தலையங்கம் திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மார்ச் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு மேலும் ஒரு சிறப்பாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. இதில் குறை காணுவதற்கு ஏதும் இல்லாமல் ‘பூத’க் கண்ணாடியை வைத்து தேடிக் கொண் டிருக்கின்றன எதிர்கட்சிகள். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற திட்டத்தை அறிவித்தீர்களே செய்தீர்களா என்ற ஒரு கேள்வியைத்தான் திமுக ஆட்சியைப் பார்த்து இதுவரை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டே வந்தன. அவர்களை வாயடைத்து பதில் கூற முடியாத அளவிற்கு அந்தத் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மகளிருக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தத் தொகை உண்மையில் விளிம்பு நிலை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். வசதி படைத்த மாத வருவாய் வரக்கூடிய பெண்களுக்கு தேவையில்லை என்பதே நமது கருத்து....