வினா விடை
பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்; அதற்கான ஆதாரங்கள் கிடைத்தப் பிறகு, வெளியிடுவோம். – பழ. நெடுமாறன்
ஆதாரங்களே, இன்னும் கிடைக்கவில்லையா, அய்யா!
- காரைக்கால் அருகே ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இந்து முன்னணி அலுவலகத்தை ஜடாய்புரீஸ்வரர் கோயில் நிர்வாகம் இடித்ததைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். – செய்தி
இந்து முன்னணிக்கு சபாஷ். இப்படித்தான் இந்து கோயில் நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இனி இந்து கடவுள் ஜடாய்புரீஸ்வரரையும் எதிர்த்துப் போராடுங்க. அப்பத்தான் நீங்கள் ‘இந்து முன்னணி’.
- நாடு முழுதும் பசுவதைத் தடைக்கு சட்டம் இயற்ற – புராணங்களை ஆதாரம் காட்டி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தல்.
– செய்தி
இப்போதெல்லாம் உயர்நீதிமன்றங்கள் அரசியல் சட்டங்களைப் புறக்கணித்து புராணங்கள் அடிப்படையிலே தீர்ப்புகள் வழங்குகின்றன. நீதிமன்றங்களின் பெயரை புராண இதிகாச பை என்று மாற்றி விடலாம்.
- ஆன்மீகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. – ஆளுநர் தமிழிசை
‘ஆன்மீகம்’ என்பதே தமிழ் இல்லை, மேடம்!
- ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் 44 பேர் பலி; தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் மவுனம். – செய்தி
உஷ்; சத்தம் போடாதீர்கள். ஆன்மீகத்தையும் வேத கலாச்சாரத்தையும் காப்பாற்றும் ஆரிய சேவையில் அவர் மூழ்கிப் போய் ‘மோன’ நிலையில் தவமிருக்கிறார். தவத்தைக் குலைக்கக் கூடாது!
பெரியார் முழக்கம் 09032023 இதழ்