சீருடையுடன் கூடுவோம்!
டிசம்பர் 24, சேலம் மாநாட்டுக்கு, தோழர்கள் கட்டாயம் கழக சீருடையான கருப்பு சட்டை – நீலநிற ஜீன்ஸ் பேண்டுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சீருடையில், பெரியார் பெரும் படையின் பேரணியும், அணி வகுப்பும் மாநாட்டில் மிகவும் முத்தாய்ப்பானது என்பதை சொல்லத் தேவையில்லை.
பெரியார் இயக்க வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்திய பெருமை சேலத்துக்கு உண்டு.
இதே சேலத்தில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக பெயர் மாற்றமும், பண்பு மாற்றமும் பெற்றது.
இந்த சேலத்தில்தான் வேத மத மறுப்பின் தொடர்ச்சியாக 1971ஆம் ஆண்டு பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நாட்டையே கலங்கடித்தது!
பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு மாநாட்டின் தலைப் பிலும் கருத்தரங்க தலைப்புகளிலும் புதிய யுக்தியை கழகம் பின்பற்றி யிருக்கிறது.
கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காத வேத மத மறுப்பாளர்கள் பலரும் மாநாட்டில் பேசவிருக் கிறார்கள்.
மாநாட்டின் அரங்குகளுக்கும் வேத மரபு மறுப்பாளர்களின் பெயர்களே சூட்டப்பட்டிருக்கிறது.
புதிய அணுகுமுறையில் தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் சங்பரிவார் பார்ப்பன சக்திகளை சந்திக்கப் போகிறோம்.
மாநாட்டின் தலைப்பைக் கேட்ட வுடன் பலரும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மாநாட்டின் வெற்றிக்கு கழகச் செயல் வீரர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றுகிறார்கள்.
கழகத் தோழர்களே! குடும்பத் துடன் வாருங்கள். ஆதரவாளர்கள் உணர்வாளர்களிடமும் எடுத்துச் சொல்லி அவர்களையும் மாநாட்டுக்கு வர ஏற்பாடு செய்யுங்கள்.
கட்டாயம் சீருடையுடன் வாருங்கள்!
சேலத்தில் சந்திப்போம்!
பெரியார் முழக்கம் 15122016 இதழ்