உணர்வுகளைப் பகிர்ந்த பெண்கள் சந்திப்பு
அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு நிகழ்வு, 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தொங்கி மாலை 5.30 வரை நடைபெற்றது.
நிகழ்விற்கு தேன்மொழி தலைமை ஏற்று நடத்தினார். ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். மதிவதனி அன்னை மணியம்மையார் குறித்து தொடக்கவுரை ஆற்றினார்.
குறளரசி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களான அன்னை நாகம்மையார், தோழர் கண்ணம்மாள், அன்னை சத்தியவாணிமுத்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், குஞ்சிதம் அம்மையார், டாக்டர் எஸ்.தருமாம்பாள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். அடுத்த நிகழ்வாக தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.
றடிஆஹசூ – உடலும், உளவியலும் – தேன்மொழி; பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்) – ரம்யா; குடும்ப கௌரவத்தின் அடையாளம் பெண்கள் (உருட்டுகளும், புரட்டுகளும்) – அறிவுமதி; சட்டம் பேசாதே! டாக்டர் அம்பேத்கர் பெற்றுத்தந்த பெண்ணிய உரிமைகள் – லீலாவதி; புரட்சிகரப் பெண்ணியத்தின் முன்னோடி தந்தை பெரியார் – ப்ரீத்தி ஆகியோர் உரையாற்றினர். இரண்யா நிறைவுரையாற்றினார்.
நிகழ்வில் கருத்துரையாற்றிய அனைவருக்கும் பெரியாரின் புகைப்படம் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது. மதியம் தோழர்கள் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. 32 தோழர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் பணிபுரியும் இராயப்பேட்டை பகுதியில் இருந்து புதிதாக வந்த தோழர்கள் தமிழரசி மற்றும் அபிநயா ஆகியோர் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” புத்தகத்தை மய்யமாக வைத்து விவாதம் நடத்தப்பட்டது.கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தனர்.
பெண்கள் சந்திப்பு நிகழ்வில் புதிதாக கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் முழு நாள் நிகழ்வைக் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்தனர். இறுதியாக பாரதி நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 16032023 இதழ்