Category: தலைமை அறிக்கை
நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! – துண்டறிக்கை
அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துண்டறிக்கைகான செய்திகள் ! நம்புங்க… அறிவியலை; நம்பாதீங்க… சாமியார்களை! அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைக்கு ஆதரவு தாரீர்! ஒவ்வொரு நாளும் பத்திரிகைளைப் புரட்டினால்…. தொலைக்காட்சிகளைப் பார்த்தால்…. நெஞ்சம் பதறுகிறது.! அப்பப்பா…. நம்முடைய மக்களில் பலரும் இந்த அறிவியல் யுகத்திலும் மூடநம்பிக்கைகளில் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? • சாமியார்களிடம் ஏதோ ‘மந்திர சக்தி’ இருப்பதாக நம்பி ஏமாந்து நிக்குறாங்க… • பிறக்கப் போவது பெண் குழந்தைகள் என்றால், அந்த மழலையை கருவிலேயே அழிக்கிறாங்க… 10 வயதுலேயே 30, 40 வயது ஆணுக்கு நம்ம பெண் குழந்தைகளை கல்யாணம் கட்டி அவுங்க வாழ்க்கையை பாழடிக்கிறாங்க. • “இந்த ‘சனியன்’ பொறந்ததுலேயிருந்து குடும்பமே விளங்காமல் போச்சு”ன்னு சோதிடக்காரர்கள் பேச்சை நம்பி பெற்ற குழந்தைகளையே சாகடிக்கிறாங்க. • குடும்பத்தின் பிரச்சினைகள்; மன அழுத்தங்கள்; தங்களை கவனிப்பாரில்லையே என்ற ஏக்கம்; அச்சம்; இப்படி பல்வேறு உளவியல் காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்ட நமது சகோதரிகளை...
இந்திய இராணுவமே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீரை விட்டு வெளியேறு!
திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சிபி.எம்.எல் (மக்கள் விடுதலை) கூட்டறிக்கை: மீண்டும் காஷ்மீர் பற்றி எரிய தொடங்கிவிட்டது. அந்த பனிப் பிரதேசத்திற்குள் கனன்று கொண்டிருக்கும் எரிமலையை இந்திய அரசால் எந்த கானல் நீரைக் கொண்டும் அணைக்க முடியவில்லை. 2008, 2009, 2010 ஐ தொடர்ந்து 2016 இல் மீண்டும் கல்லெறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரத்து மக்கள். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, அனந்தநாக் மாவட்டத்தில், ஹிஜ்புல் முஹாஜீதின் இளம் தளபதி புர்ஹான் வானி (வயது 22), “மோதல்” என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன்தான் புர்ஹான் வானி. ’பயங்கரவாதி’ என்று இந்திய அரசு சித்தரிக்க முயலும் அந்த போராளி...
திவிக செயலவை தீர்மானங்கள் மேட்டூர் 25062016
25062016 சனிக் கிழமையன்று சேலம் மாவட்டம், மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்ற, திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 – இரங்கல் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவுநர் (ஆனா ரூனா) அருணாசலம், திருச்சி இளந்தாடி துரைராசன், பெங்களூர் வேமண்ணா (எ) வி.சி. வேலாயுதம் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தீர்மானம் 2 – மாநில அரசின் உரிமை தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் – அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான் – மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7...
ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது
திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : ”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர். சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு...
தமிழக சட்டமன்ற தேர்தல் 2016
தமிழக சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து கழக தலைமைக் குழுவின் முடிவுகள் ! இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் ! தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 1) தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும்...
கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திவிக வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்...
ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !
வாட்ஸ்அப் ஊடகம் மூலம் செங்குட்டுவன் வாண்டையார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டிவிட்டு கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்கத்தோடும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து,சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து ஜாதி மோதலை உருவாக்கும் முயற்சியாக பேசி வருவதற்காக அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்கடந்த 23.03.2016 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை மாவட்டக் கழக செயலாளர் தோழர் உமாபதி மற்றும் கழகத் தோழர் செந்தில் FDL ஆகியோருக்கு ஜாதி வெறியர்கள் அலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் கால், ஸ்கைப்,நெட்கால் வாயிலாக எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் மறைந்திருந்து கோழைத்தனமாக ஆபாசமாக பேசுவதுதான் இந்த ஜாதி வெறியர்களின் வீரம் போலும்?இதுபோல் ஆபாசமாகவும்,கொலை மிரட்டல்...
சீமானின் அநாகரீகம்: பாண்டேயின் பார்ப்பனியத்துக்கு கழகம் கண்டனம்
‘தந்தி’ தொலைக்காட்சியில் மூத்த பொதுவுடைமைவாதி அருணனை ஒருமையில் இழிவாகப் பேசிய சீமானையும், இதை கண்டிக்காத ‘தந்தி’ தொலைக்காட்சி நெறியாளர் பாண்டேயையும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கை. ‘தந்தி’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நேரலை விவாதத்தில் பங்கு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன் வைத்த மூத்த பொதுவுடமைவாதி, எழுத்தாளர், பேராசிரியர் அருணனை அருவருக்கத்தக்க வகையில் தடித்த வார்த்தைகளால் பேசியது கண்டிக்கத்தக்கதாகும். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் போது அதற்கு தக்க பதிலை, தன் நிலைப் பாட்டை நாகரீகமாக வெளிப்படுத்துவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துக்கு தக்க பதில் சொல்ல இயலாத நிலையில் ஒரு மூத்த பொதுவுடமைவாதியை நோக்கி, ‘உனக்கு தத்துவம் என்ன உள்ளது?’ என கேட்பதும், ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசுவதும், மோசமாக...
திலீபன் மகேந்திரன் கையை முறித்த காவல்துறைக்கு கழகம் கடும் கண்டனம்
இந்திய தேசியக் கொடியை எரிக்கும் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரனை காவல்துறை கைது செய்து, அவரது கையையும் மூன்று விரல்களையும் இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறது. கொடி எரிப்பு அவமதிப்பு என்றால், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரட் டும். ஆனால், காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக கையை உடைக் கும் அளவுக்கு போயிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம், காவல் துறையின் இந்த செயலை வன்மை யாகக் கண்டிக்கிறது. கடந்த 6ஆம் தேதி மயிலாடுதுறையில் “ஜாதிக் கொரு சுடுகாடு; இது சுதந்திர நாடா?” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் இந்த செயலுக்காக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினார். சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் இந்த வன்முறை வெறியைக் கண்டித்து, கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்தை...
மதிப்புமிக்க பன்னாட்டு மன்னிப்பு அவை 2016 விருது – ஹென்றி திபேன்
மதிப்புமிக்க பன்னாட்டு மன்னிப்பு அவையின் எட்டாவது விருதைப் பெரும் தோழர் ஹென்றி திபேன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஓங்கட்டும் உங்கள் மனித உரிமைப் பணிகள்! அமையட்டும் ஒடுக்குமுறையற்ற சமத்துவ சமுதாயம்!
திருச்சியில் கழக செயலவை கூடுகிறது
திருச்சியில் கழக செயலவை கூடுகிறது
திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 24.1.2016 ஞாயிறு காலை 10 மணிக்கு திருச்சியில் கூடுகிறது. செயலவை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்கக் கோருகிறோம். இடம்: இரவி மினி ஹால், கரூர் புறவழிச் சாலை, திருச்சி. (கலைஞர் அறிவாலயம் அருகில்) பொருள் : கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் – கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல், புரட்சிப் பெரியார் முழக்கம் உறுப்பினர் சேர்க்கை. தோழமையுடன் கொளத்தூர் மணி (தலைவர்) விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 14012016 இதழ்
0
அணுஉலைப் பூங்கா அமைக்காதே! அணு ஒப்பந்தங்களை இரத்து செய்!
Visual Text Visual
வழுவூர் சுடுகாட்டுப் பாதை
Self Balancing Scooter Self Balancing Scooter Sale வழுவூர் சுடுகாட்டுப் பாதை சம்பவம் குறித்த கழக தலைவர் அவர்களின் அறிக்கை ! நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் என்ற கிராமத்தில் தாழ்ந்தப்பட்ட மக்கள்மீது, அங்கிருக்கிற ஆதிக்க ஜாதியினர், தொடர்ச்சியாக பொதுக்கோயிலில் இருந்து பால்குடம் எடுப்பதையும், இறந்த பிறகு பொதுப் பாதையில் இறந்தவர்களைக் கொண்டு செல்வதையும் அனுமதிக்காமலே உள்ளனர். இறந்த உடலை ஊராட்சிப் பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றால் அரை கிலோமீட்டர் மட்டுமே . ஆனால் வயல்வெளி, வாய்க்கால், வரப்பு என எடுத்துச் சென்றால் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றாக வேண்டும். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குஞ்சம்மாள் என்கிற தாழ்த்தப்பட்டப் பெண் ஒருவர் இறந்தபோதும் பொதுப்பாதையில் எடுத்துச் செல்லத் தடுத்ததால் பல்வேறு இயக்கங்கள், கட்சியினர் ஆதரவோடு, ஊராட்சிப் பொதுப்பாதை வழியாக எடுக்க அனுமதித்தால் மட்டுமே உடலை எடுப்போம் என அப்பகுதி இளைஞர்கள் போராடினர். மக்களின்...
கழக நாள்காட்டி தயார்!
2016ஆம் ஆண்டுக்கான கழக நாள்காட்டிகள் அழகிய வடிவில் தயாராகி விட்டன. காலண்டர் ஒன்றின் விலை: ரூ.60 தொடர்புக்கு: இராம. இளங்கோ, (வெளியீட்டு செயலாளர்) 9894962333 தபசி. குமரன்,  (தலைமை நிலைய செயலாளர்) 9941759641 பெரியார் முழக்கம் 31122015 இதழ்
அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர்: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்
அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர்: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்
அனைத்துப் பிரிவினரையும் அர்ச்ச கராக்கும் விவகாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் ஒரே கருத்தை கொண்டுள்ளன. இந்நிலையில், அனைத்து பிரிவினரும் அர்ச்சக ராக முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே வேளையில், அனைத்து பிரிவினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உறுதியாக செயல்பட வேண்டும். தடை விதிக்கப்படாத அர சாணையைப் பயன்படுத்தி அனைத்து பிரிவினரையும் அர்ச்சகராக்க வேண் டும். குறிப்பாக, தற்போது பயிற்சி முடித்துள்ள 207 பேரை கோயில்களில் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை...
வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்
வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உள்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர். காவல்துறை யின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக் காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காகவோ, குடிமைப் பொருட் களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் தான் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்து வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின்...
0
தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்கிட பன்னாட்டுப் பொறிமுறையன்றி வேறேதும் ஏற்றிடோம்!
தமிழினப் படுகொலைக்கு நீதி வழங்கிட பன்னாட்டுப் பொறிமுறையன்றி வேறேதும் ஏற்றிடோம்! திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை, இளந்தமிழகம் இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை துருக்கி நாட்டின் கோஸ் தீவில் போட்றம் கடற்கரையில் மூன்று வயதுச் சிறுவன் அயலன் சடலமாக ஒதுங்கிய நிழற்படம் ‘கரையொதுங்கிய மானிடம்’ என்ற தலைப்புடன் இணையத்தில் உலவி ஐரோப்பியர்களை உலுக்கிப் போட்டுள்ளது. அம்மக்கள் குற்றஞ்சுமந்த இதயத்துடன் ஏதிலியர்களை இருகை நீட்டி வரவேற்று அரவணைக்க முன்வந்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 2 முடிய நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்ற அமர்வில் நடைமுறையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்யும்படியான கூறுகளுடன் ஒரு தீர்மானம் அம்மன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் புலனாய்வுக் குழுவையும், மார்த்தி அத்திசாரி (பின்லாந்து), சில்லிய காட்ரிட் (நியூ சிலாந்து), அசுமா...
தமிழக அரசின் அலட்சியம்: கொளத்தூர் மணி கண்டனம் 0
தமிழக அரசின் அலட்சியம்: கொளத்தூர் மணி கண்டனம்
முற்றுகைப் போராட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதில் தமிழக அரசின் அலட்சியத்தைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம். திருவண்ணாமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 12 பேரில் 10 பேர் உடல்களை நேரில் பார்த்தபோது, உடல் முழுதும் தீக்காயங்களாகவே இருந்தன. கை, கால்கள் வெட்டப்பட்டும், துண்டிக்கப்பட்டும், ஒருவருக்கு இரண்டு கால் வெட்டப்பட்டும், ஒருவரின் ஆண்குறி துண்டிக்கப்பட்டும், ஒருவருக்கு பற்கள் பிடுங்கப்பட்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அந்த உடல்கள் காணப்பட்டன. படுகொலைகளை நியாயப்படுத்தும் ஆந்திர அரசையும் வாய் திறக்காமல் அமைதி காக்கும் மத்திய அரசையும் வன்மையாகக் கண்டித்து, போராட்டங்கள் நடக்கின்றன. அது நியாயமானதுதான். ஆனால், தமிழக அரசு காட்டும் அலட்சியத்தைக் கண்டிக்காமல், ஒதுங்கி நிற்க முடியாது. சடங்குக்காக ஒரு கடிதத்தை மட்டும் பிரதமருக்கு எழுதி, தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது. கண்துடைப்பு நடவடிக்கையாக வேலூரிலிருந்து மஞ்சுநாத் என்ற காவல்துறை...
0
தஞ்சை மாவட்டம் வடசேரியில் ஜாதிவெறியர்களின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம்.
தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கழக தலைவர் அறிக்கை ! தமிழ்நாட்டில் மிகவும் வெளிப்படையாக செயல்படும் ஜாதிவெறி சக்திகள்! கொஞ்சமும் அச்சமின்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஜாதிவெறியர்கள் ! நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தங்கள் ஜாதி வெறியை பரப்ப பயன்படுத்தும் அவலம் ! தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஜாதிவெறி சக்திகளின் ஜாதிவெறி நடவடிக்கைகளையும், இதனை கண்டு கொள்ளாத தமிழக அரசுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. சமீப காலமாக தமிழ் நாட்டில் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைகள் நவீன ஊடகங்கள் வழியாக மிகவும் வெளிப்படையாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ‘வாட்ஸ் அப்’ எனும் நவீன தொடர்பு ஊடகம் மூலம் பொறியாளர் கோகுல்ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் எனும் ஜாதிவெறியன், ஜாதி வெறியூட்டும் வகையிலும், காவல்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசி அதனை அனைவரும்...
தமிழக அரசு திருமண விவகார தலையீட்டு தடுப்புச்சட்டத்தில் தனது கருத்தை தெரிவித்து அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் 0
தமிழக அரசு திருமண விவகார தலையீட்டு தடுப்புச்சட்டத்தில் தனது கருத்தை தெரிவித்து அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
தமிழ்நாட்டில் அண்மைகாலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல் அதுவும் ஆணவ கொலைகள் என்கிற பெயராலே ஏராளமான ஜாதிய ஆணவக்கொலைகள் நடைபெற்று வருவதை திராவிட விடுதலைக்கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல் பொறியாளர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் இதுவரையிலும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 82-வது பிரிவின் கீழ் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கவேண்டும். 83-வது பிரிவின் படி அவரின் சொத்துக்களை முடக்கி அவரை உடனடியாக சரணடைய செய்யவேண்டுமென்று திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதுவரை காவல்துறை அவ்வாறு செய்யவில்லை உடனடியாக மேற்கூறிய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவேண்டும். அதே போல் இந்தியாவின் சட்ட ஆணையம் இப்படிப்பட்ட கவுரவ கொலைகளுக்கு, திருமண விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக ஒரு சட்டத்தை வடிவமைத்து கடந்த 2012ல் கொடுத்திருக்கிறது. அந்த சட்ட வரைவு குறித்து மற்ற மாநிலங்களில் கருத்து கேட்டப்பொழுது தென்னிந்தியாவில் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களும் தங்களின் கருத்துக்களை...
தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம் 0
தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம்
“கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் என்பவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. நடந்தது ஒரு சாதாரண கொலைதான், இதற்கு ஏன் காவல்துறை இப்படி பெரிதுபடுத்த வேண்டும் என்றும் காவல்துறையால் தன்னை நெருங்க முடியாது என்றும், தனது ஜாதிக்காரர்களிடம் ‘வாட்ஸ் அப்’ வழியாக யுவராஜ் பேசி, அந்த பேச்சு பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு ஒரு கொலை வழக்காக இருந்தால் தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை அவரது குடும்பத்தினரைக் கைது செய்து குற்றவாளியை சரணடைய வைத்திருப் பார்கள். ஆனால், இந்த யுவராஜை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து ஆகஸ்டு 17ஆம் தேதி ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து, திருச்செங் கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது” என்று செய்தியாளர்களுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார். தொடர்ந்து மதுவிலக்கு பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முழுமையான மதுவிலக்கு...
0
மரணதண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்க – பொது செயலாளர் விடுதலை இராஜேந்திரன் கோரிக்கை
”யாகூப் மேனனின் மரணதண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்து தண்டனை குறைப்பு வழங்க வேண்டும்.” – திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முதன்மையான குற்றவாளிகள் இருவர் வெளி நாடுகளுக்கு தப்பி சென்று விட்ட நிலையில், குற்றவாளியின் தம்பியான யாகூப் மேனன் தானாக முன் வந்து தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். அவ்வாறு தன் மீது குற்றம் இல்லை என தானாகவே முன் வந்தவருக்கு விசாரணியின் பின் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் யாகூப் மேனனை தூக்கிலிடப் போவதாக அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. உலகம் முழுவதும் மரணதண்டனைக்கு எதிராக தற்போது அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் குரல் எழுப்பிக்கொண்டுள்ள நிலையிலும்,பல நாடுகள் மரணதண்டனையை ரத்து செய்துவிட்ட நிலையிலும் மனித...
0
தலைமை அறிக்கை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் !
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும். ஜூலை 29 – ஈரோடு (தெற்கு – ஈரோடு ( வடக்கு ; ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்; ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு – சேலம் ( கிழக்கு ; ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்; ஆகஸ்டு 7 – பெரம்பலூர் – திருச்சி; ஆகஸ்டு 12 – திருவாரூர் – தஞ்சாவூர்; ஆகஸ்டு 13 – நாகை...
தலைமை அறிக்கை- மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 0
தலைமை அறிக்கை- மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
மாவட்டந்தோறும் கீழ்க்கண்ட திட்டப்படி கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த கழக செயலவை தீர்மானித்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர்,கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும். ஜூலை 29 – ஈரோடு (தெற்கு ) – ஈரோடு ( வடக்கு ); ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்;ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு ) – சேலம் ( கிழக்கு ); ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்;ஆகஸ்டு 7 –...
0
தலைமை அறிக்கை
அன்பு தோழருக்கு, வணக்கம் எதிர்வரும் 19.07.2015 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவைக் கூட்டம் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், செயல்திட்டங்கள், கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம்  மேலும், அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு, எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தில் பகுதி /ஒன்றிய, கிளைக் கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது, எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம் தலைமை கழகம்