தோழர் ஃபரூக் குறித்தும், அவரின் இறுதி நிமிடங்கள் குறித்தும் ஃபரூக்கின் துணைவியார், தந்தை பேட்டி – தி இந்து 25032017
‘கடவுள் மன்னிக்கக் கூடியவர்; தண்டிக்கச் சொல்பவர் அல்ல’: கொலை செய்யப்பட்ட ஃபாரூக் குடும்பத்தினர் வேதனை கோவை உக்கடம் லாரிப்பேட் டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டிய தால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற் றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க் கத்துக்கு விரோதிகள் அல்ல. தின மும் 5 வேளை நமாஸ் செய்பவர் கள். தவறாது நோன்பு மேற்கொள் பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்க ளிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள் கைக்கும் நாங்கள் எதிராக நிற்க வில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமை யாகப் படித்து, புரிந்துகொள்ளாத...
