வேலூரில் பெரியார் வெங்கட் இல்லத் திறப்பு விழா

வேலூர் மாவட்ட திராவிட விடுதலைக் கழகத் தோழர் பெரியார் வெங்கட்  இல்லத் திறப்பு விழா 30.10.2022 அன்று வேலூர் கன்னிகா புரத்தில், மாவட்டத் தலைவர் திலீபன்  தலைமையில் நடைபெற்றது .

திராவிடர் விடுதலை கழகத் தலைமைக் குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார்  இல்லத்தினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் வெங்கட் வரவேற்பு கூறினார். நிகழ்வில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திறப்பு விழாவிற்கு பின் நடைபெற்ற வேலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாநகர  அமைப்பாளராக  பெரியார் வெங்கட்டை  நியமிக்க வேண்டும் என்று தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். தலைமை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்டத் தலைவர்  திலீபன், மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டப் பொருளாளர்  சதீஷ், தலைமைக் கழகச் செயற்குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர்.

பெரியார் முழக்கம் 03112022 இதழ்

You may also like...