ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: சென்னையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் 65ஆம் பிறந்த நாள் நவம்பர் 26ஆம் தேதி பகல் 11 மணியளவில் அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நடிகர் சத்திய ராஜ், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘கற்க’ அறக்கட்டளை சார்பில் கழகப் பொறுப்பாளர் அண்ணாமலை பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகப் பை, நோட்டுகளை வழங்கினார். மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் உமாபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 05122019 இதழ்

You may also like...