ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

IMG-20160621-WA0023

You may also like...