Category: சென்னை

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன்சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது.‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங்களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன்படுத்தினார். அந்த மத அரசியல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இந்து முன்னணி...

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

தோழர் சக்திவேல் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு நன்கொடை

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ச. விஜய்-அம்மு, ஜாதி மறுப்பு சுயமரி யாதை இணை யேற்பு விழா 25.8.2019 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரும் பாக்கத்திலுள்ள சமூக நலக் கூடத் தில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மணவிழாவை நடத்தி வைத்தார். கழக ஏட்டுக்கு மணவிழா மகிழ்வாக ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 0509209 இதழ்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

கழகப் பரப்புரைப் பயண விளக்கக் கூட்டங்கள்

வேட்டைக்காரன் புதூரில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் 26.08.2019 அன்று மாலை 6 மணிக்கு  பொள்ளாச்சி வேட் டைக்காரன் புதூரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியச் செயலாளர் அரிதாசு தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி,  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். சபரிகிரி நன்றி கூறினார். இந்நிகழ்வில், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆனமலை பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் : மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு பயணத் தின்  பிரச்சார பயண விளக்க  பொதுக் கூட்டம் 26.08.2019 அன்று மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட...

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

அரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்

இந்து முன்னணி அமைப்பாளர் கே. பக்தவத்சலம், சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்திலிருந்து அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம், அரசியல் முழக்கத்தை முன் வைத்து நடத்தப்படுகிறது’ என்று கூறியிருக்கிறார். “பக்தி இலக்கியத்தை பரப்புவோம்; போலி தமிழ் தேசியத்தை வீழ்த்துவோம்” – இதுதான் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள விநாயகன் சிலைகளின் ஊர்வலங்களுக்கான முழக்கமாம். (The theme for this year is ‘Promote divine Tamil and Crack down on fake Tamil identity. – The Hindu Aug.29, 2019) இவர்கள் வீழ்த்தப்போவது தமிழ் தேசியத்தையா அல்லது போலி தமிழ் தேசியத்தையா என்பது இங்கே பிரச்சினையல்ல. இந்த ஊர்வலம் மதத்துக்கான ஊர்வலம் அல்ல; அரசியல் ஊர்வலம். அதுவும் பா.ஜ.க.வின் அரசியலுக்காக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக நடத்தப்படும் ஊர்வலம். ஏதோ ‘விநாயக சதுர்த்தி’க்கான மத ஊர்வலம் போலவும், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கான உரிமைகளை சட்டப்படி மறுக்க முடியாது என்பது...

சென்னை அணியின் பரப்புரை பயண தொகுப்பு

சென்னை அணியின் பரப்புரை பயண தொகுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு, தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே என்கிற பரப்புரைப் பயணத்திற்கான சென்னை மாவட்ட குழுவின் துவக்க விழா நிகழ்வு 25.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று இலாயிட்ஸ் சாலை பெரியார் சிலை அருகில் காலை 9 மணிக்கு துவங்கியது. தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் அவர்கள் பயணத்தை துவக்கி வைத்தார். பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் உரையாற்றினார். மே 17 இயக்கத்தினர் பறையிசையோடு துவங்கிய சென்னை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் பரப்புரை பயணம் துவங்கியது. முதல் நாளின் இரண்டாம் இடமான பல்லாவரத்தில் தற்போது பரப்புரைப் பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழகத் தோழர் பெரியார் யுவராஜ் பயணத்தின் நோக்கத்தினை குறித்து உரையாற்றினார். தோழர் நாத்திகன் பாடல் மூலம் பிரச்சாரம் செய்தார். முதல் நாளின் மூன்றாவது இடமான அனகாப்புத்தூரில் பரப்புரை பயணத்தின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கழக தோழர் எட்வின்_பிரபாகரன்அவர்கள் பிரச்சாரத்தின் நோக்கத்தினை விளக்கி உரையாற்றினார். அந்த பகுதியில் இருந்த சிறுவர், சிறுமியர்கள் ஆர்வமாக துண்டறிக்கையை படித்து கேள்வி எழுப்பியது கூடுதல்...

உலக காணாமலாக்கப்படோர் நாள் ஆகஸ்ட் 30 – மனு

உலக காணாமலாக்கப்படோர் நாள் ஆகஸ்ட் 30 – மனு

உலக காணாமலாக்கப்படோர் நாளான இன்று (ஆகஸ்டு 30) ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், இலங்கை அரசால் ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட 20,000 க்கும் மேலான தமிழர்கள் எங்கே? போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அய்.நா பொதுச்செயலாளருக்கும், அய்.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் வழங்கப்பட்டது. இதில் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம். தபசி குமரன், திவிக தலைமைநிலையச் செயலாளர். உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர் திவிக செந்தில், இளந்தமிழகம் ஆகியோர் சென்று மனுவை அளித்தனர்.

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

சென்னையில் சுவரெழுத்து

சென்னையில் சுவரெழுத்து

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம் வரும் ஆகஸ்டு 26 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 5 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில்,  “மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கொடு” என்று  இராயப்பேட்டை, மைலாப்பூர், எழும்பூர், அடையாறு, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் எழுதப்பட்டது. பெரியார் முழக்கம் 22082019 இதழ்

புதிய கல்விக் கொள்கை ஆபத்து: மாணவர்களிடம் இரண்டாம் கட்டமாக துண்டறிக்கை

புதிய கல்விக் கொள்கை ஆபத்து: மாணவர்களிடம் இரண்டாம் கட்டமாக துண்டறிக்கை

புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக்கல்வியா? என்ற தலைப்புடன் மத்திய பா.ஜ.க.வின் கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், இரண்டாம் கட்டமாக சென்னையில் ஆகஸ்டு 13, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் ஜெயின், குருநானக், நியூ கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ், பச்சையப்பன், எம்.ஜி.ஆர் ஜானகி ஆகிய 6 கல்லூரிகளில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 3000 துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டன.  எட்வின் பிரபாகரன், கார்த்திக் இராசேந்திரன், பிரகாசு, கனி செல்வன், பரத்குமார், தமிழ், பிரவீன், யுவராஜ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர்.  நிகழ்வை யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 22082019 இதழ்

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே சென்னையில் சுவர் விளம்பரங்கள்

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே சென்னையில் சுவர் விளம்பரங்கள்

மண்ணிண் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே என்கிற முழக்கத்தோடு திராவிடர் விடுதலை கழகம் ஆறுமுனைகளில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு பள்ளிபாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடத்துகிறது. அதற்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில் நகரமெங்கும் செய்யப்பட்டன. தொடர்புக்கு : 7299230363 / 9710301452.

புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை

புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை

புதிய தேசிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை விளக்கி இரண்டாம் கட்டமாக 3,000 துண்டறிக்கைகளை கல்லூரிகளில் வழங்கி சென்னை மாவட்ட தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இரண்டாம் கட்ட துண்டறிக்கை பிரச்சாரத்தின் முதல் நாளான 13/08/2019 2 கல்லூரிகளில் 1000 துண்டறிக்கைகளை மாணவர்களிடையே வழங்கி சென்னை மாவட்ட கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய தேசிய கல்வி கொள்கையை விளக்கி இரண்டாம் கட்ட பிரச்சாரத்தின் இரண்டாம் நாளான 14/08/2019  நியூ கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் 1000 துண்டறிக்கைகளை வழங்கி கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து இரண்டாம் கட்ட துண்டறிக்கை பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று 16/08/2019 கழக தோழர்கள் 1000 துண்டறிக்கையை பச்சையப்பன் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிகளில் வழங்கி கழக தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். தொடர்புக்கு : 7299297825 / 9962190066.

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

“புதிய தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக் கல்வி” என்கிற தலைப்புடன் மத்திய பாஜக வின் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சேலம் மற்றும் சென்னையில் துண்டறிக்கைகள் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டது. 29.07.2019 அன்று சென்னையில், இராணி மேரி, விவேகானந்தா ஆகிய கல்லூரிகளில் மாணவர் கழகத் தோழர்கள் அருண், பிரவீன், தமிழ்தாசன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர். யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி மாணவர் கழகத் தோழர்கள், ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று நாட்கள் கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கைகளை வழங்கினர். முதல் நாள் 30.07.2019 அன்று, மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பும், பேருந்து நிலையம் முன்பும் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான 31.07.2019, நங்கவள்ளி பேருந்து நிலையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும்...

வேத சாஸ்திரங்கள்படி மனிதர்கள் சமமாக முடியாதாம்

வேத சாஸ்திரங்கள்படி மனிதர்கள் சமமாக முடியாதாம்

இந்த காலத்தில லெ bசைவா-ன்றது எதையுமே சொல்லக் கூடாது மனுசன்ல எல்லாருமே சமம்னு ஒரு வார்த்த  சொல் லிட்டு போயிட்ரா. உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு கெடையாது. அப்டின்னு சொன்னா அதை ஒப்புக் கொள்ள முடியாது. சாஸ்திரம் அதை அங்கீகரிக்கவில்லை. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு உhயசயஉவநசளைவiஉள உண்டு. அப்டின்ரதை சாஸ்திரம், வேதம் சொல்லுகிறது. இதை நான் வெளிப்படையா சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டின்ரா! நான் ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்கோ, எனக்கு தெரியாது இது நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்த வெச்சிண்டு  ஒரு விசயத்த சொல்றேன்! நாம் உபயோகப்படுத்துகிற எல்லா பொருட்களிலும் பிறப்பு குணாதிசயத்தை (bசைவா உhயசயஉவநசளைவiஉள) நாம எதிர்பாக்ரோம். அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால், நம்முடைய மனிதனில் மட்டும் தான் எல்லாரும் சமம்னு வெளிய வாயால சொல்லிட்டு போயிட்ரோம். இப்ப நான் கேட்கிறேன்? எல்லாரும் சமம், ஒருவனுக்கு பிறப்பொழுக்கம் என்பதே வேண்டியதில்லை. பிறப்பினாலே எல்லாரும் சமம்னு சொல்பவர்களிடம்...

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு நிறைவு விழா, பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளதால், நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல், பள்ளிபாளையம் பெரியார் நூல்கடையில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகிக்க காலை 10:30 மணிக்கு தொடங்கியது. நிறைவு விழாவிற்கான நிதியை, கடை வசூல் மூலம் திரட்டுவது எனவும், மாவட்டம் முழுதும் துண்டறிக்கைகளை வழங்குவது, சுவரொட்டிகளை ஒட்டுவது எனவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட கலந்துரையாடல், இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் 04.08.2019 அன்று மாலை 6 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. “மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்புப் பயண”த்தில் கலந்து கொள்வது, பயணத்திற்கான திட்டங்கள், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி  விரிவாக தோழர்களால் கலந்துரையாடப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சமூகநீதியாளர்கள் பங்கேற்று உரை 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்

நடுவண் அரசே! இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்! தமிழக அரசே; 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காதே! என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 29, 2019 மாலை 4.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவர் எழிலன் (இளைஞர் இயக்கம்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), முனைவர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்), மருத்துவர் இரவீந்திரநாத் (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்) ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். சமூக நீதி தத்துவத்தின் நோக்கம் – இடஒதுக்கீடு சந்தித்த தடைகள் – 10 சதவீத இடஒதுக்கீட்டைத் திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் மனுதர்ம சூழ்ச்சி – பா.ஜ.க ஆட்சியின் தேசிய கல்விக்  கொள்கையின் ‘வர்ணாஸ்ரம-குலக்கல்வி’ கருத்துகள்...

இதுதான் பெரியார் மண்

இதுதான் பெரியார் மண்

சென்னை தியாகராயர் நகரில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் மருத்துவர் எழிலன் பேசிக் கொண்டிருந்தார். “கூட்டம் நடக்கும் பகுதியில் அலகு குத்திக் கொண்டு சாமி ஆடிக் கொண்டு ‘ஓம் மகா சக்தி’ என்று முழங்கிக் கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மேளதாளத்தோடு ஊர்வலமாகக் கோயிலை நோக்கிப் போகிறார்கள். அவ்வளவு பேரும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குடும்பத்தினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் எழிலன், பக்தி ஊர்வலம் சென்று முடியும் வரை தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். ஊர்வலம் சென்று முடிந்த பிறகு இந்த மக்களின் உரிமைகளுக்காகத் தான் பெரியார் தொண்டர்களாகிய நாம் போராடி வருகிறோம்” என்று கூறி தனது பேச்சைத் தொடர்ந்தார். அடுத்து பேச வந்த ஆளூர் ஷா நவாஸ், “இங்கே அமைதியாக பக்தி ஊர்வலத்திற்கு வழிவிட்டு பேச்சைக்கூட நிறுத்திக் கொண்டு பக்தர்கள் கடந்து செல்ல அனுமதித்தோம். இதுதான் பெரியார் மண்! நினைத்துப் பாருங்கள். இதுவே விநாயகன் ஊர்வலமாக இருந்திருந்தால்...

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

காமராசர், வி.பி.சிங் சாதனைகளை விளக்கிய எழுச்சி பொதுக் கூட்டம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சமூக நீதித் தூண்கள் காமராசர்-வி.பி. சிங் சாதனைகளை நினைவுகூரும் பொதுக் கூட்டம் ஜூலை 21, 2019 அன்று தியாகராயர் நகர் முத்து ரங்கன் சாலையில் மாலை 7 மணியளவில் பறை இசையுடன் தொடங்கியது. விரட்டு கலைக் குழுவினர் பெரியார், மணியம்மையார், அம்பேத்கர், காமராசர், வி.பி. சிங் குறித்த எழுச்சிப் பாடல்களையும் ‘நீட்’ பாதிப்புகளை விளக்கும் நாடகங்களையும் நடத்தினர். நடுவண் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வித் திட்டம் குறித்த விமர்சனப் பாடல் அனைவரையும் கவர்ந்தது. சைதைப் பகுதி கழகத் தோழர் ப. மனோகரன் வரவேற்புரை யாற்றிட தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி, காமராசர்-வி.பி.சிங் சாதனைகளை நினைவு கூர்ந்து சமூக நீதி உரிமைகள் தமிழகத்தில் படிப்படியாக பறிக்கப்பட்டு பார்ப்பனியம் வேகமாக தலைதூக்கி வருவதை சுட்டிக் காட்டினார். இளைஞர் இயக்கத்தின் நிறுவனரும் பெரியாரிஸ்டுமான மருத்துவர் நா. எழிலன், காமராசரால் சத்துணவுத் திட்டம்...

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

11 மாத ஆட்சியில் வரலாற்றுத் தடம் பதித்தார் வி.பி.சிங்

ட    பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீட்டை மேலும் பத்து ஆண்டுக்கு நீட்டித்துச் சட்டமியற்றினார். ட    புத்த மதத்தைத் தழுவிய  தாழ்த்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு உரிமைகளை அளித்தார். ட    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கான ஆணைக் குழுவுக்கு (கமிசன்) அமைச்சரக அதிகார உரிமையை வழங்கினார். ட    வானொலி, தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி யின் ஆதிக்கத்தை மாற்றத் தன்னாட்சி உரிமம் வழங்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். ட    அமைச்சர், முதலமைச்சர் உள்பட எவர்மீது ஊழல் புகார் வந்தாலும், அவற்றை விசாரிக்கும் (ஆராயும்) ‘லோக்பால்’ எனும் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கச் சட்டமுன் வரைவுக் கொண்டு வரப்பட்டது, அவரது ஆட்சியில்தான். ட    அஞ்சலுறைகளைப் பிரித்துப் பார்ப்பது, தொலைபேசியின் மூலம் ஒட்டுக் கேட்பது போன்ற, மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் அரசியல் சட்டத்தின் அய்ம்பத்தாறாவது பிரிவை நீக்கினார். ட    ஒரு மாநிலத்துக்கு மட்டும் தனியாக, அவசர நிலையை அறிவித்து, அடிப்படை உரிமையைப் பறிக்கும்...

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் பேச்சு அணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை

கூடங்குளத்தில் ‘அணுக் கழிவு மய்யம்’ அமைக்கும் நடுவண் அரசின் ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் 14.7.2019 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ஒரு நாள் எச்சரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: காலையிலிருந்து மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்று கருத்துகளைக் கேட்டு வருகிறீர்கள். அணுஉலை ஆபத்துகளை ஆழமாக உணர்ந்து, அதைத் தடுத்து நிறுத்தி, நமது மண்ணை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை யும் உறுதியும் கொண்டவர்கள் என்பதாலேயே காலை முதல் அர்ப்பணிப்பு உறுதியுடன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். கூடங்குளத்தில் 6 அணுஉலைகளைக் கொண்டு வந்து அணுஉலைப் பூங்காவாகவே மாற்றுகின்றன நடுவண் ஆட்சிகள். இப்போது பா.ஜ.க. ஆட்சி உலகிலேயே மிக மிக ஆபத்தான ‘அணுக்கழிவு கருவூலம்’ என்ற சேமிப்பு கிடங்கினையும் தமிழ்நாட்டிலேயே அமைக்கப் போகிறதாம். அணுக்கழிவு கருவூலம் அல்லது வைப்பகம் ஆபத்துகளை விளக்கி சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் எழுதிய...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04082019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04082019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கமிட்டி, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை இலாயிட்ஸ் ரோடு விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.. மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி பொருப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.. தோழமையுடன் இரா.உமாபதி தொடர்புக்கு: 7299230363

இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை 30072019

இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை 30072019

இந்திய குடியரசு கட்சி நடத்தும், அகில இந்திய விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் (DPI) நிறுவனர்- தலைவர் மற்றும் இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரில் இக்‌ஷா மய்யத்தில், 30.07.2019 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர்விடுதலைக்கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு இராஜாதாலே பற்றின வரலாறுகளை பகிர்ந்து கொண்டார்…

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா சென்னை

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா சென்னை

காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறு பெட்ரிசியன் கல்லூரியில், கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வில் காமராசரின் கல்வி புரட்சி என்ற தலைப்பில், திராவிடர்  விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

பொன்.இராமச்சந்திரன் ரூ.5000 நன்கொடை

கழக ஆதரவாளர் சென்னை பொன். இராமச்சந்திரன், கழகக் கட்டமைப்பு நிதியாக தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரனிடம் ரூ.5000 நிதி வழங்கினார். பெரியார் முழக்கம் 11072019 இதழ்

சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் சென்னை 21072019

சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் சென்னை 21072019

#சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் ஜுலை 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தியாகராயர் நகரில் நடைபெறுகிறது. சிறப்புரையாற்றுவோர் : தோழர்.#கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#விடுதலை_ராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம். தோழர்.#ஆளூர்_ஷாநவாஸ் துனைபொதுச்செயலாளர் விசிக. தோழர்.#மருத்துவர்_எழிலன். அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு : இரா.உமாபதி தென்சென்னை மாவட்ட செயலாளர் 72992 30363  

முகிலன் எங்கே?  சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னை, எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்

சென்னை : சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே, பதில் சொல்! என்ற முழக்கத்துடன், கண்டன ஆர்ப்பாட்டம் 01.06.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நிகழ்வை ஒருங்கிணைத்தது. ஆர்ப்பாட்டம்  ஆர்.நல்லக்கண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஜனநாயக கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தார். எடப்பாடி : சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே? என்ற முழக்கத்துடன் முகிலன் மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில் 06.06.2019 அன்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாலை 4 மணிக்கு, ஆதித் தமிழர் பேரவையின் க.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் சூழலியல் தோழர்கள் கலந்து கொண்டு...

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த சாதிய வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்க வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 23.4.2019 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அன்பு தனசேகரன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் மற்றும் பரந்தாமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் உலகநாதன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண்டன உரை...

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து  வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் (83), ஏப். 30 அன்று முடிவெய் தினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரின் வீட்டில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர்இரா. உமாபதி, கரு. அண்ணாமலை, திருப்பூர் விஜயகுமார், மேட்டூர் முத்து ராஜா உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். திருமதி சுசீலா அம்மையாரின் உடல் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடற்கொடையாக அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09052019 இதழ்

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது. சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30  அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி...

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

02.04.2019 அன்றுகாலை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில்…. துப்புரவு பணியாளர்கள் சாக்கடை அடைப்பு, குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலையில் எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இன்றி வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த மயிலாப்பூர் பகுதியின் இளைஞர்கள் பீரவீன்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களைப் பாதுகாப்புக் கருவியின்றி வேலை செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பணியாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்திய வார்டு 123ஆவது பகுதி மாநகராட்சி பொறுப்பாளர் பலராமனைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். பாதுகாப்புக் கருவிகளை உடனே தருமாறும், அதன் பின்னே அவர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், பலராமன்முன்னுக்கு பின்னான பதில்களைத் தோழர்களிடம் கூறியுள்ளார். துப்புரவுப் பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் பாதுகாப்பு கருவிகளிலின்றி ஈடுபட அனுமதிக்க முடியாது எனக் கூறி, கழக மயிலாப்பூர் பகுதித் தலைவர் மாரி மற்றும் தோழர்கள் சென்னை மாநகராட்சியில்...

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம் சென்னை 30042019

வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம் சென்னை 30042019

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் நடத்தும்…. தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 15 நினைவு நாளில்…. வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம்….. 30.04.2019 (செவ்வாய்கிழமை) அன்று காலை 8.00 மணிக்கு தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் மயிலாப்பூர் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு, வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை, பெரியார் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெறும். விரட்டு கலைக்குழுவினரின் பறையிசை, வீதிநாடகம் நடைபெறும். சிறப்புரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும்….திராவிடர் இயக்க சிந்தனையாளர்கள் அனைவரும் வாரீர் தோழர்களே.! தொடர்புக்கு : 7299230363

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாள் விழா சென்னை 14042019

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாள் விழா சென்னை 14042019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு… நாளை (14.04.2019) காலை 9.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கர் திருவுறுவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் வருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

“கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகம் அண்ணா அறிவாலயத்தில் …

“கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகம் அண்ணா அறிவாலயத்தில் …

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் திருச்செங்கோடு கருத்தரங்கில் உரையாற்றிய தொகுப்பு “கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகத்தை….. இன்று(19.03.2019)காலை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகப் பேச்சாளர், நாடாளுமன்ற வேட்பாளர் தோழர்.ஆ.ராசா அவர்களை சந்தித்து…. கழக தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் ஒ.சுந்தரம் ஆகியோர் புத்தகத்தை வழங்கினர்.ஆ.ராசா அவர்களும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 400 புத்தங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் ! “ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ” சார்பாக 14.03.2019 வியாழன் காலை 10.30 மணியளவில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஐ.நா. வை ஏமாற்றி நீதியின் பிடியில் இருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கையே தமிழகத்தில் இருந்து வெளியேறு! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்தி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வா! என்கிற முழக்கங்களுடன் தி,வி,க,த.பெ.தி.க., விசிக,மநேமக,எஸ்.டி.பி.ஐ,இளந் தமிழகம், தவாக,த.தே.ம.மு.,த.தே.வி.இ.,த.வி.க.,மற்றும் பல்வேறு தோழமை அமைப்பினர் இம்முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தலைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன்,இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், த.பெ.தி.கவின் தோழர் குமரன், த.தே.வி.இ. தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு மற்றும் பல்வேறு அமைப்பை சேர்நத தோழர்கள் கலந்து கொண்டனர். “அபிநந்தனுக்குக்கொரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? “இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து!...

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்: சென்னையில் கழகம் நடத்திய கருத்தரங்கு

காந்தியார் நினைவுநாளையொட்டி வரலாற்றில் ‘பார்ப்பனிய வன்முறைகள்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கத்தில் 24.2.2019 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். கார்த்தி இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். ‘இந்து இராஷ்டிரத்தின் இரத்த சாட்சிகள்: தபோல்கரி லிருந்து கவுரி லங்கேஷ்வர் வரை என்ற தலைப்பில் தோழர் துரை உரையாற்றினார். கோல்வாக்கர் கூறிய ‘இந்து இராஷ்டிரம்’ குறித்தும் பஜ்ரங்க்தள் ஆர்.எஸ்.எஸ். போன்ற ‘சங்பரிவார்’ அமைப்புகள் இரகசிய செயல் திட்டங்கள், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்னால் உள்ள மதவெறி அமைப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார். ‘இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மா.கி.எ. பிரபாகரன், இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியே இப்போதுள்ள அயோத்தி இலலை என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கினார். வால்மீகி இராமாயணம் மட்டுமல்லாது, பல்வேறு இராமாயணங்கள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும்...

முகிலன் எங்கே?  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

முகிலன் எங்கே? சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் படுகொலை குறித்த ஆவணங்களை கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட சூழலியல் போராளி முகிலன் அன்றிரவே காணமல் போனார். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, “தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்!” என்ற முழக்கத்தோடு 27.2.2019 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் முகிலன் காணாமல் போனதற்கு எடப்பாடி அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்ற கண்டன முழக்கங்களோடு துவங்கிய ஆர்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தமிழர் விடுதலைக் கழகம் சௌ.சுந்தரமூர்த்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆ.சா.உமர் பாருக், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித்...

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

*பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.!* *சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்* *சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வரும் 15.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு* கண்டன உரை : *பேராசிரியர்.சரசுவதி* PUCL *முனைவர்.சுந்தரவள்ளி* த.மு.எ.க.சங்கம் *வழக்கறிஞர். அஜிதா* சென்னை உயர்நீதிமன்றம் *தோழர்.பா.மணியம்மை* திராவிடர் கழகம் *தோழர்.மார்ட்டினா* மனிதி *தோழர்.சுதா காந்தி* த.தே.வி.இயக்கம் *விடுதலை இராசேந்திரன்* திவிக *தோழர்.செந்தில்* சேவ் தமிழ் *தோழர்.பிரவீன்* மே 17 இயக்கம் தோழர்களே அனைவரும் வாரீர்.! *தொடர்புக்கு : 7299230363*

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

இலயோலா கல்லூரி வீதி திருவிழவில் இந்துத்துவப் பாசிசத்தைப் படம் பிடிக்கும் முகிலனின் ஓவியக் கண்காட்சி  இடம் பெற்றிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த சில படங்கள் இந்துக்களைப் புண்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் முகிலனை மிரட்டினர்.  இதைத் தொடர்ந்து ஓவியர் முகிலனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில்  01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஓவியர் முகிலனுக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஓவியர் முகிலனுக்கு கழகப்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சால்வை அணிவித்து பெரியார் சிலை மற்றும் புத்தகம் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி ஆகியோர் முகிலன் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் இந்துப் பார்ப்பனியப் புரட்டு வாதங்களையும் அம்பலப்படுத்தி  உரையாற்றினர். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார்...

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் கருத்தரங்கம் சென்னை 24022019

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் கருத்தரங்கம் சென்னை 24022019

பிப்ரவரி 24 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கத்தில் #காந்தியார் நினைவு நாள் #வரலாற்றில்_பார்ப்பனிய_வன்முறைகள்கருத்தரங்கத்தை திராவிடர் விடுதலை கழகம் நடத்துகிறது. சிறப்புரையாற்றுவோர்: தோழர் : #கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம் ( காந்தியார் கொலையின் பிண்ணணி) தோழர் : #விடுதலை_ராசேந்திரன் பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம். (புத்தம் – சமணத்தை வீழ்த்திய பார்ப்பனிய வன்முறை) தோழர் : ம.கி.எ. #பிரபாகரன் (இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்) தோழர் : #துரை (இந்து ராஷ்டிரத்து ரத்த சாட்சிகள் தபோல்கரிலிருந்து கவுரி லங்கேஷ் வரை) அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு : 9962190066 / 7299230363.

நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 07022019

நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 07022019

தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய 28 ஆண்டுகளாக சிறைவாசம் இன்னமும் தொடர்வது நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 07, 2019 அன்று மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை , வி.எம்.தெருவில் நடந்தது #தொடக்கவுரை : தோழர்.க.சு.நாகராஜ் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு திராவிடர் கழகம் #சிறப்புரை : தோழர்.தனியரசு.,எம்.எல்.ஏ தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர்.திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர், மே17 தோழர்.பொழிலன் தமிழக மக்கள் முன்னணி நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் சென்னை திவிக சார்பில் உணவு வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளில், அ.வ.அ.கல்லூரி வாயிலில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகி சாரங்கபாணி நினைவுதூணில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். விசிக திருச்சி மாவட்ட நெறியாளர் வேலு.குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு. மகேசு கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த முத்துக்குமார் நினைவு நாளான 29.1.2019 அன்று கொளத்தூர், சென்னை பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமார் நினைவிடத்தில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்து வீர வணக்கத்தை செலுத்தினார். இதில் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு  அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அருண், கன்னியப்பன், முரளி, வடசென்னை பாஸ்கர், தட்சணாமூர்த்தி ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

ஓவியர் முகிலன் அவர்களுக்கு திவிக நடத்தும் பாராட்டு விழா 01022019

ஓவியர் முகிலன் அவர்களுக்கு திவிக நடத்தும் பாராட்டு விழா 01022019

ஓவியர்.முகிலன் அவர்களுக்கு #திவிக நடத்தும் #பாராட்டு விழா. நாள் : 01.02.2019 நேரம்: மாலை 4 மணிக்கு இடம் : திவிக தலைமை அலுவலகம் பேச. : 7299230363/9962190066. அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கரு. அண்ணாமலை வளர்ச்சி நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்

கரு. அண்ணாமலை வளர்ச்சி நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கரு. அண்ணாமலையின் ‘அன்பு பழச்சாறு மற்றும் தேனீர் அகத்’தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஜனவரி 11 அன்று காலை திறந்து வைத்தார். கழக வளர்ச்சிக்கு ரூ.5000/- கரு.அண்ணாமலை வழங்கினார். பெரியார் முழக்கம் 24012019 இதழ்

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

சென்னை : திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டாக தமிழர் திருநாள்…பொங்கல் விழா 13.01.2019 இராயப்பேட்டை வி.எம்.தெருவில் (பெரியார் சிலை அருகே) மாலை 6 மணிக்கு புதுவை அதிர்வு கலைக்குழுவினரின் பறை யிசை முழக்கத்தோடு தொடங்கியது. கிராமிய கலை பண்பாட்டு பாடல்களோடு பகுதி பொதுமக்களின் ஆரவாரத் தோடும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, பேராசிரியர் சரசுவதி, மக்கள் நீதி மய்யம் சௌரிராஜன், மணிமேகலை மற்றும் திருநங்கைக்காண உரிமை மீட்பு இயக்கத்தைச் சார்ந்த அனுஸ்ரீ, ஆர்.என்.துரை (திமுக, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்வினை இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். தொடர்ச்சியாக சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறுவர், சிறுமியர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக அருண் ரிதம்ஸின் சென்னை கானா, திரைப்படப் பாடல்களோடு மகிழ்ச்சியோடு விழா நிறைவுற்றது. திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்...

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

‘பொருளாதார’ இடஒதுக்கீட்டைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சமூகநீதியை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க அரசின் உயர்சாதிக்கான 10ரூ இட ஒதுக்கீட்டைக் கண்டித்து 11.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத் தலைவர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) வழக்கறிஞர் சேகர் பி.யு.சி.எல்., இராமசந்திரன் (திவிக), இளவேனில் (தமிழ் புலிகள்), சண்முக சுந்தரம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), எம்.எஸ். வேல்முருகன் (சி.பி.அய். எம்.எல்.), வழக்கறிஞர் சக்திவேல் (சி.பி.அய்.), சபரி தமிழ்நாடு மாணவர் கழகம், ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், தண்டபாணி சமூக நீதி கட்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்திற்கு திவிக தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், பாலமுருகன் (பி.யு.சி.எல்.), சிங்கை பிரபாகரன்...

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் மாவட்டம் தோறும் கழகத் தோழர்களை சந்தித்து உரையாடி வருகிறார்கள். சில பகுதிகளில் மாவட்டக் கழக அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. கழக ஏடுகளுக்கு ‘சந்தா’க்களை தோழர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல மாவட்ட கலந்துரையாடல் செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி தலைநகர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட பொறுப்பாளர் களை கழகத் தலைவர் அ றிவித்தார். மாவட்டத் தலைவர் செ.கு. தெள்ளமிழ்து; மாவட்ட செயலாளர் மு. தினேசுகுமார்; மாவட்ட அமைப்பாளர் கா. இரவிபாரதி; மாவட்ட துணைத் தலைவர் சி. சிவாஜி; மாவட்ட துணை செயலாளர் சு. செங்குட்டுவன்; மாவட்ட இளைஞரணி தலைவர் மூ. ராஜேஷ்; மாவட்ட இளைஞரணி செயலாளர் ஊமைத்துரை; மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந. இராமஜெயம்;...

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

மாலை 7.30 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சி 300 அரங்கில் தோழர் பொழிலன் முன்னிலையில் {“அருவி புத்தக உலகம்”} கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 {பொதுமை பதிப்பகத்தில்} தோழர் வேல் முருகன் வெளியிட கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். செய்தி குகன்