Category: திவிக

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தலில் நின்று, தமிழகத்தின் முதல் திருநங்கை ஒன்றியக் (கருவேப்பம்பட்டி) கவுன்சிலராக திமுக சார்பில் வெற்றி பெற்ற ரியா அவர்களை அவரது இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் திருச் செங்கோடு நகரம் சார்பாக, நகரச் செயலாளர் பூபதி, சோம சுந்தரம், விஜய்குமார், பிரகாஷ், மனோஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்ததுடன்,  கழகத்தின் வெளியீடுகளான இவர்தான் பெரியார், கருஞ்சட்டைக் கலைஞர் புத்தகங்கள் மற்றும் நிமிர்வோம் மாத இதழ்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் களியப்பேட்டை கிராமத்தில் உள்ள  பெரியார் சிலை 23.01.2020 அன்று இரவு மர்ம நபர்களால் மர்மமான முறையில்  உடைக்கப்பட்டது. பெரியாரின் சிலை உடைப்பைக்  கண்டித்து செங்கல்பட்டு பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், மர்ம நபர்களை கைது செய்யக்கோரி மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்

ரஜினிகாந்த் வீடு முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

ரஜினிகாந்த் வீடு முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

பெரியாரை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 22.01.2020 அன்று காலை 11 மணியளவில் ரஜினிகாந்த் வீடு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ரஜினிகாந்தின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். செய்தியாளர் சந்திப்பின்போது உமாபதி, ‘இனியும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கா விட்டால் தொடர்ந்து ரஜினிகாந்த் படங்கள் திரையிடப்படும் திரையரங்கங்கள் முற்றுகையிடப்படும்’ என  தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை 6 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சேலம், புதுச்சேரி மற்றும் சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.   பெரியார் முழக்கம் 30012020 இதழ்

‘முழக்கம்’ உமாபதி – பிரியா ஜாதி மறுப்பு மண விழா

‘முழக்கம்’ உமாபதி – பிரியா ஜாதி மறுப்பு மண விழா

திராவிடர் விடுதலைக் கழகத் தோழ ரும் புரட்சிப் பெரியார் முழக்கம் ஏட்டில் எட்டு ஆண்டு காலம் பொறுப்பாள ராகப் பணி புரிந்த வருமான ‘முழக்கம்’ உமாபதி – சி. பிரியா, ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா 19.1.2020 ஞாயிறு மாலை 7 மணியளவில் மயிலாப்பூர் சிசுவிஹார் சமுதாய நலக் கூடத்தில் சிறப்புடன் நடந்தது. மணவிழாவுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். பேராசிரியர் மங்கை வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை இசை மதி, பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினார். பெண்ணிய, பெரியாரிய வரலாற்று ஆசிரியர் வ. கீதா வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். கழகத்  தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து வாழ்த்தினர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000/- நன்கொடையை மணமக்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 23012020 இதழ்

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

திருப்பூரில் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 16.1. 2020 அன்று வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பக திடலில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் திருப்பூர் கழகத் தோழர் சரஸ்வதி பொங்கல் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை அமுதம் கணேசன், லட்சுமணன், தனபால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை 6 மணிக்கு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. கிராமிய பாடல் களுக்கு விஷாலிகா, அனுஸ்ருதா, கீர்த்திகா, கீர்த்தனா, வரதன், வயிரவன், வேல் ஆகிய குழந்தைகள் நடனமாடினர். பாரதிதாசன் கவிதைகளை இளைய பாரதி பாடினார். பெரியாரை பற்றியும் நீட் தேர்வு அவலத்தைப் பற்றி யும் அறிவுமதி பேசினார்.  சிலம்பக் கலையை அறிவுமதி செய்து காட்டினார். பூங் குன்றன் திருக்குறளையும் பெரியார் பாடல்களையும் பாடினார். பெரியார் பாடல்களை யாழினியும் யாழிசையும் பாடினர்; பிரபாகரன் நடனம் ஆடினார்.  மேடை...

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

இசுலாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கல்லக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மும்முனை சந்திப்பில்  08.01.2020 அன்று 4 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடந்தது. கார்மேகம்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கல்லை மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  குமார், அன்பு, துளசிராசா, வீரமணி, சங்கர், கழகத்தில் புதிதாக இணைந்துள்ள நாராயண குப்பம் இராசா உள்ளிட்ட முப்பதிற்கும் மேலான கழகத்  தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

05.01.2020 அன்று காலை 11 மணியளவில்  கழகத்தின் பொறுப் பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேலம் தாதகாப்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் இரா. டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில்  இயக்கத்தின் செயல் பாடுகளை முடுக்கிவிடும் விதமாக முதலாவதாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புகளை துரிதப்படுத்தி ஜனவரி மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், கிழக்கு மாவட்டம் முழுதுமாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், தெருமுனை பிரச்சாரத்துக்காக ஒலிபெருக்கியுடன் கூடிய மேடை வடிவமைப்போடு  சொந்தமாக பிரச்சார வேன் (மஹேந்திர வேன்) ஒன்று வாங்கவும் பொறுப்பாளர்களின் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 16012020 இதழ்

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

தமிழ்நாடு மாணவர்  கூட்டமைப்பு சார்பாக கோவை  பந்தயச் சாலையில் 10.01.2020 அன்று மாலை 4 மணியளவில்,  புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ‘வன்முறை’யாளர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகம் கனல்மதி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். சபரி கிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்), தினேசு (இந்திய மாணவர் மன்றம்), சம்சீர் அகமது மாநில அமைப்பாளர் (இந்திய மாணவர் ஜனநாயக சங்கம்), பூர்ணிமா (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), சந்தோஷ் (தமிழ்நாடு மாணவர் கழகம்), அபுதாகீர் (Campus), சண்முகவேல் பிரபு (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சௌந்தர் (தமிழ்நாடு மாணவர் கழகம்), பிரசாந்த் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழ்நாடு மாணவர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்பாட்டத்தில், இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களோடு...

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரசினிகாந்த் மீது நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்படும் . நீதிமன்ற படிக்கட்டுகள் சில நேரங்களில் மிக நீண்டதாகவும் நெடியதாகவும் இருக்கிறது . எவ்வளவு தூரமாக இருந்தாலும் இலக்கை அடையும் வரை நம்முடைய பயணம் தொடரும். மீண்டும் வழக்கு தொடர கழக தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார் ஆகவே நீதிக்கான போராட்டம் தொடரும் . துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார். ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர். சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்....

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 12ஆவது சந்திப்பு 04.01.2020 அன்று  மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் தலைமை வகித்தார். ‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்’ நூலை ஆய்வு செய்து, இமானுவேல் துரையும், ‘ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வதந்திகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரனும் கருத்துரை வழங்கினர்.  CAA மற்றும் NRC குறித்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  விரிவாக சிறப்புரையாற்றினார். இறுதியாக இசை இனியாழ் நன்றி கூறினார். நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்றார். சென்னையைச் சார்ந்த தோழர்கள் அறிவுமதி, ஆதவன், தமிழன்பன், வினோத் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

கொளத்தூரில் ஜாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தின் மீதான நடவடிக்கைகள் ! சேலம் மாவட்டம் கொளத்தூரில் 09.03.2020 அன்று நடைபெற்ற செல்வன் – இளமதி ஜாதி மறுப்பு திருமணத்தையொட்டி ஜாதி வெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதல், ஆள்கடத்தல்,கொள்ளை இவற்றின் மீதான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைகள் 2. (இணைப்பு) ( 09.03.2020 அன்று கொளத்தூரில் நடந்தது என்ன ? அறிய : https://www.facebook.com/1630392030578024/posts/2651540068463210/ ) திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்தோழர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த 09.03.2020 நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக மனமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளமதியின் தந்தை, பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை ஆகிய குற்றங்களுக்கான மணமகன்...

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!! இனமானப் பேராசிரியர் இன்று முடிவெய்திவிட்டார். நிறை வாழ்வு அவர் வாழ்ந்திருக்கிறார். திராவிடர் இயக்கத்தின் ஆற்றல் மிகு பேச்சாளர், எழுத்தாளர். தான் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக தன் வாழ்நாள் முழுதும் தடம் பிறழாமல் வாழ்ந்து காட்டிய ஒரு உன்னதமான சுயமரியாதைக்காரர். நீண்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் திராவிடர் இயக்கத்தில் மூத்தத் தலைவர்களில் ஒருவரை இன்றைக்கு தமிழகம் இழந்து நிற்கிறது. மாணவப் பருவத்திலிருந்து தொடங்கி, திராவிடர் இயக்கத்தின் பயணத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான சிந்தனையாளரை இழந்து நிற்கும் தமிழகத்தின் உணர்வுகளோடு திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னுடைய உணர்வுகளை, இரங்களை, துயரத்தை பகிர்ந்து கொள்கிறது. #விடுதலை_இராசேந்திரன் #பொதுச்செயலாளர்_திராவிடர்_விடுதலைக்_கழகம்

திருப்பூரில் மகளிர் தின விழா !  கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம் மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா 09.03.2020 திங்கள்கிழமை மாலை 7.00 மணியளவில் திருப்பூர் குமரன் சாலை,நளன் உணவக அரங்கில் நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரின் பகுத்தறிவுப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தோழர் பார்வதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். கவிஞர் கனல்மதி அவர்கள் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் குறித்த விமர்சனஉரையாற்றினார். அடுத்து தோழர் விஜயகுமார் தோழர் ஆசிட் தியாகராஜனின் வாழ்வும் பணியும் குறித்து உரையாற்றினார். இந் நிகழ்வில் தோழர் ஆசிட் தியாகராஜன் அவர்களின் படத்தை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களின் படத்தை தோழர் சுசீலா அவர்களும், இனமானப் பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார்கள். விளையாட்டுப் போட்டிகளில்...

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை மீட்க வலியுறுத்தி சென்னையில ஆர்ப்பாட்டம் !

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை மீட்க வலியுறுத்தி சென்னையில ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன் சென்னையில ஆர்ப்பாட்டம் ! நேரம் : மாலை 4 மணி இடம் : சிம்சன் பெரியார் சிலை அருகில், சென்னை. தமிழக அரசே ! காவல்துறையே ! ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை_உடனடியாக_மீட்க_வலியுறுத்தியும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், #ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்… தலைமை : தோழர் உமாபதி, தென்சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தொடர்புக்கு :7299230363

இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் !

இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன் மதுரையில் ஆர்ப்பாட்டம் ! நேரம் : மாலை 4 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம் அருகில், மதுரை. தமிழக அரசே ! காவல்துறையே ! ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தியும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், #ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திருவள்ளுவராண்டு 2051 (9 – 2 – 2020) – அன்று வ.உ. சி. திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:   வீரவணக்கத் தீர்மானங்கள்   சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய வலியுறுத்திக் கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957 ஆம் ஆண்டு சாதிஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில்  ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 – ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது....

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் ! நாள் : 01.02.2020 சனிக்கிழமை. நேரம் : மாலை 7.00 மணி இடம் : வடக்கு வீதி,நாச்சியார்கோயில், #தஞ்சை_மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், தஞ்சை மாவட்டம்.

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த அவதூறு வழக்கின் தற்போதைய நிலை என்ன ? நீதிமன்றம் என்ன கூறியுள்ளது ? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு அவதூறை நடக்காத ஒரு சம்பவத்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசினார். நடக்காத ஒன்றை உள் நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இந்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வலியுருத்தினார்.மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசிய ரஜினியின் மீது தக்க சட்ட நடவடிக்கை கோரி தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கழகத்தோழர்கள்...

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

1971-ஆம் ஆண்டு சேலம் பேரணியில் நடந்த விஷயம் வெளிவந்த துக்ளக் ஏட்டை காண்பிக்காமல் அவுட்லுக்கின் ஜெராக்ஸை ரஜினி காட்டுவது ஏன் என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார். துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது. இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி. ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என்பதால் வரலாற்றை தவறாக கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக அமைப்புகள் கோரின. கற்பனை இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கையில் ஒரு பத்திரிகையை காண்பித்த ரஜினிகாந்த், நான்...

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை : – அன்பார்ந்த தோழர்களுக்கு, என் வணக்கங்கள். துக்ளக் ஏட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பெரியாரை – பெரியாரின் இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் இரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவருடைய அவதூறு பேச்சுக்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தோம். அவ்வாறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் நகல் ஒன்றினையும் அந்த காவல்நிலையங்களில் புகாரைப் பெற்றுக்கொண்டதற்காக கொடுக்கப்பட்ட சிஎஸ்ஆர் இரசீது நகலையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் பெற்று கொண்ட பின்னாலும் அதற்கான சிஎஸ்ஆர் வழங்கப்படாமல் இருக்குமேயானால்,மீண்டும் ஒருமுறை அந்த புகாரினுடைய படியை வைத்து அதனுடன் “நாங்கள் இத்தனையாம் நாள் உங்களிடம் அளித்த...

நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை சென்னை 22012020

நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை சென்னை 22012020

தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பேசி, பெரியார் மீது அவதூரை பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையரிடத்தில் 18.01.2020 அன்று காலை 11 மணியளவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என்று உமாபதி அறிவித்தார். அதன்படி இதுவரை காவல்துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நடிகர் ரஜினிகாந்தும் இதுவரை தனது அவதூறு கருத்திற்கு வருத்தமும் தெரிவிக்காத காரணத்தினால், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் அவர்களின் வீடு முற்றுகையிடப்படவுள்ளது.   சென்னை மாவட்ட கழகம்  

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் இரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செ வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார்...

தமிழர் திருநாள் பொங்கல் விழா சென்னை 13012020

தமிழர் திருநாள் பொங்கல் விழா சென்னை 13012020

தமிழர் திருநாள் பொங்கல் விழா பொதுக்கூட்டம் திருவல்லிக்கேணி பகுதி சார்பாக நடைபெறவிருக்கிறது… இயக்குனர் வெற்றிமாரன் விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் பேராசிரியர் சுந்தரவள்ளி தமுஎகச திருநங்கை சாம்பவி சாதிக்கப் பிறந்தவர்களின் சமூக அமைப்பு.. ஆர்.என்.துரை திமுக சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர். ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.. நாள்: 13.01.2020 திங்கள் கிழமை நேரம்: மாலை 5 மணி

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

கோவை மாவட்டம் அன்னூர், நல்லி செட்டிப்பாளையத்தில் ஜன. 5, 2020 அன்று கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர்  வெள்ளிங்கிரி  தலைமையில்  திராவிடர் விடுதலைக் கழகக் கொடியை மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் ஏற்றி வைத்தார். பெயர்ப் பலகையை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி திறந்து வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் மந்திரமா தந்திரமா செய்து விளக்கிக் காட்டினார். நல்லிசெட்டிபாளையம் மோகன் உறுதிமொழி வாசிக்க தோழர்கள் வழி மொழிந்தனர்.  அதனைத் தொடர்ந்து  விஷ்ணு, மோகன் குமார், பார்த்திபன், மனோ ரஞ்சினி, தேவ பிரகாஷ், வெற்றிவேல், கோகுல், நந்தகுமார், தினேஷ் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர். மற்றும் மாவட்ட மாநில தோழமைக் கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் சாமியார்களின் பித்தலாட்டங்கள் குறித்து விளக்கியும், இந்த அமைப்பு ஏன்? எதற்காக? என்றும் விளக்கமாக கருத்துரையாற்றினர். புதிய தோழர்களை உருவாக்குதல் முதல் அனைத்து  நிகழ்ச்சிகளையும் களப்பணியாளர் விஷ்ணு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ...

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக 01.01.2020 நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டமும் தொடர்ந்து பத்திரிக்கை யாளர் சந்திப்பும் 02.01.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் வட்டாரப் பேச்சு வழக்கில் நெல்லை கண்ணன் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் உள்நோக்கம் கற்பித்த தோடு அதனைப் பெரிதுபடுத்தி தமிழக அரசு அவரை கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, தொடர்ச்சியாக மதம், சாதி, மொழி, இனம் அடிப் படையில் மக்களிடையே பாகு பாட்டை உண்டாக்கி கலவரத்தை தூண்டுகிற விதத்தில் பேசி வரும் எச்.ராஜா போன்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைவர்களை பல்வேறு புகார்கள், வழக்குகளுக்கு பின்னரும் கைது செய்யாமல் இருப்பது உள் நோக்கம் கொண்டது. எனவே, நெல்லை கண்ணனை விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், கலவரத்தைத் தூண்டும்...

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

NRC – CAA பற்றிய ஆய்வரங்க நிகழ்வு 31.12.2019 அன்று மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில்  நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி BJP, RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் வன்முறையாட்டங்களையும், அவர்களின் சதித் திட்டங்களையும் CAA, NRC சட்டத்தின் அபாயத்தையும் ஆதாரபூர்வமாக விளக்கி நீண்ட உரையாற்றினார். இந்நிகழ்வில் விசிக வேலூர் பாராளுமன்ற செயலாளர் சிவ. செல்லபாண்டியன், த.ஒ.வி.இ. துணைச் செயலாளர் செவ்வேள், திக மண்டல செயலாளர் சடகோபன் ஆகியோர் உரையாற்றினர்.  பல்வேறு தோழமை அமைப்புகளின் தோழர்கள், பொது மக்கள், பெண்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். முழக்கம் எழுப்பபட்டது. பின்பு பெரும் திரளாக தோழர்கள் ஒன்றுதிரண்டு ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் அரங்கம் வரை சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை வேலூர் மாவட்ட கழகத் தோழர்கள் செய்தனர். கழகத் தலைவர் உரை காண சொடுக்கவும் பெரியார்...

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளைத் தவிர, இஸ்லாமியர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பேரணியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பங்கேற்றது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா. உமாபதி, அய்யனார், அன்பு தனசேகர்  மற்றும் மயிலை சுகுமார், வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், ராஜீ, தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர் கள் ஏராளமாகப் பங்கேற்றனர். ஈரோட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட தோழர்களும் குடியாத்தம் பகுதி, காஞ்சிபுரம் பகுதி கழகத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். கழகக் கொடிகளுடன் ஒலி பெருக்கி வழியாக கழகத் தோழர்கள்...

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திருவள்ளுவர் இலக்கியப் பேரவை மற்றும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில், திண்டுக்கல்லில் அரசின் ஆணையிருந்தும் 20 ஆண்டுகளாகத் திறக்க முடியாமல் முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலையை உடனே நிறுவிட அரசின் ஒப்புதலை வேண்டி, 13.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பெரியார் சரவணன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கோவை இராமகிருட்டிணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி)   உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத்திருத்தம் பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் – பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டி காட்டினார். இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் ( 18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை  சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான...

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

அகில இந்திய மற்றும் தமிழ்நாடு அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் பதக்கம் வென்றவர் களுக்கு திவிக சார்பில் நினைவு பரிசுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் வழங்கினர். அகில இந்திய போட்டியில் அஸ்வின் – வெண்கலம், பிரவீன் – வெள்ளி, மகேஷ் – வெள்ளி, ராஜ் – வெண்கலம், சரண் – வெண்கலம், மாணிக்கம் – வெண்கலம், கார்த்திக் – வெண்கலம் வென்றனர். தமிழ்நாடு அளவிலான போட்டியில் மாணிக்கம் தங்கப் பதக்கத்தையும், கார்த்திக் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.  நிகழ்வில் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 100 சந்தா மற்றும் மாத ஏடான நிமிர்வோமிற்கான 20 சந்தா தொகைகளை கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரிடம் மயிலை பகுதி சார்பாக தோழர்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 19122019 இதழ்

நாகை திருவள்ளுவன் மீதான பொய் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை திருவள்ளுவன் மீதான பொய் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில்  சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததற்கு நீதிக் கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதைக் கண்டித்து பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக  கண்டன ஆர்ப் பாட்டம் 09.12.2019 அன்று மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சுவர் கட்டிய சிவசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவனை தாக்கிய காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

திண்டுக்கல்லில் இராவணன்  படத்திறப்பு

திண்டுக்கல்லில் இராவணன் படத்திறப்பு

முடிவெய்திய கழகத்தின் பெரியாரியப் பணியாளர் இராவணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 15.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல், தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள வாழ்க வளமுடன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் புலேந்திரன் தலைமை தாங்கினார். ஆனந்த் முனி ராசன், மரிய திவாகரன், கி. இரவிச்சந்திரன், கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பெரியார் நம்பி வரவேற்புரையாற்றினார். இராவணன் படத்தைத் திறந்து கழகத் தலைவர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மீ.த. பாண்டியன், துரை சம்பத் (த.பெ.தி.க.), பொள்ளாச்சி விஜயராகவன், உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 19122019 இதழ்

அரசியல் சட்ட எரிப்பு நாள் – தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம்

அரசியல் சட்ட எரிப்பு நாள் – தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம்

மதுரை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நவம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர்.மீ.த.பாண்டியன்; தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன்; தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரைச் செயலாளர் பெரியார் சரவணன்; மகாமுனி – மே 17; குமரன் – புரட்சிகர இளைஞர் முன்னணி; கிட்டு ராசா- தபெதிக; பரிதி -தமிழ் தமிழர் இயக்கம்; மணிபாபா- தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். அன்று மாலை 6 மணிக்கு  “ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள்” கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர்.மதிமாறன் சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதன். மா.பா தலைமை தாங்கினார். மாநகர் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார்.  வழக்கறிஞர்கள் – சட்ட கல்லூரி மாணவர்கள் -ஆதித்தமிழர் பேரவை , அகில இந்திய...

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வு – சந்திப்பு – டிசம்பர் 11ஆம் தேதி தியாகராயர் நகர் சபரி உணவகத்தில்  நடந்தது. கழகத் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்துடன் பங்கேற்று – அன்பு தனசேகரின் துடிப்பு மிக்க கொள்கை செயல்பாடு களையும் – துணைவியார் லதா, அனைத்து குடும்பப் பொறுப்புகளையேற்று செயல்பட்டு வருவதையும் பாராட்டினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர் அன்பு தனசேகர் பல ஆண்டுகாலமாக பெரியாரிய கொள்கைகளை பரப்புவதிலும் இயக்கச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கேற்று செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசினார். அன்பு தனசேகர் -லதா, அன்பு மகள்கள் தமிழ்ச் செல்வி, இளவேனில் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப் பட்டது. பெரியார் முழக்கம் 02012020 இதழ்

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

சேலம் மேட்டூரில் 2019 மே 25 ஆம் தேதி  நடைபெற்ற நாத்திகர் பேரணி விழாவில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் ரூ 1,11,400 கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டது. அதில் குமாரபாளையம் பகுதியில் நிதி அளித்தவர்கள் விவரம்: குமாரபாளையம் மாதுராசு   ரூ. 5000 ஆ.சுப்பிரமணி, கல்லிபாளையம்    ரூ. 5000 மோகன் கிருட்டிணவேணி   ரூ. 5000 பா.செல்வராஜ்   ரூ. 5000 T.சேகர், ஏஜென்சி பவானி   ரூ. 5000 மு.சாமிநாதன் சந்திரா ரூ. 5000 உதயம் ஆப்டிக்கல்ஸ்     ரூ. 1500 ஸ்ரீராம் கார்மென்ட்ஸ்      ரூ. 2000 லோகேஸ் கங்கா      ரூ. 1000 மாயாவி, காளிப்பட்டி   ரூ. 1000 M.G நாத், பவானி     ரூ. 1000 கௌதம், G L லூம்ஸ்                 ரூ. 2000 EB AD சீனிவாசன்     ரூ. 1000 செல்வராஜ்      ரூ. 2000 திராவிடமணி கௌதம்      ரூ. 1000 மோகன்   ரூ. 1000 காந்தகுரு...

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் NRC மற்றும் CAA  திருத்த சட்டங்களை திரும்ப பெற மத்திய மாநில அரசை வலியுறுத்தி 23.12.19 திங்கள் கிழமை தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம்  மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. பிரசாந்த்  (நகரச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்) இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.  தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கார்த்திகா, பவானி முன்னிலை வகித்தனர்.  தேன்மொழி (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), சம்சீர் அக்மத் (மாவட்டச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்), முகமது சஹீத் (மாநில ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக மாணவர் பேரவை),  அஸ்லாம் (தமிழக மக்கள்  ஜனநாயக கட்சி)  ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலுக்கு எதிராக  கண்டன உரையை பதிவு செய்தனர். திவிக மாநில பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திருவள்ளுவர் பேரவை அருண், திவிக தோழர்கள்...

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

செயலவையில் 2020ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டன. கழகத் தோழர்கள் நாள் காட்டிகளை வாங்கிச் சென்றனர்.  கழக ஏடுகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் இரசீது புத்தகங்களையும் தோழர்கள் பெற்றுச் சென்றனர். இவ்வாண்டு நாள்காட்டியில் சமூகத்துக்குப் போராடிய பெண் போராளிகள் படம் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்கு : தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். பேசி: 9941759641 நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ. 70/- ஓவியர் பரதன் வடிவமைப்பில் உருவாகும் நாள்காட்டி: ஒவ்வொரு ஆண்டும் கழக நாள்காட்டியை இயக்க ஆதரவாளர் ஓவியர் பரதன் – எம்.எஸ். ஆப்செட் நிறுவனம் வழியாக அதற்கான படங்களை  எந்த கட்டணமும் இன்றி சிறப்புடன் வடிவமைத்து தருகிறார். கழக சார்பில் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

கழக செயலவை யில் கழகக் கட்டமைப்பு நிதி யாக ரூ.35,000/- தர்மபுரி மாவட்டத் தலைவர் வேணுகோபால், அமைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் கழகத் தலைவர், பொதுச் செய லாளரிடம் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 02012020 இதழ்

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பேராவூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பா. பாலசுந்தரம், திராவிட முன்னேற்றக் கழகம் க. அன்பழகன், திராவிடர் கழகம் இரா. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி ஷேக். இப்ராஹிம், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழகம் நாவலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’ என்ற தலைப்பில் தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ. திருநாவுக்கரசு, கல்வியாளர்கள் கே.வி. கிருஷ்ணன், புலவர் சு போசு, தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஆ. ஜீவா,...

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயலவைக் கூட்டத்தில் பேசிய கழகப் பொறுப்பாளர்கள், 2020ஆம் ஆண்டில் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக செயலவை, சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் டிசம்பர் 28, 2019 அன்று காலை 10.30 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தென்சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் மயிலை சுகுமார், கடவுள், ஆத்மா மறுப்பு முழக்கங்களைக் கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் கடந்தகால செயல்பாடுகள் – பெரியாரியலை எதிர்நோக்கும் ஆபத்துகள், கழக அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து தலைமைக் குழுவில் நடந்த விவாதங்கள், கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ குறித்த வரவு செலவு கணக்குகளை விளக்கி ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து கழகத்...

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

தலைமை நிலையத்தில் இராவணன் படத்திறப்பு

தலைமை நிலையத்தில் இராவணன் படத்திறப்பு

30.11.19 அன்று மாலை 6 மணிக்கு  திவிக தலைமை அலுவல கத்தில், முடிவெய்திய முழு நேரப் பெரியாரிய தொண்டர் இராவணன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி திறந்து வைத்தார். தோழர் இராவண னுடனான நட்பு குறித்தும் அவர் பெரியார் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். இந்த மரணம் நமக்கு என்ன உணர்த்துகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? என்றும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவரைப் போல் கொள்கையை முன்னெடுத்து செல்வதிலேயே உள்ளது என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்கள். மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி, இராவணன் குடியிருந்த இல்லத்தின் உரிமையாளர் கவிதா, ஊடகவியலாளர், பாலிமர் ரமேஷ், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் உரையாற்றினர். அய்யனார் தலைமை தாங்கினார். பெரியார் முழக்கம் 12122019 இதழ்

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர்,  இயல்,  விஷ்ணு, பார்த்திபன் ...

‘ஜெய் பீம்; ஜெய் பெரியார்’ முழக்கங்களுடன் பெங்களூரில் சுயமரியாதைத் திருமணம்

‘ஜெய் பீம்; ஜெய் பெரியார்’ முழக்கங்களுடன் பெங்களூரில் சுயமரியாதைத் திருமணம்

7.12.2019 சனிக்கிழமை அன்று பெங்களூர் ‘கற்பி, ஒன்று சேர்’ அமைப்பின் ஏற்பாட்டில், பெங்களூர் சேஷாத்திரிபுரம் ஏ.வி. வரதாச்சாரி நினைவு அரங்கில் வேலூர், அங்கராங்குப்பம், கலா-கோவிந்தன் இணையரின் மகன் சிவக்குமார் – திருவள்ளூர் மாவட்டம் மாலம்மாள்-ஆனந்தன் இணையரின் மகள் அன்னபூரணேசுவரி ஆகியோரின் ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தார். அன்று காலை 11 மணியளவில் பகுத்தறிவு, ஜாதியொழிப்பு இன்னிசை நிகழ்வோடு நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை ஹெப்பால் பழங்குடி மக்களின் கலை நிகழ்வு, ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறையிசை நடந்தது. நண்பகல் உணவுக்குப் பின்னர் நாத்திகனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல் 4.30 மணியளவில் கழகத் தலைவர் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா தொடங்கியது. விழாவின் தொடக்க உரையை மைசூர் உரிலிங்கப்பட்டி மடத்தின் அருட்திரு ஞானப் பிரகாச சாமிகள் ஆற்றினார். தனது உரையில்...

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 8.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வன், அய்யனார், இரா. உமாபதி, பாரி சிவக்குமார், மேட்டூர் சக்தி ஆகியோர் பங்கேற்றனர். கழகத்தின் பரப்புரைத் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 28 சனிக்கிழமை சென்னையில் கழகச் செயலவைக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செயலவையில் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு, செயல்...

நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை

நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை

மேட்டுப்பாளையம் நடுவூரில் 17 தலித் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து நீதி கேட்டுப் போராடிய தோழர்கள், பொது மக்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தடியடி நடத்தி கைது செய்தது. தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகக் கோவை மாநகர கழகத் தலைவர் நேரு தாசு, திராவிடர் தமிழர் கட்சியைச் சார்ந்த வெண்மணி, வழக்கறிஞர் கார்க்கி உள்ளிட்ட 28 தோழர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 நாளுக்குப் பிறகு டிசம்பர் 7 அன்று நாகை திருவள்ளுவன் தவிர மற்ற தோழர்கள் பிணையில் விடுதலையானார்கள். பெரியார் முழக்கம் 12122019 இதழ்

17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சேலத்தில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சேலத்தில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

டிசம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் அருகே தலித் மக்கள் கண்களில்படக் கூடாது என்ற நோக்கில் கட்டப்பட்ட ஜாதிச்  சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. சென்னை மாவட்டக் கழக சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை : திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் கரு. அண்ணாமலை, மயிலைப் பகுதி தோழர்கள் சுகுமார், இராவணன், மனோகர், கன்னியப்பன், எட்வின் பிரபாகரன், திருவான்மியூர் வெங்கடேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் செந்தில், மே 17 இயக்கத் தோழர்கள் மற்றும் எஸ்.டி.பி.அய். மக்கள்...

நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்

நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்

நீலம் பண்பாட்டு மய்யம் சார்பில் ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்’ நவம்பர் 26ஆம் தேதி மாலை சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக் கழக சேவை மய்யத்தில் நடந்தது. ‘பிளாக் பாய்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயக்குனர் ரஞ்சித் அறிமுக உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரசியலமைப்பு நகலை அறிமுகம் செய்து, புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய ஆழமான உரையை சுட்டிக் காட்டிப் பேசினார். அம்பேத்கர் மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு எழுதிய நூலில் வடநாடு பிற்போக்கானது; தென்னாடு முற்போக்கானது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்னகத்தை அடக்கியாளுவதற்கேற்ப மாநிலப் பிரிவினை நடத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு தென்னாட்டில் ஹைதராபாத்திலும் ஒரு தலைநகரம் உருவாக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டினார். நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ் கட்சி), சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), திருமுருகன் காந்தி (மே 17), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஜக்கையன் (ஆதி...