விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு
விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-12-22 அன்று மாலை 4.30 மணியளவில் கழக மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், காவை. ஈஸ்வரன், ந. அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு கழகம் விழுப்புரம் மாவட்ட அளவில் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் ஜாதி பிரச்சனைகள், தலித் மக்கள் சுடுகாட்டில் பிணத்தை அடக்கம் செய்வதில் பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. இதுகுறித்து மாவட்ட கழகத் தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்க வேண்டும் என்றும் இன்றைய அரசியல் சூழல், கழக வார ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்த்தல் குறித்தும் விரிவாகப் பேசினார்கள்.
நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர்மணி கழக வாரஏடு பெரியார் முழக்கத்தின் அவசியத்தையும் மக்களிடம் கழகத்தின் நிலைபாட்டை தெரிவிக்கும் விதமாக கொண்டு சேர்க்க வேண்டியதையும் பெரியார், அம்பேத்கர் ஜாதி பாகுபாட்டிற்கு காரணமான இந்து மதம் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் விதமாக தொடர்ந்து மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்ததை வரலாற்று தகவலுடன் விரிவாக பேசினார்.
கழக மாவட்டத் தலைவர் பூஆ. இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் மாவட்ட அளவில் புதிய தோழர்களை இணைப்பது கிராமப் பகுதிகளில் தெருமுனை பரப்புரை, கருத்தரங்கம் பொதுக் கூட்டங்கள் நடத்துவது துண்டறிக்கை போஸ்ட்டர்கள் மூலம் மற்றும் கழக வார ஏடு சந்தாக்களை சேர்த்து கழக செயல்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் களப்பணியை மேற்கொள்ள உள்ளதாவும் விக்கிரவாண்டி அடுத்து கட்டயம் பூண்டியில் தலித் மக்கள்பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததற்கு கழக சார்பில் கழகத் தோழர் சட்டக் கல்லூரி மாணவர் அன்பழகன் உட்பட 10 க்கும் சட்டக் கல்லூரி மாணவர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தோம் விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் இதுபோன்று இனிமேல் நடக்காது என்றும் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுடுகாடு அமைக்க உள்ளதை உறுதிபடுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் உங்களுக்கு ஜாதி ரீதியான பிரச்சனையை அவர்கள் ஏற்படுத்தினால் திராவிடர் விடுதலைக் கழகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை தெரிவித்து விட்டு வந்தோம் மாவட்ட அளவில் வேறு இடங்களில் ஜாதி கொடுமைகள் நடந்தால் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று நடவடிக்கை எடுக்க துணை நிற்போம் என்று அறிவித்தார்கள்
நிகழ்ச்சியில் கழக இளைஞரணி செயலாளர் கிருஷ்ணராஜ், கழக இளைஞரணி அமைப்பாளர் அழகர் மற்றும் கழகத் தோழர்கள் தமிழ்ச் செல்வன், உதயன், நந்தகுமார், அறிவுடைநம்பி, சக்திவேல், நிவேதிதா, கவியரசன் விழுப்புரம் கமல், புஷ்பராஜ், கோட்டகுப்பம் பகுதி தோழர்கள் செல்வகுமார், வினோத்ராஜ் சாந்தி நிலையம் மேலாளர் அய்யா பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
கழகத் தலைவர் மற்றும் கழக மாநில பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது தோழர்களுக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாவட்ட தலைவர் நன்றி கூறி கூட்டம் நிறைவு பெற்றது.
பெரியார் முழக்கம் 22122022 இதழ்