Category: குடிஅரசு 1944

1. சீதை

1. சீதை

அடுத்தாற்போல் சீதையின் யோக்கிதையைப் பற்றி சிறிது ஆராய்வோம். இராமாயணக் கதை முழுவதிலுமே சீதையைப் போற்றத் தகுந்த இடம் மிக அரிதாகவே இருக்கிறது. சீதையின் பிறவியே சந்தேகத்திற்கு இடமானது. (இராமனைவிட மூத்தவள்) சீதை “நான் புழுதியில் கிடந்தவளானதால் என்குலம் தெரியாத. . . . .பக்குவம் அடைந்த பிறகும் என்னை மணம் செய்து கொள்ள பலநாள் வரை யாரும் வரவில்லை” என்று சொல்லுகிறாள். கல்யாணமான சிறிது நாட்களிலேயே பரதனால் வெறுக்கப்பட்டு விட்டாள். இதை இராமனும், “நீ பரதனால் போற்றத்தகுந்தவளல்ல.” என்று சொல்லிவிட்டான். இதை சீதையும் “என்னை வெறுக்கும் பரதனிடம் நான் இருக்க மாட்டேன்” என்று சொல்வதன் மூலம் ஒப்புக்கொள்கிறாள். கணவனை “அற்பன்” என்கிறாள். “நீ வேஷத்தில் ஆணே ஒழிய காரியத்தில் உம்மிடம் ஆண்மை இல்லை” என்கிறாள். “உன்னிடத்தில் ஒரு சக்தியும் ஒரு தன்மையும் தேஜசும் இல்லை” என்கிறாள். “தன் மனைவியைப் பிறனுக்கு விட்டு அதனால் பிழைக்கும் கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறருக்குக்...