யார் மைனாரிட்டி?
நாம் மைனாரிட்டி என்று சொன்னவுடன் பார்ப்பன காங்கிரஸ்காரர்கள், “நாங்கள் 100க்கு மூன்று பேர்கள் தாமே; நீங்கள் 97 பேர்கள் இருக்கிறீர்களே; நாங்கள் தாம் மைனாரிட்டிகள்” என்பார்கள். இந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாது. நாம், பேருக்கு வேண்டுமானால் 97 ஆவோம். ஆனால் நம்மை பல வகுப்புகளாக பிரித்திருக்கின்றனர். உடையார், செட்டியார், ரெட்டியார், பிள்ளை, நாயுடு, முதலியார், கள்ளர், கவுண்டர், மறவர், அகமுடையார், அம்பட்டர், வாணியர், ஆர்சுத்தியார், புற்றிலே கழிந்தார், பொரபொரத்தார் என்று முழுவதும் சொல்லலாம்; அவ்வளவு எண்ணற்ற பிரிவுகள்! இங்கே ஒருவனுடைய கவலையை மற்றவன் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும், அதுவும் பார்ப்பனர்களுக்குத் தான் அனுகூலம். ஒரு ‘பிள்ளையை’ அடித்தால், மற்றொரு ‘முதலி’ பார்த்துக் கொண்டு சந்தோஷப்படுவதல்லாமல், “வெள்ளாளப் பயலுக்கு நல்லா வேணும்” என்று காலாட்டிக் கொண்டிருக்கிறான். ஒரு பாப்பான் உதைபடட்டும்- இமாலய மலையிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை சத்தம் கேட்குதே!யார் மைனாரிட்டி என்று யோசித்துப் பாருங்கள்!
‘குடி அரசு’ 31.12.1939
பெரியார் முழக்கம் 04032021 இதழ்