Category: பெரியார் முழக்கம் 2019

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழக பெரியாரியல் பயிற்சிமுகாம், மே 23, 24 தேதிகளில் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதுவரை பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்காத புதிய இளைஞர் களுக்கான இந்த முகாமில் 20 பெண்கள் உள்பட 45 தோழர்கள் பங்கேற்றனர். காவலாண்டியூர் ஒன்றியக் கழகம் பயிற்சி முகாமை மாவட்டக் கழகம் சார்பில் முன்னின்று நடத்தியது. மே 23 அன்று மாலை 9.30 மணியளவில் முகாமை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தொடங்கி வைத்தார். முதல் வகுப்பாக ‘பெரியார் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பு எடுத்தார்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியளவில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், ‘புராணம் – மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில்  பேசினார். பிற்பகல் 4...

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். பல்வேறு முயற்சிகளை எடுத்தது (2) கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே!

1949 நவம்பர் 15ஆம் தேதி தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது. அம்பாலா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் தூக்கிலிடப்படும் நாளன்று அதிகாலையில் இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே, மதன்லால், கார்கரே மூவரும் நேரில் சந்திக்க வந்தனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ‘பகவத் கீதை’யைப் படித்தார்கள். கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா...

விஜயேந்திரன்-குருமூர்த்தி மோதல் வலுக்கிறது  காஞ்சி சங்கர மடத்தில் கலகம் ஜுனியர் விகடன் தரும் தகவல்கள்

விஜயேந்திரன்-குருமூர்த்தி மோதல் வலுக்கிறது காஞ்சி சங்கர மடத்தில் கலகம் ஜுனியர் விகடன் தரும் தகவல்கள்

தான் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய சொந்த தம்பி இராமகிருஷ்ணனையும் மடத்தின் காரியதரிசியாக இருந்த காலடி விஸ்வநாதனையும் பல்வேறு காரணங்களால் ஜெயேந்திரர் வெளியேற்றினார். இந்த இருவரும் தற்போது மீண்டும் மடத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனர். பார்ப்பன அதிகார மய்யமான காஞ்சி சங்கர மடத்தின் சொத்துக்களை சுருட்டுவதில் ‘அவாள்’களுக்குள் கடும் போர் நடக்கும் செய்திகள் அம்பலமாகியுள்ளன. இது குறித்து ‘ஜூனியர் விகடன் (22.5.2019) வெளியிட் டுள்ள விரிவான கட்டுரை ஆன்மிகம்… அரசியல்… அதிகாரம் என்று இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வல்லமை படைத்தது காஞ்சி காமகோடி பீடம். குறிப்பாக மடத்தின் பீடாதிபதி, பிரதம மந்திரிக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு அந்த ‘பவர் சென்டர்’, பிரச்னைகளின் சென்டராக மாறியிருக்கிறது. “மத்தியிலும் மாநிலத்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிலர், மடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் தீவிரமாக ஈடுபட் டுள்ளார்கள். மடத்தின் பீடாதிபதிக்குப் பல்வேறு வழிகளில் இவர்கள் நெருக்கடி கொடுத்து, ஏகப்பட்ட காரியங்களைச்...

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

தனிப் பெரும்பான்மையுடன் – மீண்டும் பிரதமராகவிருக்கும் மோடி – இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று தனது வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார். ‘மோடியே – இந்தியா’ என்ற சர்வாதிகாரத்தின்  வெளிப்பாடு இது. மோடியின் கூற்றுப்படி மோடியைப் புறக்கணித்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இல்லை என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி யிருக்கிறது. வடநாட்டுக்கும் தென்னகத்துக்குமிடையே உள்ள முரண்பாடுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக முன்னனி இந்தியா முழுமைக்கும் 43.86 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 25.81 சதவீத வாக்குகளையும் இரண்டு தேசிய கூட்டணிகளிலும் இடம் பெறாத மாநிலக் கட்சிகள் 30.33 சதவித வாக்கு களையும்  பெற்றிருக்கின்றன. அதிகாரத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான –இரண்டு அணிகளும் 56.14 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தியா வின் தேர்தல் அமைப்பு முறையில் வாக்கு களின் சதவீதங்களுக்கு ஏற்ப இடங்கள்...

தலைமைக் கழக நிதி

தலைமைக் கழக நிதி

பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திவிக சார்பில் கழக கட்டமைப்புநிதி ரூ20000  கழகத் தலைவரிடம் தஞ்சைமாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், அறிவுச்செல்வன் பெரியசாமி, அரும்புச்செல்வன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். பெரியார் முழக்கம் 23052019 இதழ்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி  – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

5 ஆண்டு  மோடி ஆட்சி வட மாநிலங் களுக்கும்  தென் மாநிலங்களுக்கும் இடை யிலான முரண்பாட்டை கூர்மையாக்கி யுள்ளது. அடுத்து ஆட்சியை பா.ஜ.க. அமைத்தாலும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் ஆதரவோடு அமைத்தாலும் “மாநில சுயாட்சி மற்றும் தென் மாநிலங் களுக்கான கூட்டமைப்பு” என்ற முழக்கத்தை முன்னெடுத்தாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென் மாநிலங்களின் இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமையும் என்பதை சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகப் பதிவு செய்தார் அதன் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.கே.சிங். 2017ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசால் 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டு, அரசாணை யில் அதன் பணி வரன் முறைகள் (Terms of Reference) வழங்கப்பட்ட உடனேயே அது தென் மாநிலங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது . அதற்கு முக்கியக் காரணம், 2020-21 முதல் 2024-25...

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் கோட்சே ‘இந்து’ பயங்கரவாதிதான்!

 “காந்தியாரை  இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்” என்று, சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி வானொலியில் செய்தி அறிவிக்கப்பட்டது. கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும்,  அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் – இந்துத்துவம் என்ற வலைப் பின்னலி லிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா? காந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப்பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங்களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது. 1948 ஜனவரி 30, பார்ப்பன கொலைவெறிக்கு காந்தியார் பலியான...

“யாகம் வளர்த்தால் மழைபெய்யுமா?”

“யாகம் வளர்த்தால் மழைபெய்யுமா?”

சார்லஸ் டார்வின் தன்னுடைய முதுமையில் ஒரு நாயை வளர்த்தார். அது எப்போதுமே டார்வினுடனேயே இருக்குமாம். டார்வின் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் அறையின் கர்ட்டன் (திரை) காற்றில் அசைந்ததாம். நாய் குடுகுடுவென்று ஓடிப்போய், யாரது, கர்ட்டனை அசைக்கிறது?!” என்று ஆராய போயிற்றாம். டார்வின் நினைத்தார், “நாய்களுக்குத் தெரியாது, கர்ட்டன் காற்றில் இயல்பாகவே அசையும்” என்று. அதன் அறிவிற்கு எட்டியதெல்லாம் “ஏதாவது நிகழ்ந்தால், நிகழ்த்துபவர் யாரோ ஒருவர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்” என்பது மட்டுமே. யாருமே இல்லாமல், இயற்கையின் சக்திகளால் மட்டுமே பலதும் நடக்கும் என்று புரிந்து கொள்ளும் நுணுக்கமான அறிவு நாய்களுக்கு வாய்க்கவில்லை. சிலர் டார்வின் மாதிரி யோசிப்பார்கள், வேறு சிலரோ… மருத்துவர் சாலினி டுவிட்டரில் பதிவு பெரியார் முழக்கம் 23052019 இதழ்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

வடவாரிய பார்ப்பன வந்தேறிகளின் சூழ்ச்சியால் திராவிட இன மக்களாகிய மண்ணின் மைந்தர்களுக்கு இடையே நால்வருண சாதி அடுக்குகளை உருவாக்கி, தீண்டாமையை நிலைப்படுத்தி விட்டனர். இந்த மனிதகுல விரோதக் கட்டமைப்பைச் சீர்குலைத்து விடாது மேலும் கெட்டிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுவிட்டது சூது மதியினரால்! பிறப்பின் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வையும், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதத்தையும் கற்பித்துக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து மானுடப் பற்றாளரான பெரியார், சாதி-தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரம் – போராட்டம் என நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த வருண பேதம் கற்பிக்கும் சாஸ்திர-சம்பிரதாயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று போராட்ட அழைப்பை விடுத்து, இன இழிவு நீங்கிட, தீண்டாமை ஒழிந்திடப் போராட்டக் களம் நோக்கி வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார்! பெரியாரின் போர்க் குரல் கேட்டு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து...

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த சாதிய வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்க வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 23.4.2019 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அன்பு தனசேகரன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் மற்றும் பரந்தாமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் உலகநாதன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண்டன உரை...

அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் தொடர்பைத் துண்டித்த நடுவண் பா.ஜ.க. ஆட்சி

அய்.நா. மனித உரிமை ஆணையத்திடம் தொடர்பைத் துண்டித்த நடுவண் பா.ஜ.க. ஆட்சி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை அறிக்கையாக மனித உரிமைக் கவுன்சில் அய்.நா.விடம் சமர்ப்பித்துள்ளதால் ஆத்திரமடைந்த நடுவண் ஆட்சி, இனி அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்துடன் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருக்கிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வெளி வந்த அதே நாளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு அரசு சாராத அமைப்புகள், இந்திய இராணுவம் பொது மக்கள் மீது நடத்திய சித்திரவதை படுகொலைகளை விளக்கும் அறிக்கையையும் வெளியிட்டது. 4 குழந்தைகளை இராணுவம் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவமும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த அரசு சாரா அமைப்பின் அறிக்கையை அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து மனித உரிமை மீறல் தொடர்பாக இந்த அறிக்கை வெளி வந்த அதே நாளில் அய்.நா. மனித உரிமை ஆணையமும் அறிக்கை வெளியிட்டது. இது நடுவண் ஆட்சிக்கு கடும் ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது. ...

தேர்தல் ஆணையத்தின் முகத்திரை கிழிகிறது!

தேர்தல் ஆணையத்தின் முகத்திரை கிழிகிறது!

உலகின் மிகப் பெரிய ‘ஜனநாயக நாடு’ என்று கூறப்படும் இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் படைத்த ‘தேர்தல் ஆணையம்’ அதன் நம்பகத் தன்மையை இழந்து நிற்கிறது. இதுவரை நடந்த எந்த பொதுத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு சார்பாக நடந்து கொண்டதே இல்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகவே மாறிப்போய் செயல்பட்டார் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா. இராணுவத்தின் தாக்குதலை ஆட்சியின் சாதனையாகப் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை பகிரங்கமாக மீறினார் மோடி. நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய பிரதமரே இப்படி தரம் தாழ்ந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பு நிலையை மூன்று பேர் கொண்ட ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அசோக் லாவசா ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை மீறிய மோடியின் பேச்சு, விதி மீறல்களுக்குள் வராது என்று தலைமை தேர்தல் அதிகாரி...

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அய்.நா.வின் தலையீட்டுக்குப் பிறகும் இலங்கை அரசு தமிழர் உரிமைக்கான எந்த முன்னெடுப்பையும் செய்ய வில்லை. இப்போது என்ன நடக்கிறது என்பதை விளக்கி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை: இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுபற்றி முறையிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்டவிதிகள் மீறப் பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலசந்திரன் களும் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறையிடப் போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர் களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி? பாலசந்திரன்களுக்கு ஒரு...

வெளிவந்து விட்டது ‘நிமிர்வோம்’ –  மே 2019 இதழ்

வெளிவந்து விட்டது ‘நிமிர்வோம்’ – மே 2019 இதழ்

தலையங்கம் – வடநாட்டார் ஆதிக்கம் பெரியார் தமிழ்நாட்டுக்கு எதிரியா? ‘அய்.எஸ்.அய்.எஸ்.’ – ‘இந்து சேனை’களின் வெடிகுண்டு கலாச்சாரம் இந்தி எதிர்ப்புக்கு தமிழர் படை நடத்திய பட்டுக்கோட்டை அழகிரி இராமன் அயோத்தியில் பிறந்தானா? செம்மொழித் தமிழ் மீது நஞ்சுக் கக்கும் நாகசாமி (2) காதலில் கவனம் தேவை! லெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை! மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 16052019 இதழ்

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாத்திகர் விழாவுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக் கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி...

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க பேச்சாளரும், திராவிடர் இயக்கக் கருத்தியலை தனது உரையின் உயிர் மூச்சாகக் கொண்டு பேசியவரும் பெரியார் இயக்கக் கழக மேடைகளில் தொடர்ந்து பங்கேற்றுப் பேசிய வருமான கோவை இராமநாதன் (87) மே 11ஆம் தேதி கோவையில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுஅவர் நிகழ்த்திய நீண்ட உரையும், பழனியில் தமிழ் வழிபாட்டை ஆதரித்து பெரியார் இயக்க மேடையில் அவர் ஆற்றிய உரையும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகும். 1977, 1984ஆம் ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1996இல் நாடாளுமன்ற உறுப் பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றம் முன்னணியினர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுடன் மே  11 அன்று மாலை அவரது இல்லம் சென்று குடும்பத் துக்கு ஆறுதல் கூறினார். கடந்த 2018ஆம்...

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) பாவலர் தமிழேந்தி

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) பாவலர் தமிழேந்தி

“நா. கதிரைவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவுக் கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன் என்று சொன்னதற்கு, உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி, என்னிடம் வாங்கிக் குடித்தப் பாலை விரலைவிட்டு வாந்தி எடுத்துவிட்டார்.”                                – பெரியார் பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் ‘பெரியாரும் தமிழ் இலக்கியமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) மதுரையை எரிக்கக் கண்ணகிக்குப் பயன்பட்ட தீக்கடவுள்கூடப் பார்ப்பனக் கோலத்தில் (பால்புரை வெள் எயிற்றுப் பார்ப்பான் கோலத்து) தோன்றித்தான் புகார் நகரத்தை எரித்ததாக இளங்கோவடிகள் இசைக்கின்றார். இவ்வாறு, விரிவாக இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி எழுதுவதற்கான காரணம் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று காய்ந்த பெரியாரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தான். தமிழை...

கழகத் தலைமைக் கழகத்தைத் தக்கவைக்க ஆர்வத்துடன் நிதி குவிக்கும் தோழர்கள்

கழகத் தலைமைக் கழகத்தைத் தக்கவைக்க ஆர்வத்துடன் நிதி குவிக்கும் தோழர்கள்

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ்த் (9.5.2019) தொடர்ச்சி: திருவெறும்பூர் அரசெழிலன்   -ரூ.   20,000/- (மாதவன் மென்பொருள் அங்காடி) டாக்டர் சக்திராஜன்     –      ரூ.   20,000/- டாக்டர் நவீன்    –      ரூ.   10,000/- டாக்டர் சிவபாலன்      –      ரூ.  5,000/- டாக்டர் மோகன்ராஜ்    –      ரூ.   3,000/- திருநாவுக்கரசு    –      ரூ.   5,000/- செம்மொழி...

எர்ணாகுளம் நாத்திகர் மாநாட்டில்  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி பேச்சு மத உணர்வாளர்கள் – மதவெறி வன்முறையைக் கண்டித்துக் குரல் எழுப்ப முன்வரவேண்டும்

எர்ணாகுளம் நாத்திகர் மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மத உணர்வாளர்கள் – மதவெறி வன்முறையைக் கண்டித்துக் குரல் எழுப்ப முன்வரவேண்டும்

11-5-2019அன்று எர்ணாகுளத்தில் ‘யுக்திவாத பாடன கேந்திரத்’தின்  மாநில மாநாடு 2019, மே மாதம், 11,12 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இது கடவுள் – மதம் – ஜாதியை மறுக்கும் நாத்திக அமைப்பு. முதல் நாள் நிகழ்ச்சிகள் அமைப்பின் தலைவர் ஜார்ஜ் தலைமையில் தொடங்கின. தொடக்க உரையைப் பேராசிரியர் கே.எஸ். பகவான் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நரேந்திர தபோல்கர் உருவாக்கிய ‘மகாராஷ்டிர அந்தாஷ்ரத்த நிர்மூலன் சமிதி’க்கு, 2018ஆம் ஆண்டின் பகுத்தறிவுத் துறையில் ஆற்றிய சிறந்த பணிகளுக்கான விருது வழங்கப் பட்டது. பரிசு பெற்ற அமைப்பினை வாழ்த்தியும், தமிழ்நாட்டில் பெரியாரின் பணிகளை விளக்கியும், தோழர் பாரூக்கைக் கொன்றொழித்த இஸ்லாமிய மதவெறிப் போக்கு தமிழகத்தில் உருவாகியுள்ள சூழலை விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார். சிறப்பு விருந்தினர்களுக்கு ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழ் தொகுப்புகளை வழங்கினார். கேரளா, எர்ணாகுளம் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தேசிய மாநாடு மற்றும் சரவாகம் 11-05-2019 அன்று நடைபெற்றது. அதில் கழகத்...

வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு

வேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு

தமிழ்நாட்டில் மழை பெய்வதற்காக யாகங்கள் – வருண பகவானை வேண்டும் வேதச் சடங்குகள் – மழை பெய்விப்பதற்கான அமிர்த வர்ஷினி இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறு அற நிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.  சிண்டைத் தட்டி விட்டுக் கொண்டு பூணுலை உருவிக் கொண்டு புரோகிதர் கூட்டம் ஒவ்வொரு கோயிலாக யாகம் நடத்தக் கிளம்பிவிட்டது. மழை கொட்டப் போகிறதோ இல்லையோ, புரோகிதக் கூட்டத்துக்கு வருமானம் மழையாகக் கொட்டத் தொடங்கிவிட்டது. வேத காலத்தில் பார்ப்பனர்கள் ‘வானுலக தேவர்களை’ மகிழ்விக்கிறோம் என்று மக்களை ஏமாற்றி உருவாக்கிய வேத சடங்குகள் 2019ஆம் ஆண்டிலும் மதச்சார்பற்ற ஆட்சி நடத்த வேண்டிய அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கு அரசு நிதியே செலவிடப்படுகிறது என்றால் நாட்டின் பண்பாட்டு – அரசியல் ஆதிக்கம் இப்போதும் பூதேவர்களாகிய பார்ப்பனர்களிடமே இருக்கிறது என்பதைப் புரிந்து  கொள்ள முடியும். ‘தமிழர் கலாச்சாரம்’, ‘தமிழர் பண்பாடு’ – தமிழர் அடை யாளத்தைக் காப்பாற்ற  வந்திருக்கிறோம் என்று கிளம்பி மேடைதோறும் ‘வீர வசனங்களைப்’ பேசி...

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்டுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். முதலில் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். இராஜீவ் கொலையில் நேரடி தொடர்பில்லாத மறைமுக உதவி செய்ததார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் என்ற ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்கள். இதில் 3 பேர் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனைக் குறைப்புக்கு உள்ளானோர். இப்போது அனைவருமே தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள். சிறைவாசிகளை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யும் உரிமையை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு 161ஆவது விதியின் கீழ் வழங்கியுள்ளது. இவர்கள் சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உள்ளானவர்கள் என்பதால் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய காங்கிரஸ் ஆட்சி கூறி வந்தது....

மே 25, 27இல் மேட்டூர் – திருப்பூரில் கழக தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்குகிறார்கள்

மே 25, 27இல் மேட்டூர் – திருப்பூரில் கழக தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்குகிறார்கள்

கழகத் தோழர்கள், களப்பணி யாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்ச நன்கொடை ரூ.20000/- என்று கழகம் அறிவித்தத் திட்டத்தைத் தோழர்கள் உற்சாகத்துடன் செயல்படுத்தி வருகிறார்கள். கழகத் தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான இந்த நிதி திரட்டும் இயக்கத்தின் முதல் கட்டமாக மேட்டூர், திருப்பூரில் நிதி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. மே 25ஆம் தேதி  காலை 11 மணியளவில் மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கழகங்கள் சார்பில் கழகத் தலைவர், பொதுச் செயலாளரிடம் நிதி வழங்கப்படுகிறது. மே 27 அன்று திருப்பூரில் ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் முதல்கட்ட நிதியை கழகத் தலைவரிடம் வழங்குகிறார்கள். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். பெரியார் முழக்கம் 09052019 இதழ்

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஏப்ரல் 14 அன்று காலை 10.00 மணிக்கு அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ், பெரியார் பிரபு, பெரியார் துளசிராஜா, பெரியார் பாரதிதாசன் (த.மா.கழகம்), நீதிபதி செ.வே. ராஜேஷ் (சங்கை, ஒன்றிய செயலாளர்), ஜெ.க. வேலாயுதம், கல்லை ஆசைத் தம்பி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 09052019 இதழ்  

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து  வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் (83), ஏப். 30 அன்று முடிவெய் தினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரின் வீட்டில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர்இரா. உமாபதி, கரு. அண்ணாமலை, திருப்பூர் விஜயகுமார், மேட்டூர் முத்து ராஜா உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். திருமதி சுசீலா அம்மையாரின் உடல் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடற்கொடையாக அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09052019 இதழ்

பாவலர்  தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்

பாவலர் தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்

சீரிய பெரியாரியலாளரும் கவிஞருமான தமிழேந்தி (69) அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் மே 5ஆம் தேதி காலை 7 மணியளவில் முடிவெய்தினார். தோழர் ஆனைமுத்து அவர்களின் மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி அமைப்பான புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகப் பணி யாற்றி வந்த தோழர் தமிழேந்தி பெரியார் இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு செயல்பட்டவர். குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழகத்துடன் மிகவும் நெருக்கம் கொண்டு கழக நிகழ்வுகள் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும் பேசியும் வந்தவர்.  சிந்தனையாளன் இதழ் தயாரிப்புப் பணியிலும் அதன் பொங்கல் ஆண்டு மலர் தயாரிப்பிலும் முக்கியப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சமகால அரசியலை மரபுக் கவிதை வடிவத்தில் கவிப் புனையும் ஆற்றல் அவரது தனித்துவமான சிறப்பு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புழல் சிறை வளாகம் முன்பு 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண் டிருந்தபோது உணர்ச்சி மேலிட்டு மயங்கி விழுந்தார்....

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ்த் தொடர்ச்சி: கோவை சுரேஷ் பாபு   –      ரூ. 20,000 குவைத் பாண்டியன்    –      ரூ. 20,000 ‘இட்லி’ தயாரிப்பாளர் இனியவன்    –      ரூ. 20,000 சென்னை தோழர்கள் : உதயசங்கர், கார்த்திகேயன், டாக்டர் சுந்தர், –      ரூ. 20,000 கோவை தங்கவேலு, அரிகிருஷ்ணன் இணைந்து    (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம்...

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? பாவலர் தமிழேந்தி

தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? பாவலர் தமிழேந்தி

பாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் பெரியாரும் தமிழும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது. பெரியாரின் முன்னோர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பின்னாளில் அவர்கள் தமிழ்நாட்டிற்குக் குடிபெயர்ந்து பல ஆண்டுகளாய் இங்கு வாழ்ந்து தம் தாய்மொழியாகத் தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டவர்கள். இது பற்றிப் பெரியாரே பின்வருமாறு கூறுவார்: “என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதை நான் தினசரி பேச்சு வழக்கில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். இருந்தாலும் தமிழ்மொழியால்தான் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.” (விடுதலை 21.5.1959) “மேலும், எனக்கு மொழிப் பற்று, இனப்பற்று, கடவுள் பற்று, நாட்டுப் பற்று, மதப் பற்று...

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு இணையரின் மகன் சி.இரா. கதிர்முகிலன் – அ. நஜ்முன்னிசா ஆகியோரின் காதல், மத மறுப்பு மணவிழா 24.4.2019 காலை 11 மணியளவில் சிறப்புடன் நிகழ்ந்தது. அதே நாளில் சிவகாமி-முகில்ராசு இணையரின் புதிய இல்லத் திறப்பு விழாவும் சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசையோடு தொடங்கியது இல்லத் திறப்பு. இல்லத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். மணமக்களுக்கு பேராசிரியர் சரசுவதி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்வுக்கு கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். அவர் தமது உரையில் ஆசிரியர் சிவசாமியும் தோழர் முகில்ராசுவும் கழகத்துக்கு முழு நேரக் களப்பணியாளர்களாக தொண்டாற்றுவதையும் கழகத் தோழர்களுக்கு நெருக்கடி வந்தால், ஓடோடிச் சென்று உதவி வருவதையும் திருப்பூர் மாவட்டத்தில் கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து களப்பணியாற்றுவதில் முனைப்பும் ஆர்வமும் காட்டி செயல்படுவதையும்...

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா –    மகளிர் தினவிழா –  சிறந்த பெண் சேவையாளர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா இராசிபுரம் கன்னட சைனீகர் திருமண மண்டபத்தில் 21.4.2019 ஞாயிறு மாலை  5.45 மணியளவில்  தொடங்கியது சுமதி மதிவதனி (தி.வி.க. இராசிபுரம்) தலைமை தாங்கினார். மணிமேகலை (தி.வி.க. ஈரோடு) வரவேற்புரை யாற்றினார். வி.பாலு (தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்), கழகத் தலைவர் கொளத்தூர்மணி, முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) நிகழ்வில் சிறப்புரையாற்றினர். 1)     மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நீதி காக்கவும் துணிச்சலாக களமாடி வருகிற முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு ‘மக்கள் அரசியல்’ விருதினையும், 2)     கரூர்மாவட்டம் பள்ளப்பட்டியைச் சார்ந்த பெரியார் பற்றாளரும் இந்தியாவின் தலைசிறந்த 100 இயற்கை வேளாண்மை விவசாயிகளில் ஒருவராக டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப் பட்டவரும், காடுகளை அழித்தொழித்த ஈஷா யோகா...

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது. சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30  அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி...

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

சேலம் மேட்டூரில் ஏப்ரல் 27ஆம் தேதி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாத்திகர் விழா என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் சக்திவேல் மனு அளித்திருந்தார்.  தேர்தலைக் காரணம் காட்டி, மாவட்ட ஆட்சியரை அணுகக் கூறி, காவல்துறையினர் மனுவைத் திரும்ப அளித்தனர். தங்கள் மனுவைத் திரும்ப அளித்ததன் மூலம் நிகழ்ச்சியைத் தாமதப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, விழாவுக்கு அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், கருமலைக்கூடல் காவல் நிலையத்தினருக்கும் உத்தரவிடக் கோரி சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை இரண்டு நாட்களில் பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். நாட்கள் கடந்தபின்னும் இன்னும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காமல் தாமதம் செய்வதால் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக சக்திவேல் அறிவித்துள்ளார். விரைவில் நீதிமன்ற அனுமதி பெற்று மூடநம்பிக்கைக்கு எதிரான நாத்திகர் விழா...

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

திருப்பூர் தொழிலதிபரும் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ்  நிறுவனருமாகிய லோகு, கழக கட்டமைப்பு நிதியாக ரூபாய் ஒரு லட்சம் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். இந்தச் சிறப்பான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்பிரமணிக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 02052019 இதழ்

தேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு  அனுமதி

தேர்தல் முடிந்தவுடனே ஹைடிரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம், அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்குறுதி யளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களிலே போலீஸ் பாதுகாப்புடன் இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது. கடந்த மார்ச் 2016ல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை  HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல் (பாறையிடுக்கு எரிவாயு), டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங் களைத் தேர்வு செய்யவும், இலாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி, வருமானத்தில் பங்கு என்கிற புதிய நடை முறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றி யமைக்கப்பட்டது. மேலும், கடந்த 01.08.2018 அன்று நடந்த மத்திய அமைச்சரவைக்...

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

பதியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் வாய்ப்புக்கேற்ப மாற்றிப் பேசும் கெடுவாய்ப்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டுள்ளது. அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்தும் தவறானப் போக்காகும். பாவேந்தர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல. “மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு வஞ்சர்க்கோ கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியிருப்பு விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்மானம் பாயும் தலை மேடை நமக்குத் தாண்டி அந்த வாட்படை நமைஅவரின் போருக்கு ஒப்படை” பெரியார் குறித்துப் பாவேந்தர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். 1908ஆம் ஆண்டு நடந்த புலவர் தேர்வில் மாநி லத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றவர் அன்றைய கனக சுப்புரத்தினம். மயிலம் ஸ்ரீஷண்முகன் வண்ணப்பாட்டும், மயிலம் சுப்பிரமணியர் துதியமு தும் பாடிக்கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், அதே ஆண் டில் புதுவை வேணு நாய்க்கர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் முதன்முதலாய்ப்...

கிராமத்துப் பெண் கோமதியின் உலக சாதனை

கிராமத்துப் பெண் கோமதியின் உலக சாதனை

“கோமதி… கோமதி… இந்தப் பெயரை உச்சரிக்காதவர்களே கிடையாது. திருச்சியை திரும்பி பார்க்காதவர்களே இல்லை. ஆனால், இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருப்பதையே அறியாத அப்பாவியாக இருக்கிறாள் அந்தத் தாய்” திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் போதிய பேருந்து வசதிகள்கூட இல்லாத மிகவும் பின்தங்கிய கிராமம் முடிகண்டம். இந்த கிராமத்திற்கு செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் படை யெடுத்தனர். கிராமமே ஒன்றுகூடி ஆச்சரியப்பட்டது. என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ?  என முணுமுணுக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் கோமதி வீடு எங்கே இருக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேட்க, மேலும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதற்காக? என்று ஒருவர் கேட்க, ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் என்று ஊடக செய்தியாளர்கள் கூறியதைக் கேட்ட கோமதியின் உறவினர்களும் ஊர் மக்களும் இன்ப வெள்ளத்தில் நீந்தினர். தோஹாவில் நடந்த ஆசிய ஓட்டப்பந்தயம் 800 மீட்டர் பிரிவில் கோமதி தங்கப் பதக்கத்தை வாங்கிய...

மோடி ஆட்சியின் கீழ் காஷ்மீர்

மோடி ஆட்சியின் கீழ் காஷ்மீர்

மோடி ஆட்சியின் முறைகேடுகள் பற்றிய தொகுப்பு : (கடந்த இதழ் தொடர்ச்சி) மோடி 2014ஆம் ஆண்டு, காஷ்மீருக்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையோடு பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆட்சிக்கு வந்த பிறகு மோடியின் முதல் காஷ்மீர் வருகைக்கே காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க., மெஹ்பூபா முஃப்தி கட்சியான பிடிபியுடன் கூட்டணி அமைத்து ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக  ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு காஷ்மீரில் சுதந்திரத்திற்கான போராட்டங்களும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகமானதால் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற மாநில அரசு கலைக்கப்பட்டு காஷ்மீரில் 2018ஆம் ஆண்டு கவர்னர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 2015ஆம் ஆண்டு காஷ்மீரில் புர்கான் வானி இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் இராணுவத் தினரால் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது. இதில் பல்லாயிரம் பேர் குழந்தைகள் உட்பட தங்கள் பார்வையை இழந்தார்கள். தங்கள் எதிர்காலத்தை...

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

விழுப்புரம் கழகம் தீவிரம் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்  20.04.2019 அன்று காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் பூஆ. இளையரசன் ஒருங்கிணைத்தார், மாவட்டச்  செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.   கழகத்தின் அடுத்தகட்ட செல்பாடு மற்றும் தலைமைக் கழக அலுவலகத்திற்கான நிதியை விரைவாக. மே 15 க்குள் வசூலித்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் மற்றும்  பயிற்சி வகுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது மாவட்ட துணைத் தலைவர் சிறீதர், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு,  கிருஷ்ணராஜ், மூர்த்தி மற்றும் தோழர்கள் கெஜராஜ், சிலம்பரசன், அருண், திருமாவளவன், சிறீநாத், மதியழகன், வசந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு கழகம் தீவிரம் கழகக் கட்டமைப்பு நிதி தொடர்பான, திருச்செங்கோடு  நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் 28.04.2019 மாலை...

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ் தொடர்ச்சி: ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் லோகு – ரூ. 1,00,000/- ரமேஷ்-ஜீவராணி – ரூ. 20,000/- 3. நெமிலி திலீபன் – ரூ. 20,000/- ஹேமலதா, சென்னை – ரூ. 20,000/-      (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம் 02052019 இதழ்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீழாக மாற்றி தொழில் அதிபர்களால் இலாபம் அடைந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. தலைமை நீதிபதி மீது புகார் கூறிய பெண் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. அதில் நீதிமன்றத் தீர்ப்புகளை ‘டைப்’ செய்யும் பணியில் இருந்த போது, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “மோசம், மிக மோசம்” என்று கூறிய வரிகளை அப்படியே “நல்லது மிகவும் நல்லது” என்று தலைகீழாக மாற்றம் செய்து பதிவு செய்வார். முக்கியமாக வங்கிக் கடன் தொடர்பாக பெரிய நிறுவனத்தினர் மீது வரும் தீர்ப்புகளில் முன்கூட்டியே இவரிடம் நிறுவனத்தின் முக்கிய நபர்கள் பேசி வைத்ததைப் போல் இவர் மாற்றிவிடுவார். இதன்மூலம் பல பெரிய தொழில் நிறுவன முதலாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த விவகாரம் ரஞ்சன் கோகோய் தலைமையில் உள்ள குழுவில் இவர் எழுத்தராகச் சேர்ந்த 2015ஆம் ஆண்டில்...

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

06.04.2019 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி  அறிவழகன்  வீட்டில் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கழகத்தின் கட்டமைப்பு நிதியாய் ரூபாய் 20000 மே மாதம் 10-ந் தேதிக்குள் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது வருகின்ற 17ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தலைமைக் கழகத்தின் முடிவான திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பதை ஆதரித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் சிதம்பரம் கடலூர் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது மே மாதம் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர். நட பாரதிதாசன் (மாவட்டத் தலைவர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம்...

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய சவப் பரிசோதனை அறிக்கையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் ‘பிரண்ட் லைன்’ இதழ் அதை வெளிக் கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையை அலசி மருத்துவர் புகழேந்தி ‘ஜூனியர் விகடன்’இதழில் எழுதிய கட்டுரை இது. தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மறக்கமுடியா பெருந் துயரம்! துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர்களின் உடற் கூராய்வு சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளார் தடயவியல்துறை மருத்து வரான புகழேந்தி. அவரிடம் பேசுகையில், “சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின், கந்தையா, தமிழரசன், செல்வசேகர் ஆகியோரின் உடல்களுக்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை ஆய்வு மற்றும் அறிக்கைகள் அவசரக் கோலத்தில் நடந்துள்ளன என்பதை உடற்கூராய்வு அறிக்கைகளை வைத்தே சொல்ல முடியும். போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் 151-ன்படி இறந்தவர்கள் அணிந் திருந்த...

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரிலுள்ள அண்ணலின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 10.04.2019 புதன் கிழமை மாலை 4.00க்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத வெறியர்கள் பெரியார் சிலையை உடைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பட்டத் திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ் தலைமையேற்றார். அதில் பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்தும், பார்ப்பன மதவாதத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட், கல்லை சங்கர், செ.வே ராஜேஷ், பெரியார் பாரதி, கார்மேகம், ஜெ.க. வேலாயுதம், துளசி உள்ளிட்ட 30 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம் நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00மணிக்கு அமைப்பாளர் தமிழ் அரசன் தலைமையுரையுடன் துவங்கியது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஸ்ணு ‘சாதியால் அம்பேத்கர் சந்தித்த பாதிப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் டி.மத்தியாஸ், ‘அம்பேத்கரின் இன்றையத் தேவை’ என்ற தலைப்பிலும், தமிழ்மதி ‘அம்பேத்கரை விழுங்கும் இந்துத்துவா’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்பு கேள்வி பதில் நிகழ்வுகள் நடைப்பெற்றது. மஞ்சுகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் தோழர்கள் ரமேஸ்பாபு, இராஜேஸ்குமார், சஜிகுமார், முத்து, இரவி, சங்கர், இராஜேந்திரபிரசாத் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

மோடி ஆட்சியில் பாடத் திட்டத்தில் இந்துத்துவா திணிப்பு – காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகள் – வங்கிப் பண பரிமாற்றத்தில் நிகழ்ந்த மோசடிகள் பற்றிய ஒரு தொகுப்பு: மோடியின் ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வி : 2014இல் மோடியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்று  சொல்லப்பட்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டு 230 பக்க வரைவு தயார் செய்யப்பட்டது. பிறகு அதையும் மாற்றியமைத்து சுப்ரமணியம் என்பவர் தலைமையின் கீழ் ஒரு புதிய குழு தொடங்கப்பட்டு வரைவு தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்று வரை முடியவில்லை. இந்தியாவில் 2009ஆம் ஆண்டு கல்விக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் 1 முதல் 8ஆம் வகுப்பு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழும், 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் அனைத்தும் இராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா பையன் திட்டத்தின் கீழும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால்,...

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் 13.3.2019 அன்று உடுமலைப்பேட்டை குமரலிங்கம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், ‘தந்தை பெரியார் வழியில் சமூகநீதி’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘பெண் விடுதலைத் தளத்தில் சமூகநீதி’ தலைப்பில் தமுஎச மாநிலத் துணைச் செயலாளர் சுந்தரவள்ளி, ‘அண்ணல் அம்பேத்கர் ஒளியில் சமூகநீதி’ தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழ்த் தேசிய மரபில் சமூகநீதி’ தலைப்பில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் வே. பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாலை 4 மணிக்கு சங்கர் தனிப் பயிற்சி மய்யக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

02.04.2019 அன்றுகாலை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில்…. துப்புரவு பணியாளர்கள் சாக்கடை அடைப்பு, குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலையில் எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இன்றி வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த மயிலாப்பூர் பகுதியின் இளைஞர்கள் பீரவீன்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களைப் பாதுகாப்புக் கருவியின்றி வேலை செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பணியாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்திய வார்டு 123ஆவது பகுதி மாநகராட்சி பொறுப்பாளர் பலராமனைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். பாதுகாப்புக் கருவிகளை உடனே தருமாறும், அதன் பின்னே அவர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், பலராமன்முன்னுக்கு பின்னான பதில்களைத் தோழர்களிடம் கூறியுள்ளார். துப்புரவுப் பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் பாதுகாப்பு கருவிகளிலின்றி ஈடுபட அனுமதிக்க முடியாது எனக் கூறி, கழக மயிலாப்பூர் பகுதித் தலைவர் மாரி மற்றும் தோழர்கள் சென்னை மாநகராட்சியில்...

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

இலங்கையில் கிறித்தவர்களைக் குறி வைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. இந்தியாவில் ‘இராம இராஜ்யம்’ அமைக்கத் துடிக்கும் சக்திகள், சிந்தனையாளர்களைக் கொலை செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் மதம் குறித்து 78 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிகழ்த்திய உரை இது. அக்கிரசானர்  அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப் படுவதுமாகும். ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது...

தலித் மக்கள் வீடுகளை சூறையாடிய  பா.ம.க. வன்முறைக்கு கழகம் கண்டனம்

தலித் மக்கள் வீடுகளை சூறையாடிய பா.ம.க. வன்முறைக்கு கழகம் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில் பா.ம.க.வினர் திட்டமிட்ட கலவரத்தில் இறங்கி தலித் மக்களின் வீடுகளைத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தொல் திருமாவளவன் சின்னம் பானை என்பதால் பானைகளை வீதிகளில் போட்டு பா.ம.க.வினர் உடைத்துள்ளனர்.  இதைத் தட்டிக் கேட்டார்கள் என்பதற்காக தலித் மக்களின் வீடுகளை பொன்பரப்பி கிராமத்தில் கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். பா.ம.க.வுடன் இந்து முன்னணியினரும் இதில் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ‘கீழ் விஷாரம்’ வாக்குச் சாவடியைக் கைப்பற்ற பா.ம.க.வினர் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர். அன்புமணி இராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தமேடு கிராமத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டுகளை பா.ம.க.வினர் போட்டுள்ளனர். ‘இந்து’ ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது. வீடியோ பதிவுகளும் வெளி வந்துள்ளன. பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ்...

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். மதுரை முருகேசன் வாசுகி – ரூ.20,000/- விடுதலை இராசேந்திரன் – ரூ.20,000/- சென்னை அண்ணாமலை (எம்.ஜி.ஆர். நகர்)-ரூ.20,000/- (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம் 25042019 இதழ்