கழகத் தோழர்களே! சமூக செயல் பாட்டாளர்களே! கண்காணியுங்கள்!

உங்கள் ஊரில் வினாயகன் சிலைகள் அனுமதி பெறப்படாத இடங்களில் வைக்கப்பட் டிருக்கிறதா?

  • உயர்நீதிமன்றம் – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு களுக்கு எதிராக ‘பிளாஸ்ட் ஆப் பாரிஸ்’ சுட்ட களிமண்ணால் சிலைகள் செய்யப்பட் டிருக்கிறதா?
  • வாகன விதிகளுக்கு எதிராக சரக்கு வாகனங் களில் ஆட்கள் கொண்டு வரப்படுகிறார்களா?
  • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி அலறி, மாணவ மாணவிகளுக்கும் நோயாளிகளுக்கும் பொது மக்களின் அமைதி யான உறக்கத்துக்கும் ஊறு செய்கின்றார் களா?
  • சட்ட மீறல், விதி மீறல் களை கண்காணியுங்கள்!

காமிராக்களில் படம் பிடித்து முகநூலில் பரப்புங்கள்!

உள்ளூர் காவல்துறைக்கு புகார் மனுக்களை எழுத்துப் பூர்வமாக வழங்குங்கள்!

கவனம்; கவனம்; விரைந்து செயல்படுங்கள்!

பெரியார் முழக்கம் 25082016 இதழ்

You may also like...