சேலம் மாநாடு, தோழர்கள் தீவிரம்
சேலம் ஆத்தூர் : திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” ஏப்ரல் மாதம் 29,30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டையொட்டி கடைவீதி வசூல் மற்றும் சந்தை வசூல் சேலம் கிழக்கு மாவட்டக் கழக சார்பாக 11.03.2023 சனி மதியம் 12 மணிக்கு ஆத்தூரில் மகேந்திரன் தலைமையில் தொடங்கியது. ஆத்தூர் தந்தை பெரியார் சிலை முன்பு இருந்து தொடங்கபட்ட நன்கொடை திரட்டும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது. ஆத்தூரில் மொத்த நன்கொடை ரூ.8,200 பெறப்பட் டுள்ளது.
கிருஷ்ணன், தங்கதுரை, பிரபாகரன், ஆத்தூர் மகேந்திரன், சிந்தாமனியூர் முருகேசன், ஆனந்தி, வெங்கடேஷ், ஆத்தூர் மணிகண்டன், ஆத்தூர் செங்கமலை ஆகியோர் வசூல் பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையிலிருந்து நான்கு பேருந்துகள்
சேலம் மாநாட்டுக்கு சென்னையிலிருந்து 4 பேருந்துகளில் புறப்பட சென்னை மாவட்டக் கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், மார்ச் 13, 2023 மாலை கழகத் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் கூடியது.
கலந்துரையாடலில், கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் உள்ளிட்டோர் உட்பட மாவட்ட, பகுதி கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மாநாட்டில் சென்னை கழகம் சார்பில் திரளாக பங்கேற்பது, தொடர்ந்து மாநாட்டு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புதல், சுவரெழுத்துக்கள் சென்னை முழுவதும் எழுதுதல், மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டங்கள் என அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குழுக்கள் உருவாக்கப்பட்டு தோழர்கள் வேலைகளை பகிர்ந்து செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மாநாட்டுக்கு குறைந்தது நான்கு தனிப் பேருந்துகளில் புறப்படுவது என முடிவு செய்யப்பட்டது.
பெரியார் முழக்கம் 16032023 இதழ்