சேலத்தில் 50 இடங்களில் சுவரெழுத்து
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்துகள் எழுதப்பட் டுள்ளன. கடை வீதி வசூல் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. தோழர்கள் உற்சாகமாக செயல்படுகிறார்கள்.
கோவை : சேலத்தில் ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான துண்டறிக்கை மற்றும் நன்கொடை ரசீது புத்தகங்களை கோவை மாநகரக் கழகத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் நேரில் வழங்கி மாநாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை கூறினார்கள்.
உடன் மாநகர அமைப்பாளர் நிர்மல் குமார். அய்யப்பன். கிருஷ்ணன். ராஜாமணி ஆகியோர்.
100 வயதையும் தாண்டி உற்சாகம்
பெரியார் பெருந்தொண்டர் அய்யா தங்கவேல் (ஆத்தூர்) அவர்களுக்கு 100 வயதாகிறது. நன்கொடைக்காக வந்த கருஞ்சட்டை தோழர்களைக் கண்டதும் அதே உற்சாகத்தோடு தனது கடையில் வெள்ளை சட்டையில் இருந்தவர் நான் பெரியாரின் தொண்டன் உங்களோடு கருப்புச் சட்டையுடன் தான் புகைப்படம் எடுத்துக் கொள்வேன் என கூறியதோடு திவிக நடத்தும் மாநில மாநாட்டிற்கான நன்கொடை யையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
தோழர்களை மாவட்டம்தோறும் நேரில் சந்தித்து மாநாட்டு துண்டறிக்கைகள் வழங்கப்படுகின்றன
மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, காவலாண்டியூர் ஈசுவரன் இருவரும் மாவட்டம் தோறும் நேரில் சென்று கழகப் பொறுப்பாளர்களிடம் மாநாட்டுக்கான துண்டறிக்கைகளை நேரில் வழங்கி தோழர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
பெரியார் முழக்கம் 16032023 இதழ்