தமிழக அரசு திருமண விவகார தலையீட்டு தடுப்புச்சட்டத்தில் தனது கருத்தை தெரிவித்து அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

தமிழ்நாட்டில் அண்மைகாலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல் அதுவும் ஆணவ கொலைகள் என்கிற பெயராலே ஏராளமான ஜாதிய ஆணவக்கொலைகள் நடைபெற்று வருவதை திராவிட விடுதலைக்கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல் பொறியாளர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் இதுவரையிலும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 82-வது பிரிவின் கீழ் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கவேண்டும். 83-வது பிரிவின் படி அவரின் சொத்துக்களை முடக்கி அவரை உடனடியாக சரணடைய செய்யவேண்டுமென்று திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதுவரை காவல்துறை அவ்வாறு செய்யவில்லை உடனடியாக மேற்கூறிய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவேண்டும்.
அதே போல் இந்தியாவின் சட்ட ஆணையம் இப்படிப்பட்ட கவுரவ கொலைகளுக்கு, திருமண விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக ஒரு சட்டத்தை வடிவமைத்து கடந்த 2012ல் கொடுத்திருக்கிறது. அந்த சட்ட வரைவு குறித்து மற்ற மாநிலங்களில் கருத்து கேட்டப்பொழுது தென்னிந்தியாவில் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து விட்டனர். ஆனால் தமிழ்நாடு மட்டும் தனது கருத்தை இன்னமும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக திருமண விவகார தலையீட்டு தடுப்புச்சட்டத்தில் தனது கருத்தை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
ஆகஸ்டு 17-ந்தேதி திங்கட்கிழமை 11 மணியளவில் காவல்துறை தடையை மீறி திருச்செங்கோடு காவல் நிலையம் எதிரே கண்டன ஆர்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்

You may also like...

Leave a Reply