கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

6.1.2023 மாலை 4 மணிக்கு சங்கராபுரம் வாசவி அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார், மாவட்ட செயலாளர் க. இராமர்,  மாவட்ட அமைப்பாளர் கி. சாமிதுரை, சங்கை ஒன்றிய செயலாளர் அன்பு ரவி, ந. வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், கழகம் ஏற்படுத்திய நிகழ்வுகள் ஆகியவைகளைப் பற்றித் தோழர்கள் கருத்து பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், க.ராமர் மு.நாகராஜ், கி.சாமிதுரை, மா.குமார், அன்பு ரவி, கார்மேகம், பெரியார் வெங்கட் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர்களான தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு உதாரணங்களைக் கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் இப்போது உள்ள அரசியல் சூழல்களுக்கு ஏற்றவாறு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கி பேசினார். அன்பு நன்றி கூறினார். மாவட்ட துணைச் செயலாளராக ந. வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். கலந்தாய்வு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி முன்னாள் மாவட்டத் தலைவர் பால்ராசு மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு மாவட்ட கமிட்டி சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளரும், புரட்சி பெரியார் முழக்க ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களையும் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு நாட்டுடைமையாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு விடுதலை இராசேந்திரனுக்கு பாராட்டுக்களையும். வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

 

பெரியார் முழக்கம் 26/01/2023 இதழ்

You may also like...