் கட்டப்படுவது என்பது நிச்சயமாக சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். ‘தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்’ (கூயஅடையேனர கூநயஉhநசள நுனரஉயவiடிn ருniஎநசளவைல) என்ற அரசு பல்கலைக்கழகம் ஒன்று சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இது 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆசிரியர் பணிகளுக்காக, கல்வியியல் கல்லூரிகளை இணைத்து நடத்தப்படுகிற பல்கலைக்கழகம் இது. இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் மிகப்பெரிய விநாயகர் கோவில் ஒன்று இப்போது மிக வேகமாக கட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது....

தலையங்கம் தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்

தலையங்கம் தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்

இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மரக்காணத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் மட்டும் இப்போது அமல்படுத்தப்பட இருக்கிறது. பிறகு மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையோடு இணைத்து மதச் சாயம் பூச நினைப்பது முற்றிலும் தவறான பார்வை. இரண்டு திட்டங்களிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக இதுவும் மற்றொரு புதிய கல்வி கொள்கை என்பது சரியான கருத்து அல்ல. இரண்டிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிற நோக்கங்களே வேறு. புதிய கல்வி கொள்கையின் கீழ் தன்னார்வலர்கள் என்பவர்கள், பள்ளி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வெளியே முறை சாரா கல்வியை கற்பிக்கிற உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஊடுருவி கல்வியை தங்கள் வசப்படுத்திக் கொள்கிற வாய்ப்பு இருக்கிற காரணத்தினால், கல்வியாளர்கள் பலரும் எதிர்த்தார்கள், நாமும்...

அண்ணாமலையின் ‘திடீர்’ தமிழ் நாட்டுப் பற்று

அண்ணாமலையின் ‘திடீர்’ தமிழ் நாட்டுப் பற்று

அண்ணாமலை ‘வந்து விட்டார்’; ‘தமிழ்நாடு’ நாளை நவம்பர் 1ஆம் தேதி தான் கொண்டாட வேண்டும். அதுவே பிறந்த நாள், பெயர் வைத்த நாளை பிறந்த நாளாகக் கொண்டாடுவதா? என்று கேட்கிறார். தமிழ், தமிழ்நாடு உணர்ச்சி அண்ணாமலைக்குப் பீறிட்டு விட்டது போலும்! பிறந்த நாளுக்கு நாள், நட்சத்திரம், நாழிகை பார்த்து ஜாதகம் பார்க்க  வேண்டும் என்ற கட்சிக்காரர் ஆயிற்றே! அதனால் பிறந்த நாள் தான் இவர்களுக்கு முக்கியம். நோயுடன் சவலையாகப் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து முழுமையான குழந்தையாக மாற்றிய நாளை, பிறந்த நாளாக ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டால், அதற்கு நாள், நட்சத்திரம் எப்படிப் பொருந்தும் என்று தான் இவர்கள் கேட்பார்கள். ‘சனாதனம்’ அப்படித்தான் பார்க்கும். ஆனால்,  அரசியல் சட்டம் சூட்டிய ‘இந்தியா’ என்ற பெயரை இவர்கள் ஏற்க மாட்டார்கள். ‘பாரத்’, ‘பாரதியம்’, ‘பாரத தேசம்’ என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். எந்தத் தாய்க்கு மாநிலம் பிறந்தாலும்...

‘ஜூலை 18 – நவம்பர் 1’ முரண்பாடுகள் இல்லை! தமிழர் ஒற்றுமைக்கான குறியீடுகளை முன்னெடுப்பதே நோக்கம் சிறப்புத் தலையங்கம்

‘ஜூலை 18 – நவம்பர் 1’ முரண்பாடுகள் இல்லை! தமிழர் ஒற்றுமைக்கான குறியீடுகளை முன்னெடுப்பதே நோக்கம் சிறப்புத் தலையங்கம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு – மொழி வழி மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் முதல் தேதியை ‘தமிழ்நாடு’ நாளாக பின்பற்ற வேண்டும் என்று முடிவு ஏற்கனவே செய்து, அந்த நாளில் தமிழ் நாட்டுக்கான கொடி ஒன்றை ஏற்ற கடந்த ஆண்டு முடிவு செய்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான ஆட்சி, நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவித்தது. விழா நடத்தியது. ஆனாலும், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்தது எடப்பாடி. பழனிச்சாமி ஆட்சி. இந்த ஆண்டு இதே போன்று நவம்பர் முதல் நாளை ‘தமிழ்நாடு’ நாளாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முடிவு செய்தது. தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தது. இந்த நிலையில் நவம்பர் 1, மொழி வழி மாநிலம் பிரிந்தபோது தமிழ்நாட்டுக்கு ‘சென்னை மாகாணம்’ என்கிற பெயர் இருந்தது. பெரியார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

*திராவிடர்* *விடுதலைக்* *கழக* *தோழர்களின்* *கவனத்திற்கு* தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 , 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது. இதனை போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழக பொருளாளர் , மற்றும் அமைப்பாளர் , பரப்புரை செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளிடப்படுகிறது. வரும் வாரங்களில் மீதம் உள்ள மாவட்டத்திற்கான சுற்றுப்பயண விவர அறிக்கை வெளியாகும் *தலைமைகழக* *பொறுப்பாளர்கள்* *கலந்து* *கொள்ளும்* *கலந்துரையாடல்* *கூட்ட* *பயண* *விபரம்* *18.11.2021* . *வியாழக்கிழமை*...

“தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்”  – கழகப் பொதுச் செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அறிக்கை.

“தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்” – கழகப் பொதுச் செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அறிக்கை.

“தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்” – கழகப் பொதுச் செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அறிக்கை. இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மரக்காணத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் மட்டும் இப்போது அமல்படுத்தப்பட இருக்கிறது. பிறகு மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையோடு இணைத்து மதச் சாயம் பூச நினைப்பது முற்றிலும் தவறான பார்வை. இரண்டு திட்டங்களிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக இதுவும் மற்றொரு புதிய கல்வி கொள்கை என்பது சரியான கருத்து அல்ல. இரண்டிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிற நோக்கங்களே வேறு. புதிய கல்வி கொள்கையின் கீழ் தன்னார்வலர்கள் என்பவர்கள், பள்ளி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வெளியே முறை சாரா கல்வியை கற்பிக்கிற உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தன்னார்வலர்கள்...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021 அன்று காலை 11 மணியளவில், ஈரோடு பிரியாணிபாளையத்தில் நடைபெற்றது. சென்னிமலை கார்மேகம் வரவேற்பு கூறினார். யாழினி, யாழிசை ஆகியோர் பகுத்தறிவுப் பாடல் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பற்றியும், கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும் திருப்பூர் சந்தோஷ், ‘இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்து, நீட் தேர்வின் பாதிப்புகள், மதவாத சக்திகளின் சமூக சீர்கேட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், அவற்றிற்கு எதிர்வினையாற்ற ஒரு வலுவான, சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட மாணவர் அமைப்பின் தேவை’ குறித்து தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு திருப்பூர் சந்தோஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, சென்னை, திருப்பூர், குமாரபாளையம், மேட்டூர், சேலம், சென்னிமலை, அன்னூர், பல்லடம், மேச்சேரி, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். அதன் மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது....

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் கூட அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுவதும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கலப்புத் திருமணம் புரிந்தோர் தங்கள் வாரிசுகளுக்கு ஏதேனும் ஒரு ஜாதி சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு செல்லும் இடங்களில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பின் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்த அஞ்சன் குமார் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, அவருடைய சான்றிதழ் சரிபார்ப்பில் அவருடைய தாயாரின் ஜாதி அடிப்படையில் எஸ்டி ஜான்றிதழ் பெற்றிருந்தபோதும், அவருடைய தந்தை பிற்படுத்தப்பட்டவர் என்பதால் இந்த ஜான்றிதழ் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 2006...

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

० பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ० தமிழ்நாட்டு அரசின் கவனத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அறவியலுக்குரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் ०००० இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் நிகழ்ந்திடும் சம்பவங்கள்தாம் அவை.. தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் 19 9 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் உரையாற்றியவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆவார்கள் அந்த உரையில் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்களளித்தும் உரையாற்றியிருந்தார்.. வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு வார்ப்பாக இங்கு செய்து...

1. கும்பகோணம் போராட்டம்

1. கும்பகோணம் போராட்டம்

உரிமைப் போராட்டத்தை நிறுத்தவேண்டுமென்று, தஞ்சையில் 28.12.1948ம் நாள் நிர்வாகக் கமிட்டி முடிவு செய்தது. அதையொட்டி 29-12-1948ல் தலைவர் பெரியாரவர்கள் கொடுத்த அறிக்கை:- கும்பகோணத்தில் சர்க்காரால் திராவிட கழகப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக அநீதியாகப் போடப்பட்ட 144-அய் எதிர்த்து நடத்திய போராட்டத்தை 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கடுமையான தடியடிப் பிரயோகத்தால் நிறுத்த சர்க்கார் முயற்சி செய்து பார்த்தும், அம்முயற்சி அவர்களுக்கும் பயன்படாமல் மேலும் மேலும் போராட்டம் மக்களுக்குள் வேகத்தையும் உணர்ச்சி யையும், ஊக்கத்தையும் கொடுத்துத் தொடர்ந்து நடந்து வந்ததால் 26-ந் தேதி முதல் சர்க்கார் தடியடியை நிறுத்திக் கொண்டதோடு உத்திரவை எதிர்த்தவர்களையும் எதிர்ப்புக்கு ஏற்பட்ட சட்ட நிபந்தனைப்படி அரஸ்டு செய்யாமலும் விட்டு விட்டதால். இனி அங்கு போராட்டம் தேவை இல்லை என்று கருதி போராட்டத்தை நிறுத்தி விடலாம் என்று 28-ந்தேதி கூடிய திராவிட கழக மத்திய நிர்வாகக் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. நாளையோடு நிறுத்தப்பட்டுவிடும்.  ஆகவே கும்பகோணத்துக்கு வெளியூரிலிருந்து வந்த தொண்டர்கள் அருள்கூர்ந்து...

1. உண்மை இராமாயணம்

1. உண்மை இராமாயணம்

காட்சி – 23 (அந்தப்புர அலங்கார மண்டபத்தில் கைகேயி உல்லாசமாய் உலாவிக் கொண்டிருக்க, மந்தரை ஆத்திரத்தோடு மாடியிலிருந்து இறங்கி வந்து) மந்தரை : அம்மா! இனிக் கொஞ்ச நேரத்திற்குள் வரப்போகும் பேராபத்தை உணராத போங்காலத்திற்குள்ளான கைகேயி! என்ன நீ கவலையற்று உல்லாசமாக உலாவுகிறாயே. சிறிது நேரத்தில் உன் தலைமேல் இடி விழப்போகிறது! நீ ஒழிந்தாய்! உன் மகன் அழிந்தான்! உன் நாடு நகரம் எல்லாம் பறிபோகப் போகிறது! கைகேயி! நான் என்ன சொல்லுவேன்! (அழுகிறாள்) கைகேயி : என்னடி மந்தரை உளறுகிறாய்! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? புத்தி சுவாதீனம் இல்லையே? சற்று முன் மாடிக்குப்போகும்போது நல்ல புத்தியோடு இருந்தாயே! இது என்ன அதிசயமாய் இருக்கிறது! மந்தரை :  மதிகெட்ட மனுஷியே! எனக்கொன்றும் பைத்தியம் இல்லை. உனக்கு ஆபத்து வந்துவிட்டது. நீயும் “உன் மகனும்” உன் செல்வாக்கும் அழிந்து ஒழிந்தீர்கள். கைகேயி : சீ! வாயை மூடு. பிசாசே! உளராதே. புத்திகெட்டவளே! தசரதச்...

1. தோழர்களே !

1. தோழர்களே !

தோழர்களே, 1947-ம் ஆண்டு  தொடங்கிவிட்டது யாருடைய விருப்பு  வெறுப்பையும், எவருடைய தயவு தாட்சண்யத்தையும், எப்படிப்பட்டவருடைய போக்குவரவையும் இலட்சியம் செய்யாமல் ஆண்டுகள் வருவது நடந்துகொண்டே இருக்கின்றது என்பதானது நம் இயக்கத்தின்  நடைமுறையை ஞாபகப்படுத்துகிறது. ஜாதி, மதம், கடவுள், சமுதாயம், அரசியல்  துறைகளில் புரட்சி மாறுபாடுகள் ஏற்படவேண்டும் என்று கருதி அதாவது இவைகளில் உள்ள நடப்புகள் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்று இல்லாமல் அடியோடு, அழித்து ஒரே தன்மையானதாக ஆக்கப்படவேண்டும் என்று போராடத் தோன்றிய ஒரு இயக்கம் சுயமரியாதை இயக்கமாகும். இந்த நாட்டின் தீண்டாமை ஒழிப்புச் சங்கம் இருக்கலாம் ஆனால் அது ஜாதியை ஒழிக்கச் சம்மதிக்காது, ஜாதி ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால் அது மதத்தை ஒழிக்க சம்மதிக்ககாது, அதுபோலவே இந்த நாட்டில் மதம் ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால் அது மதத்துக்கு ஆதாரமான கடவுள்களையும், கடவுள் சம்மந்தமான முரண்பட்ட உணர்ச்சிகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க சம்மதிக்காது, கடவுள் சம்பந்தமான  முரண்பட்ட தன்மை மூடநம்பிக்கை ஆகியவைகளை ஒழிக்கும்...

1. வீர வாலி

1. வீர வாலி

“தோழர்களே, இங்கு நடித்த வீரவாலி கதை நடிப்பைக் கண்டீர்கள். இதைப் பற்றி தலைமை வகித்தவன் என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இந்தக் கதை இராமாயணக் கதையில் வரும் ஒரு பாகத்தை யொட்டி செய்யப்பட்ட கற்பனைச் சித்திரமாகும். இராமாயணமே ஒரு கற்பனைக் கதை. அதை மதவாதிகள் மதக்கதையாகவும், ஒரு வகை ஆஸ்திகர்கள் கடவுள் கதையாகவும் ஆக்கிவிட்டார்கள். அக்கதை இன்று ஆரியர்களாலும் அவர்களது அடிமைகளாலும் மக்களுக்கு மதப் பிரச்சாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இராமாயணக் கதைக்கு மூலக்கதை என்று சொல்லப்படும் வால்மீகி ராமாயணக் கதைப்படி சரியாக எவரும் பிரச்சாரம் செய்வதில்லை, அந்தப்படி நடிப்பதும் இல்லை. ஏனெனில் அதை வால்மீகி ராமாயணப்படி நடித்தால், அது மதப்பிரச்சாரத்திற்கோ அல்லது கடவுள் பிரச்சாரத்திற்கோ சிறிதும் பயன்படாது. காரணம் என்னவென்றால், அது ஆதியில் உண்டாக்கியவர் என்று சொல்லப்படும், (உண்மையில் அவரால் எழுதப்பட்டிருக்குமானால்) வால்மீகி முனிவர் என்பவர் அதை ஒரு மதக் கருத்துக் கொண்டோ அல்லது...

1. தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி பெரியார் பேசினது

1. தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி பெரியார் பேசினது

சுமார் 15- – வருடங்களுக்கு முன்  சென்னை ராயபுரத்தில்  கண்ணப்பர் வாசகசாலையைத் திறந்துவைக்கையில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு இன்று நாட்டில் கிளப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைக்குப் பொருத்தமானதாகயிருப்பதால் அதன் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:? ஆதிதிராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில்  மிருகங்களைவிடக் கேவலமாகத் தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுக்குள் சிலர் ராவ்பகதூர்களாயும்,  ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும்  செல்லத்தக்க பணக்காரர்களாயுமிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள  அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும்  பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அதற்கு  ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதெ- ன்கிறார்கள். (இப்பொழுது ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கப்டுகின்றார்கள் என்றால், அது அரசாங்கத்தாரின்  சட்டபலத்தைக் கொண்டு. ஆனால், பொதுவாகத் தாழத்தப்பட்டோர்  அனுமதிக்கப் படுகிறார்களா என்பதையும் இந்துக்கள்...

1. சீதை

1. சீதை

அடுத்தாற்போல் சீதையின் யோக்கிதையைப் பற்றி சிறிது ஆராய்வோம். இராமாயணக் கதை முழுவதிலுமே சீதையைப் போற்றத் தகுந்த இடம் மிக அரிதாகவே இருக்கிறது. சீதையின் பிறவியே சந்தேகத்திற்கு இடமானது. (இராமனைவிட மூத்தவள்) சீதை “நான் புழுதியில் கிடந்தவளானதால் என்குலம் தெரியாத. . . . .பக்குவம் அடைந்த பிறகும் என்னை மணம் செய்து கொள்ள பலநாள் வரை யாரும் வரவில்லை” என்று சொல்லுகிறாள். கல்யாணமான சிறிது நாட்களிலேயே பரதனால் வெறுக்கப்பட்டு விட்டாள். இதை இராமனும், “நீ பரதனால் போற்றத்தகுந்தவளல்ல.” என்று சொல்லிவிட்டான். இதை சீதையும் “என்னை வெறுக்கும் பரதனிடம் நான் இருக்க மாட்டேன்” என்று சொல்வதன் மூலம் ஒப்புக்கொள்கிறாள். கணவனை “அற்பன்” என்கிறாள். “நீ வேஷத்தில் ஆணே ஒழிய காரியத்தில் உம்மிடம் ஆண்மை இல்லை” என்கிறாள். “உன்னிடத்தில் ஒரு சக்தியும் ஒரு தன்மையும் தேஜசும் இல்லை” என்கிறாள். “தன் மனைவியைப் பிறனுக்கு விட்டு அதனால் பிழைக்கும் கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறருக்குக்...

பெரியபுராணம்

பெரியபுராணம்

பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண்மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்கு சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமய வாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித  உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளைகளும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சில பக்தர்கள் கற்பனை செய்த கருத்துக்களா? சிவன்தான் முழு முதல்  கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா? கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா? உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று  இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர்களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா? அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களை யெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி...

1. திருவாரூரில் பெரியார் கர்ஜனை

1. திருவாரூரில் பெரியார் கர்ஜனை

தமிழ்நாடு தமிழருக்கே தமிழ்நாடு தமிழருக்கே என்பதை கக்ஷியின் சார்பாக நமது தோழர் சர்.பன்னீர்செல்வம் அவர்கள்தான் வேலூர் உபந்யாசத்தில் எடுத்துச்சொன்னார்கள். அப்பொழுது நான் ஜெயிலில் இருந்தேன். அப்புறம் தான் அது விஷயத்தில் எனக்கும் வர வர அதிக தைரியம் வந்தது. தமிழ்நாடு தமிழருக்கே என்றால் தெலுங்கர்கள் மலையாளிகள் யார் என்று சிலர் சந்தேகப்படக்கூடும். அவர்களும் தமிழர்கள் தான். அம்மொழியும் அதாவது தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தமிழிலிருந்து உண்டானதுதான். சென்னையில் கொஞ்ச நாள் முன்னர் சர் பாத்ரோ சர்.கேவி.ரெட்டிநாயுடு முதலியவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெலுங்கில் உள்ள பெயர் சொற்கள் எல்லாம் தமிழ், தமிழ் உச்சரிப்பு, தமிழிலிருந்து வந்தன என்பதாக விளக்கிச் சொன்னதுடன் இவை எல்லாம் திராவிட பாஷை என்றார்கள். உதாரணத்திற்கு சுமார் 100 வார்த்தைகளையும் எடுத்துச் சொன்னார்கள். 40, 50 வருடத்திற்கு முந்திய(டிக்ஷனரி) ஆங்கில அகராதியைப் பாருங்கள். என்சைகிளோ பீடியாவை (சிஐஉதீஉயிலி ணைளஷ்ழி)ப் பாருங்கள். ஆந்திரநாடு, கேரள நாடு ஆகிய இவை யெல்லாம் திராவிடநாடு என்று...

1. தமிழர் கடமை

1. தமிழர் கடமை

வேலூரில் சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடும் கூடி முடிவடைந்துவிட்டன. வேலூரில் கூடிய மாநாட்டின் நோக்கம் நமது தாய் மொழியான தமிழைக் காப்பது; சென்னையில் கூடிய மாநாட்டின் நோக்கம் திராவிடப் பெருமக்கள் சகல துறைகளிலும் தமது பிறப்புரிமையைப் பெற வேண்டுமென்பது. இரு மாநாட்டாரும் ராமசாமிப் பெரியாரே தமது தனிப்பெருந்தலைவரென சபதம் செய்து விட்டனர். பெரியார் சிறை புகுந்து இன்று 27 நாட்கள் ஆகின்றன. அவர் எதற்காகச் சிறை புகுந்தார்? திராவிட பெருங்குடி மக்களுக்காகவே தமிழ் நாட்டாருக்காகவே சிறை புகுந்தார். திராவிட மக்கள் விடுதலையை முன்னிட்டே சிறை புகுந்தார்.  மதத்தையும் கலைகளையும் புதிய உருவத்தில் நமது தலைமேல் சுமத்த ஆரியப் பார்ப்பனர் காங்கிரஸ் மூலம் சூழ்ச்சிகள் செய்கின்றனர். தென்னாட்டாரில் ஒரு சாராருக்குக் காங்கிரஸ் மோகமும் காந்தி பக்தியும் இருந்து வருவதினால் காந்தி ஆணையே? காங்கிரஸ் ஆணையே முக்கியமெனத் தப்பாகக் கருதுகின்றனர், காந்தி மூலமே – காங்கிரஸ்...

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

கழகத் தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு : பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அமையப் போகும் எதிர்கால தமிழ்நாட்டின் இலக்கினை அடையாளம் காட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம். —– பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கீழே கொடுத்துள்ளோம். —– “ஜாதி, மத அடையாளங்களைக் காட்டி பாகுபாடு காட்டுவது, பெண்களின் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்குவது, அறிவியலுக்கு எதிரான சடங்குகளை, நம்பிக்கைகளை – பண்பாட்டுப் பெருமைகளாக பேசி வளர்ச்சிக்கான சிந்தனைகளை முடக்குவது, ஒன்றியத்தை ஒற்றை ஆட்சியாக மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் உரிமைகளை பறிப்பது, சமஸ்கிருத பண்பாட்டைத் தேசிய பண்பாடாக மாற்றுவது” உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதே ஆகும். இம்முயற்சிகளை முறியடிக்க பெண்கள் ஆண்கள் அடங்கிய இளைய சமூகத்தை அணிதிரட்டி சமூக நீதியை நோக்கி...

சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி

*செப்டம்பர் 17 சமூக நீதி நாள் உறுதிமொழி* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் நெறிமுறையாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எமது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுட மற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாக கொண்டு சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தோழர் ப.திருமாவேலன் அவர்களின் முக்கியமான கட்டுரை. தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! அனைவருக்கும் மீண்டும் ஒரு அன்பான வணக்கம். ‘தமிழ்த் தேசியமும், தந்தை பெரியாரும்” என்கின்ற தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. உண்மையில் ஒரு வில்லங்கமான தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத்...

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

*கறுப்பு ஜூலை !* தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு ! – திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் *கொளத்தூர் மணி அறிக்கை !* இலங்கையில் 1983-ல் நடைபெற்ற இந்த மறக்கவியலா வரலாற்று பேரவலமான தமிழர்கள் மீதான அழிப்பு நடவடிக்கையின் 37 ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுகள் இத்தனை கடந்தாலும் அன்று தமிழர்கள் மீது நடந்தப்பட்ட கொடூர தாக்குதல்கள்,ஈவு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவுகள் ஆறாத வடுக்களாக இன்னமும் உலகத் தமிழர் மனதில் ஆழமாய் பதிந்து இருக்கிறது. ஒவ்வொரு வருடம் ஜூலை மாதமும் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் அளவிற்கு இலங்கையின் சிங்கள பேரினவாதத்தின் கோர தாக்குதல் குறித்து இத்தலைமுறையும் அறிந்து கொள்வது அவசியம். தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மேலோட்டமாக பார்க்காமல் அதன் வரலாற்று பின்னணி, விடுதலைப் போராட்டத்தின் தேவை, ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை...

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு…

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு…

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு… பள்ளிபாளையம் ஐந்து பனையில் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த மனோகரன் அவரது மகன் இருவரும் சேர்ந்து இரண்டு நாட்கள் முன்பு சக்திவேல் என்ற அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இளைஞரை ஜாதியை இழிவுபடுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. உடனடியாக திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் முத்து பாண்டி மற்றும் தமிழ் புலிகள் கட்சி தோழர்கள் தாக்கப்பட்ட தோழரை சந்தித்து உண்மையறிந்து காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது புகார் கொடுத்தனர்.. தற்போது ஜாதி வெறியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் !  – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* RSS தலைவர் மோகன் பகவத் என்பவர் 22.07.2021 அன்று மதுரை வருவதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சார்பில் சில முன்னேற்பாடுகளுக்காக பிறப்பித்த குறிப்பாணை  ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. அரசு அதிகாரியின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளானது. பெரியாரிய, முற்போக்கு இயக்கங்கள் இந்த குறிப்பாணையைப் பிறப்பித்த அதிகாரியை மிக வன்மையாக கண்டித்தன. கடும் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆணைக்கான ஒரு அவசர விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆணை தமிழ்நாட்டு முதல்வர் நேரடி பார்வையின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த ஆணைக்கு எதிரான கொந்தளிப்பான சூழலை உடனடியாக கவனத்தில் கொண்ட தமிழ்நாட்டு அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஆணையைப் பிறப்பித்த...

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல் தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இங்கே பார்ப்போம். 1. ஜாதி ஒழிப்பு, மொழிவாரி மாகாணம், வீரரும் வீர வழிபாடும் முதல் தொகுதி 1. சாதி பற்றியவை, 2. மொழி வாரி மாகாணங்கள் குறித்து, 3. வீரரும், வீர வழிபாடும் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் இந்தியாவில் சாதிகள், அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிப் பேசுகிறார் அம்பேத்கர்.  பல மானுடவியல் அறிஞர்களின் கூற்றுகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, சாதியின் தோற்ற இலக்கணத்தை விளக்கும் அம்பேத்கர் சாதித் தீவிரத்தில் அகமணமுறை எப்படிப் பங்களித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார்.  அடுத்து, சாதியை ஒழிக்க சமுதாய அமைப்பை எப்படிச் சீர்திருத்த வேண்டும் என்று தகுந்த வாதங்களை எடுத்து வைக்கிறார். நூலின் இரண்டாவது பகுதியில், மொழிவாரி மாகாணங்களினால் எழும் சிரமங்களையும், அனுகூலங்களையும் விவாதித்து, சிரமங்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறுகிறார். மூன்றாவது பகுதி, மகாதேவ் கோவிந்த்...

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…*  *இட ஒதுக்கீடு மீறல்கள்…*  *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்*  *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைந்து ஐஐடியில் கடைப்பிடிக்கப்படுகின்ற சாதிய தீண்டாமை கொடுமைகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகமும் பங்கேற்கின்றது. தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் தவறாது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் இணைக்கப் பட்டுள்ளன. விவரங்களுக்கு தோழர்கள் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொளத்துர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். *சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்* ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக...

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு ! நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. அக்குழு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது.கருத்துக்கள் சென்று சேர கடைசி நாள் நாளை 22.06.2021 நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரிடம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் கீழ்காணும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : neetimpact2021@gmail.com – திராவிடர் விடுதலைக் கழகம், 21.06.2021 ——————————————— நீட் தேர்வு ஏன் வேண்டாம்? 12 ஆண்டுகளாக பள்ளிகளில் பயின்று ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்துள்ள மாணவர்களின் எந்த ஒரு தேர்வும் மதிக்கப்படாமல் நீட் என்ற பெயரால் எழுதும் வடிகட்டும் ஒற்றை தேர்வை மட்டும் அளவீடாக கொண்டு முடிவு செய்வது நியாயமானதல்ல. பள்ளிகளில்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

தலைமைக் குழு – 20.06.2021. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 20.06.2021 ஞாயிறு மாலை 5 மணிக்கு இணையம் வழியாக நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் அறிமுக உரையாற்றினார். நடைபெற்ற தலைமைக் குழுவில் திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திமுக அரசு நடைமுறைப் படுத்த முயற்சிக்கும் சமூக நீதி திட்டங்களான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வேலைவாய்ப்பு உரிமை, 7 தமிழர் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இவற்றிற்கு ஒன்றிய பாஜக அரசும், ஆதிக்க பார்ப்பன சக்திகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இடையூறுகள் குறித்து பேசப்பட்டது. கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை. ஈழத்தமிழ் ஏதிலியர்களுக்கான கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியமை, நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய...

தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா?

தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா?

23/4/2010 தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா? ‘நாம் தமிழர்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி 18.5.2010 அன்று மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பரப்புரைகளும், விளம்பரங்களும், அறிக்கைகளும் அவ்வியக்கத் தோழர்களால் முனைப்புடன் பரப்பப்படுகின்றன. அவர்களோடு சேர்ந்து விளம்பரப்படுத்த அல்ல நாம் இதை எழுதுவது! பின் எதற்கு? விளம்பர அறிக்கை தாங்கி நிற்கும் சில செய்திகளைப் பற்றிய நமது கருத்துகளைத் தெரியப்படுத்த, தெளிவுபடுத்தத்தான் இதை எழுத நேர்ந்தது. தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான். ஆனாலும், தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடக் கூடாது. அதுவும் குறிப்பாக “அறிஞர்” குணாவின் பாதையில் ‘தமிழர் – தமிழரல்லாதவர்’; ‘திராவிடர் –...

அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

*அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை !* *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !* *குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வடியுறுத்தல் !* இது குறித்து *கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை :* அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் 08.04.2021 அன்று சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றுபேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலை ஒட்டிய பரப்புரையில் நடந்த தகராறுகளை காரணம் காட்டியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்த காரணத்திற்காகவும் பாமக மற்றும் அதிமுகவினர் இணைந்து தலித் இளைஞர்கள் மீது நடத்திய இந்த கொடூர தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தலித் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்களுக்கான அதிகாரத்தை நோக்கி பயணிப்பதை சகிக்க முடியாத ஆதிக்க மனநிலை கொண்ட ஜாதி வெறியர்கள் சனாதன ஜாதி அமைப்பின் கொடூர வன்ம மனநிலையுடன் இக் கொலையை...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

கடந்த 10.01.2021 அன்று திருமணமான புதிய இணையர்கள் அறிவுமதி-தமிழன்பன், கழக வார ஏடான, ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ 5000-யை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் அண்ணா நினைவு நாள் கருத்தரங்கில் (பிப்.27) வழங்கினர். அதைத் தொடர்ந்து, சென்னை கழகத் தோழர் விஜயனும் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக ரூ 1000 அளித்தார். 17.2.2021 அன்று தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி பிறந்த நாளன்று விரட்டுக் கலைக் குழு ஆனந்த் கழக ஏட்டிற்கு ரூ.2000 நன்கொடை அளித்தார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

கழகப் பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தாயார் உடல் நிலை: கழகப் பொறுப்பாளர்கள் நலம் விசாரித்தனர்

கழகப் பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தாயார் உடல் நிலை: கழகப் பொறுப்பாளர்கள் நலம் விசாரித்தனர்

கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் தாயார் உடல்நலமின்றி இருக்கிறார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் 7.2.2021 அன்று பிரபாகரன் இல்லம் சென்று தாயாரின் உடல்நலம் விசாரித் தனர். முன்னதாக மதுரை மாவட்ட கழகத் தோழர் காமாட்சி பாண்டியையும் (பிப்.6),  பிப்.7 அன்று நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கழகத் தோழர் மாசிலாமணி இல்லத்தில் கழகத் தோழர் களையும் சந்தித்து கழக செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். மார்ச் 7ஆம் தேதி மகளிர் தினவிழாவை குடும்பத் துடன் குற்றாலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 04032021 இதழ்

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட தோழர் அறிவரசு கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பால் முடிவெய்தினார். தோழர் அறிவரசு படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.2.2021 அன்று மாலை 6 மணி அளவில் கோவை துடியலூர் அண்ணா குடியிருப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து  நேருதாசு நிகழ்விற்கு தலைமை வகித்தார். துடியலூர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த தோழர்கள் அல்போன்சு, திமுக முன்னாள் கவுன்சிலர் மருதாசலம், ளுனுஞஐ பாதுஷா, மக்கள் விடுதலை முன்னணி முகிலன், தமிழ் புலிகள் கட்சி  சபாபதி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சமூக நீதிக் கட்சி வெள்ளமடை நாகராஜ், திராவிட தமிழர் கட்சி வெண்மணி,  ஜெயச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சண்முகசுந்தரம், பொள்ளாச்சி விஜயராகவன், தோழர் அறக்கட்டளை சாந்தகுமார், கோவை மாவட்ட...

வினா விடை

வினா விடை

கோயில்களுக்கு உரிய நான்கு சக்கர வாகனங்கள் ‘இறைவனுக்கு’ மட்டுமே உரிமையானது. அரசு தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. – இந்து அறநிலையத் துறை அறிவிப்பு ஆகம விதிகளில் மோட்டார் வாகன விதிகளையும் சேர்த்து விட்டீர்களா? சொல்லவே இல்லை. ஜெர்மன் நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை மூடப்படுகிறது; தமிழக அரசு உறுதி அளித்தபடி 1 கோடியே 24 இலட்சத்தை வழங்காததே காரணம்.            – செய்தி தமிழைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதுதான் அம்மா ஆட்சி; ஜெர்மனியில் அல்ல என்பதை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மோடி படம் – பகவத் கீதையுடன் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. – செய்தி நல்லது; ‘செயற்கைக் கோள்’ பெயரை உடனே ‘இராமபானம்’ என்று மாற்றி விடுங்கள்! மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பதால்தான் நாம் கொரனாவி லிருந்து மீண்டோம். – இந்து மாநாட்டில் தமிழிசை கொரானா காலத்தில் கோயில்களே மூடப்பட்டிருந்ததை தமிழிசை மறந்து விட்டார் போல! கடவுள் எந்த ஒரு...

கழக சார்பில் தலைமை நிலையத்தில் ‘தா.பா.’ படத்திறப்பு

கழக சார்பில் தலைமை நிலையத்தில் ‘தா.பா.’ படத்திறப்பு

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் தா. பாண்டியன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு தி.வி.க. தலைமை அலுவலகத்தில் 27.2.2021 அன்று நடைபெற்றது. படத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட தோழர் அறிவரசு கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பால் முடிவெய்தினார். தோழர் அறிவரசு படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.2.2021 அன்று மாலை 6 மணி அளவில் கோவை துடியலூர் அண்ணா குடியிருப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து  நேருதாசு நிகழ்விற்கு தலைமை வகித்தார். துடியலூர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த தோழர்கள் அல்போன்சு, திமுக முன்னாள் கவுன்சிலர் மருதாசலம், ளுனுஞஐ பாதுஷா, மக்கள் விடுதலை முன்னணி முகிலன், தமிழ் புலிகள் கட்சி  சபாபதி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சமூக நீதிக் கட்சி வெள்ளமடை நாகராஜ், திராவிட தமிழர் கட்சி வெண்மணி,  ஜெயச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சண்முகசுந்தரம், பொள்ளாச்சி விஜயராகவன், தோழர் அறக்கட்டளை சாந்தகுமார், கோவை மாவட்ட...

‘அண்ணாவை பேசுவோம்; வாசிப்போம்’ – கழகம் நடத்திய கருத்தரங்கம்

‘அண்ணாவை பேசுவோம்; வாசிப்போம்’ – கழகம் நடத்திய கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் நினைவு தின கருத்தரங்கம், ‘அண்ணாவை பேசுவோம், வாசிப்போம்’ என்ற தலைப்பில், 27.02.2021 சனிக்கிழமை, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை தலைமை அலுவலகத்தில், மாலை 6 மணியள வில் தொடங்கி நடைபெற்றது. கழகத்தின் தலைமைக் குழு உறுப் பினர் அன்பு தனசேகர் வரவேற்பு கூறி னார். அறிவுமதி தலைமை வகித்தார். ‘திராவிடம் பேசிய சிறுகதைகள்’, ‘அண்ணாவின் ஆரிய மாயை’, ‘அண்ணா – திராவிட நாடு’ ஆகிய தலைப்புகளில் தேன்மொழி, மதிவதினி, சந்தோஷ் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கருத்துரையாற்றினர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘அண்ணாவை ஏன் பேச வேண்டும், தற்போதைய பாஜக ஆட்சியில் பறிபோன உரிமைகள் மீட்க எப்படி அண்ணா தேவைப்படு கிறார், பார்ப்பனியம் அண்ணாவிடம் எப்படி தோற்றது’ போன்றவற்றை தெளிவாக விளக்கி சிறப்புரை யாற்றினார். கருத்துரையாற்றிய தோழர்களுக்கு, சரவணக்குமார் எழுதிய ‘தம்பிக்கு’ என்ற புத்தகத்தை, பேராசிரியர் சரஸ்வதி...

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (3) சமதர்ம புரட்சி ரஷ்யாவில் உருவாகுவதற்கு முன் இந்தியாவில் வராமல் போனது ஏன்?

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (3) சமதர்ம புரட்சி ரஷ்யாவில் உருவாகுவதற்கு முன் இந்தியாவில் வராமல் போனது ஏன்?

டி    கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் வெளியிட்டார் பெரியார். டி    இந்தியாவில் பணக்காரன்-ஏழை முரண் பாட்டைவிட மேல் ஜாதி – கீழ் ஜாதி முரண்பாடு முதன்மையாக இருக்கிறது என்று அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார். டி    1931 விருதுநகர் மாநாட்டில் சமதர்மமே இலட்சியம் என்று அறிவித்து முதன்முறையாக மதங்கள் ஒழிய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார். டி    1932 மே மாதம் இரஷ்ய மே தினம் அணி வகுப்பில் அந்நாட்டு பிரதமருடன் பங்கேற்றார். டி    இங்கிலாந்தில் தொழில் கட்சி நடத்திய மாநாட்டில் பங்கேற்று அம்மாநாட்டிலேயே அக்கட்சியைக் கடுமையாக துணிவுடன் விமர்சித்தார் பெரியார்.   குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது. சென்ற இதழ் தொடர்ச்சி எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி – தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் – பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை...

யார் மைனாரிட்டி?

யார் மைனாரிட்டி?

நாம் மைனாரிட்டி என்று சொன்னவுடன் பார்ப்பன காங்கிரஸ்காரர்கள், “நாங்கள் 100க்கு மூன்று பேர்கள் தாமே; நீங்கள் 97 பேர்கள் இருக்கிறீர்களே; நாங்கள் தாம் மைனாரிட்டிகள்” என்பார்கள். இந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாது. நாம், பேருக்கு வேண்டுமானால் 97 ஆவோம். ஆனால் நம்மை பல வகுப்புகளாக பிரித்திருக்கின்றனர். உடையார், செட்டியார், ரெட்டியார், பிள்ளை, நாயுடு, முதலியார், கள்ளர், கவுண்டர், மறவர், அகமுடையார், அம்பட்டர், வாணியர், ஆர்சுத்தியார், புற்றிலே கழிந்தார், பொரபொரத்தார் என்று முழுவதும் சொல்லலாம்; அவ்வளவு எண்ணற்ற பிரிவுகள்! இங்கே ஒருவனுடைய கவலையை மற்றவன் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும், அதுவும் பார்ப்பனர்களுக்குத் தான் அனுகூலம். ஒரு ‘பிள்ளையை’ அடித்தால், மற்றொரு ‘முதலி’ பார்த்துக் கொண்டு சந்தோஷப்படுவதல்லாமல், “வெள்ளாளப் பயலுக்கு நல்லா வேணும்” என்று காலாட்டிக் கொண்டிருக்கிறான். ஒரு பாப்பான் உதைபடட்டும்- இமாலய மலையிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை சத்தம் கேட்குதே!யார் மைனாரிட்டி என்று யோசித்துப் பாருங்கள்! ‘குடி அரசு’ 31.12.1939...

‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ பிரிவு உருவான வரலாறு

‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ பிரிவு உருவான வரலாறு

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் என்ற பிரிவு 1957 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. 1989இல் கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் இந்த மிகவும் பிற் படுத்தப்பட்டோர் பிரிவினருடன் ‘குற்றப் பரம்பரையாக’ பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு நீதிக்கட்சி ஆட்சியில், அதிலிருந்து விடுவிக்கப்பட்ட வகுப்பினரையும் இணைத்து 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1855ஆம் ஆண்டிலிருந்தே சென்னை மாகாணத்தில் தீண்டாமைக்கு உள்ளாகும் தாழ்த்தப்பட்ட வகுப் பினர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக கல்வி மான்யம் வழங்கும் விதிமுறைகள் (ழுசயவே in யனை உடினந) ஒன்று உருவாக்கப் பட்டது. கல்விக்காக அரசு நிதி உதவி தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் சிலவற்றுக்கும் கிடைக்கும் வகையில் 1906லும், 1913லும் மேற்குறிப்பிட்ட விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1954இல் வகுப்புவாரி பிரதிநிதித்து வம் செல்லாது என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது. பெரியார் போராடினார் அதன்...

தலையங்கம் ‘உள் ஒதுக்கீடு’ அறிவிப்புகள் உணர்த்துவது என்ன?

தலையங்கம் ‘உள் ஒதுக்கீடு’ அறிவிப்புகள் உணர்த்துவது என்ன?

தேர்தல் களத்தில் கூட்டணி பேரத்துக்காக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளோடு பிணைந்து நிற்கும் இடஒதுக்கீடு கொள்கை பகடைக்காயாக்கப்படுகிறது. தமிழகத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவசர அவசரமாக வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்து விவாதங்கள் ஏதுமின்றி (எதிர் கட்சிகள் அவையில் இடம் பெறவில்லை) நிறைவேற்றியிருக்கிறார்.  அடுத்த நாளே பா.ம.க.வுடன் இழுபறியாக இருந்து வந்த அ.தி.மு.க. கூட்டணி பேரம் முடிவுக்கு வந்து விட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்; சீர் மரபினருக்கு 7 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என்று பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒதுக்கீடு எண்ணிக்கைகளுக்கு பின்பற்றப்பட்ட அளவுகோல் என்ன என்பது அடிப்படையான கேள்வி. ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; கல்வி, அரசுப் பணிகளில் குறிப்பிட்ட ஜாதி பெற்றுள்ள பிரதிநிதித்துவம் குறித்த விவரங்கள் ஏதுமின்றி அவசர கோலத்தில்...

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன் விடுதலை; உற்சாக வரவேற்பு

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன் விடுதலை; உற்சாக வரவேற்பு

‘கறுப்பர் கூட்டம்’ நாத்திகன்,   19.2.2021 மாலை 7 மணியளவில் சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை இராயப்பேட்டை, வி.எம் தெரு, பெரியார் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி வரவேற்று உரையாற்றினார். நாத்திகன் வரவேற்பில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரூதர்புரம் கார்த்தி, தோழர்கள் அரங்க குணசேகரன், பார்த்திபன், வளர்மதி ஆகியோரும் உடனிருந்தனர். நாத்திகன் வழக்கை கழக வழக்கறிஞர் துரை அருண் நடத்தினார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

ஆர்.டி.அய். தகவலில் அதிர்ச்சி தகவல்கள் அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடுகள் மறுப்பு

ஆர்.டி.அய். தகவலில் அதிர்ச்சி தகவல்கள் அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடுகள் மறுப்பு

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற நீண்ட போராட்டங்களின் விளைவாகவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை அமலாக்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் சமூகம் என ஒவ்வொருவருக்கும், ஒரு குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இடஒதுக்கீடு என்பது முறையாக அமலாகிறதா என்றால் இல்லை எனும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. உயர்கல்வி நிறுவனமான அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடு முறை என்பது காற்றில் பறக்க விடப்படு வதோடு, பின் தங்கிய மாணவர்களின் உயர் கல்வியும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பின்வரும் விபரங்களிலிருந்து எளிதாக அறிந்து கொள்ளலாம். தில்லி, மும்பை, சென்னை, கான்பூர், கரக்பூர் ஆகிய ஐந்து அய்.அய்.டி. நிறுவனங்களில் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலத்தில், சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் ஆகிய...

‘ஆளுநர்’ – ‘பிரதமர்’ பதவி வேண்டுமா?

‘ஆளுநர்’ – ‘பிரதமர்’ பதவி வேண்டுமா?

கிரிமினல் குற்றங்களில்கூட ‘மனுசாஸ்திரம்’ பதுங்கி இருக்குது சார், என்றார் ஒரு நண்பர். அது எப்படி என்று கேட்டேன். நண்பர் – ஒரு நீண்ட பட்டியலையே போட்டார். “சீனிவாச அய்யங்கார் – நடுவீதியில் கட்டிப் புரண்டு சண்டை; குப்புசாமி சாஸ்திரி – வீச்சரிவாள் தூக்கினார்; ராமச் சந்திர அய்யர் – சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினார்; எம். பிச்சுமணி குருக்கள்-பிக்பாக்கெட் அடித்தார்” என்றெல்லாம் செய்திகளைப் படித்திருக்கிறீர்களா? என்றார். அப்படி ஒன்றும் அண்மையில் படித்ததாக நினைவில் இல்லையே. அவர்கள் ஒழுக்க சீலர்கள்; வேதம் படித்தவர் களாயிற்றே – என்றேன். உடலில் வலிமை தேவைப்படும் கிரிமினல் குற்றங்களுக்கு  அவர்கள் வரமாட்டார்கள் சார். ஏன் உடல் உழைப்புக்கே வரமாட்டாங்க. சாலை போடுவது, மூட்டை தூக்குவது போன்ற உடல் உழைப்புக்கும் அவர்களுக்கு வெகுதூரம். உடல் நலுங்காமல், குலுங்காமல் மூளையை மட்டுமே பயன்படுத்தும் ‘கிரிமினல்’ கலை அவர்களுக்கு தெரியும்” என்றார். தெளிவாகப் புரியும்படி சொல்லுங்க சார், என்றேன். “அவர்கள் பங்கு...

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்

பெரியார் சிலையை மூடி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ள அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு ! 06.03.2021 அன்று திருப்பூரில் பெரியார் சிலை அரசு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அரசு அதிகாரிகளுக்கு இது தெரியாததல்ல. தொடர்ந்து தெரிந்தே இத்தவறை செய்து வருகிறார்கள். தேர்தல் நடைத்தை விதிகள் என்று கூறிக்கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு பெரியார் சிலைகளை அரசு அதிகாரிகள் மூடுவதும், தோழர்கள் நீதிமன்ற தீர்ப்பை காட்டியபின் திரையை நீக்குவதும் என அரசு அதிகாரிகள் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தெரிந்தே இந்த வேலையை தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் இவர்கள் யாருக்காக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் ? மக்கள் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு காவி தீவிரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படும் இந்த அதிகாரிகள் அறியாமல்...

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

06.03.2021 சனிக்கிழமை, திருச்சி மாநகர் இரவி மினி அரங்கில் காலை 10 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1) தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழமையாக வந்து போகும் தேர்தலாக இல்லை ! ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டின் திராவிட அடையாளத்தையும் அழித்து மதவெறி- மனுவாத மண்ணாக மாற்றுவதற்கு தனது சகல அதிகாரங்களையும் – சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு படை எடுப்பையே நடத்தி வருகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்த்தெடுத்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன; தமிழ்நாட்டையும் வடமாநிலங்களைப் போல் ஆக்கிவிட்டால், இந்துத்துவம் என்ற மனுவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்றி விட முடியும் என்பதே அவர்களின் திட்டம் ; இந்த ஆபத்தான படை எடுப்புக்கு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழினத்திற்கு துரோகம்...

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

”தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை” ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல். (11.13.2016) (தினத்தந்தி செய்தி) சென்னை, மார்ச்.12 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் ரத்தினசாமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு ! 06.03.2021 – திருச்சி கழகத் தோழர்களுக்கு, வணக்கம். எதிர்வரும் 06.03.2021 சனிக்கிழமை காலை சரியாக 10-00 மணிக்கு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினிஹால் அரங்கில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. பொருள்: 1) கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு 2) இயக்க ஏடுகள் பரப்பல் 3) அடுத்த காலாண்டு செயல்திட்டங்கள் 4) மாவட்ட பயிற்சி வகுப்புகள் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல், உரிய நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் 01.03.2021

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு !

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு !

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு ! 07.02.2021 – ஞாயிறு – மதியம் 2.00 மணி ஆர்.கே.மண்டபம் – ஒத்தக்கடை – மதுரை. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் MP, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் தோழர் பேரா சுபவீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.