Category: குடி அரசு 1940

1. திருவாரூரில் பெரியார் கர்ஜனை

1. திருவாரூரில் பெரியார் கர்ஜனை

தமிழ்நாடு தமிழருக்கே தமிழ்நாடு தமிழருக்கே என்பதை கக்ஷியின் சார்பாக நமது தோழர் சர்.பன்னீர்செல்வம் அவர்கள்தான் வேலூர் உபந்யாசத்தில் எடுத்துச்சொன்னார்கள். அப்பொழுது நான் ஜெயிலில் இருந்தேன். அப்புறம் தான் அது விஷயத்தில் எனக்கும் வர வர அதிக தைரியம் வந்தது. தமிழ்நாடு தமிழருக்கே என்றால் தெலுங்கர்கள் மலையாளிகள் யார் என்று சிலர் சந்தேகப்படக்கூடும். அவர்களும் தமிழர்கள் தான். அம்மொழியும் அதாவது தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தமிழிலிருந்து உண்டானதுதான். சென்னையில் கொஞ்ச நாள் முன்னர் சர் பாத்ரோ சர்.கேவி.ரெட்டிநாயுடு முதலியவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெலுங்கில் உள்ள பெயர் சொற்கள் எல்லாம் தமிழ், தமிழ் உச்சரிப்பு, தமிழிலிருந்து வந்தன என்பதாக விளக்கிச் சொன்னதுடன் இவை எல்லாம் திராவிட பாஷை என்றார்கள். உதாரணத்திற்கு சுமார் 100 வார்த்தைகளையும் எடுத்துச் சொன்னார்கள். 40, 50 வருடத்திற்கு முந்திய(டிக்ஷனரி) ஆங்கில அகராதியைப் பாருங்கள். என்சைகிளோ பீடியாவை (சிஐஉதீஉயிலி ணைளஷ்ழி)ப் பாருங்கள். ஆந்திரநாடு, கேரள நாடு ஆகிய இவை யெல்லாம் திராவிடநாடு என்று...