நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே!

தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா?

அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள்.

தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

  1. மதுரை முருகேசன் வாசுகி – ரூ.20,000/-
  2. விடுதலை இராசேந்திரன் – ரூ.20,000/-
  3. சென்னை அண்ணாமலை (எம்.ஜி.ஆர். நகர்)-ரூ.20,000/-

(பட்டியல் பெருகட்டும்)

பெரியார் முழக்கம் 25042019 இதழ்

You may also like...