பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? ர. பிரகாசு
இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்பாட்டில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் குறித்து ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. A tough call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதிலும் கூட பெருமளவில் பாலினப் பாகுபாடு நிலவுவதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல; பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் மொபைல் பயன்பாட்டில் ஆண்-பெண் பாலினப் பாகுபாடு மிகுந்துள்ளது. நாம் இங்கு இந்தியாவைக் கணக்கில் கொள்வோம். இந்தியாவில் 71 விழுக்காடு ஆண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், 38 விழுக்காடு மட்டுமே பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி 31 விழுக்காடாக உள்ளது. இதை வெறுமனே பொருளாதாரக் காரணி என்ற அளவில் மட்டும் சுருக்கிவிட இயலாது. சாதி, மத, சமூகக் கட்டமைப்பு...
