Category: குடி அரசு 1948

1. உண்மை இராமாயணம்

1. உண்மை இராமாயணம்

காட்சி – 23 (அந்தப்புர அலங்கார மண்டபத்தில் கைகேயி உல்லாசமாய் உலாவிக் கொண்டிருக்க, மந்தரை ஆத்திரத்தோடு மாடியிலிருந்து இறங்கி வந்து) மந்தரை : அம்மா! இனிக் கொஞ்ச நேரத்திற்குள் வரப்போகும் பேராபத்தை உணராத போங்காலத்திற்குள்ளான கைகேயி! என்ன நீ கவலையற்று உல்லாசமாக உலாவுகிறாயே. சிறிது நேரத்தில் உன் தலைமேல் இடி விழப்போகிறது! நீ ஒழிந்தாய்! உன் மகன் அழிந்தான்! உன் நாடு நகரம் எல்லாம் பறிபோகப் போகிறது! கைகேயி! நான் என்ன சொல்லுவேன்! (அழுகிறாள்) கைகேயி : என்னடி மந்தரை உளறுகிறாய்! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? புத்தி சுவாதீனம் இல்லையே? சற்று முன் மாடிக்குப்போகும்போது நல்ல புத்தியோடு இருந்தாயே! இது என்ன அதிசயமாய் இருக்கிறது! மந்தரை :  மதிகெட்ட மனுஷியே! எனக்கொன்றும் பைத்தியம் இல்லை. உனக்கு ஆபத்து வந்துவிட்டது. நீயும் “உன் மகனும்” உன் செல்வாக்கும் அழிந்து ஒழிந்தீர்கள். கைகேயி : சீ! வாயை மூடு. பிசாசே! உளராதே. புத்திகெட்டவளே! தசரதச்...