சேலத்தில் கழக தெருமுனைக்கூட்டம் !

சேலம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19/06/16 அன்று மாலை 7 மணியளவில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தோழர்கள் பிரபு, வெற்றி முருகன், மூ.பெ.சரவணன் மற்றும் பெரியார் பிஞ்சு தமிழ்செல்வன் ஆகியோரின் பறை இசை முழக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

தொடர்ந்து சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு குழுவினரின் வீதி நாடகங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏற்காடு அய்யா தேவதாஸ் அவர்கள் பல வரலாற்று ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி யின் மக்கள் விரோத செயல்பாடு மற்றும் இட ஒதுக்கீட்டின் தேவை குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக மாநகர தலைவர் தோழர் பரமேஸ் குமார் நன்றி கூற நிகழ்வு முடிவுற்றது. இந்நிகழ்ச்சியை சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் செய்திகளை கேட்டறிந்தனர்.

. மேலும் வீதி நாடகத்தில் ஜாதி எதிர்ப்பு காட்சிகளின் போது மக்கள் பெருத்த கரவொலியோடு ஆதரவு அளித்தனர்.

செய்தி : தோழர் .பரமேஸ் குமார்

13483355_1763501093933783_2980034662194255755_o 13497550_1763501067267119_5556318102989080158_o 13498074_1763501030600456_5319341383882149323_o 13517548_1763501120600447_4526495441235293976_o

You may also like...