நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கழகம் ஆதரவு !
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 04.03.2017 அன்று நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்து கழகத்தின் ஆதரவினை தெரிவித்து உரையாற்றினார்.
மேலும் நெடு வாசல் கிராமம் அருகே ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றையும், அருகில் அமைக்கப்பட்டுள்ள ரசாயணக்கழிவு தேக்க தொட்டியையும் பார்வையிட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழ் நாட்டின் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். மீத்தேன் திட்டத்தை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த மாட்டோம் என சொன்ன மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எனும் வேறொரு பெயரில் வந்து இதே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மண்ணிற்கு அடியில் செய்யப்படும் நீர் விரிசல் முறை ஏற்படுத்தும் பாதிப்புகளை விவரித்து எந்த வடிவத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது எனவும் மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும். போராடும் மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கழகம் துணை நிற்கும் என கூறினார்.