கோவை மாவட்டக் கழக முடிவுகள்
கோவை மாநகர மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.12.2022 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா. இராமச்சந்திரன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
- பெரியார் முழக்கம் சந்தா சேர்த்து டிசம்பர் இறுதிக்குள் தலைவரிடம் ஒப்படைப்பது.
- டிசம்பர் 6 / டிசம்பர் 24இல் அம்பேத்கர்/பெரியார் நினைவு நாட்களில் வீரவணக்கம் செலுத்துவது.
- கோவையில் கழகத் தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது
- கோவை மாநகரப் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டன.
- கோவை மாநகர. தற்காலிக அமைப்பாளராக நா.வே.நிர்மல் குமார் நியமிக்கப்படுகிறார்.
- கோவை மாநகரில் தோழமை இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும் மாநகரத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்து கொள்வதாக இருந்தால் அமைப்பாளரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றே கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 08122022 இதழ்