கழக சார்பில் புதிய மாத இதழ் : புத்தக சந்தை ரூ.2 கோடி கட்டமைப்பு நிதி திரட்ட இலக்கு கழக தலைமைக்குழு முக்கிய முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கடந்த நவம்பர் 13, ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் மயிலாடு துறையில் ‘புத்தகச் சோலை’ அரங்கில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இயக்கத்தின் வளர்ச்சி, கட்டமைப்பு, பெரியாரியலை முன்னெடுப்பதற்கான அணுகுமுறைகள், புதிய நூல்களை வெளியிடுதல், அதை மக்களிடம் விற்பனை செய்வதற்கான புத்தக சந்தைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. புதிய மாத இதழ் ஒன்றை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.  கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு அதற்கான பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பொறுப்பாளர்                             மாவட்டங்கள்

இரா. உமாபதி            சென்னை, விழுப்புரம்,

காஞ்சிபுரம், வேலூர்,

கடலூர்

கணேசமூர்த்தி         திருச்சி, பெரம்பலூர்,

தஞ்சாவூர்,

நாகப்பட்டினம்,

திருவாரூர்,

புதுக்கோட்டை,

விருதுநகர்

நிர்மல்குமார்             திருப்பூர், கோவை

கொளத்தூர்  சேலம் (மேற்கு),

விஜயகுமார்               சேலம் (கிழக்கு)

வேணுகோபால்      ஈரோடு, கரூர்,

நாமக்கல்

தமிழ்மதி       கன்னியாகுமரி,

தூத்துகுடி, நெல்லை

காமாட்சி        மதுரை, சிவகங்கை,

பாண்டியன்  திண்டுக்கல்

பிரபு    தருமபுரி,

கிருட்டிணகிரி

ஒருங்கிணைப்பாளர் :

இரா. உமாபதி

சென்னை மாவட்ட செயலாளர்

தலைமைக்கழகத்துக்கும், பரப்புரை இயக்கங்களுக்குமான கட்டமைப்புகளை உருவாக்க மக்களிடம் ரூ.2 கோடி நிதி திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை கழகத் தோழர்கள் தலைமைக் குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இரவு 7 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.

பெரியார் முழக்கம் 17112016 இதழ்

You may also like...