கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்
சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், 28.05.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில், முருகேசன் திருமண மண்டபத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நோக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் வேழவேந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கான வரவு செலவு கணக்குகள் குறித்தும் செயலவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் “எது திராவிடம்! எது சனாதானம்!” சென்னையில் 200 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், கரு.அண்ணாமலை உட்பட்ட சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் 25.5.2023 அன்று கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு...
