Category: சென்னை
களப்பணிகளில் கழகத் தோழர்கள்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...
சென்னை திவிக செயல்வீரர் செந்தில் அவர்களின் தந்தை மறைவு 05052017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.செந்தில் குமார் (FDL) அவர்களின் தந்தையார் இரா.இராமலிங்கம் இன்று (05.05.2017) காலை இயற்கை எய்தினார்… மதச்சடங்குகளை தவிர்த்து தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களின் உடலை பெண்களே மயானம் வரை சுமந்து சென்றனர்… திராவிடர் விடுதலை கழகத்தின் வீரவணக்கத்தின் முழக்கத்தோடு தந்தையாரின் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது…. இறுதி நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர்.தோழர்.உமாபதி அவர்கள் கழகத்தின் சார்பாக தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.. கழகத்தின் நிலைய செயற்குழு உறுப்பினர் தோழர்.அய்யனார் அவர்கள் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகளை தவிர்த்து பெண்களே ஏற்று நடத்திய தந்தையாரின் இறுதி நிகழ்வுக்கு பாராட்டையும் ….குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.
கக்கூஸ் ஆவணப்படம் சென்னை 01052017
மலக்குழியில் மனிதர்களை இறக்கும் இழிவிற்கு முடிவு கட்டுவோம்…… “கக்கூஸ் ஆவணப்படம்” திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவகத்தில் இன்று மாலை திரையிடப்பட்டது…. இதில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் தோழர்.அன்பு தனசேகரன் அவர்களின் தலைமையில் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது… இதில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர்.தபசி குமரன், சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன் மற்றும் இயக்க தோழர்கள் வந்திருந்தனர்… சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.உமாபதி அவர்கள் ஆவணப்படத்தின் திரையிடலை ஒருங்கிணைத்து நடத்தினார்.. திரையிடலுக்கு பிறகு பேசிய தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் மடமையை பற்றியும், ஆவணத் திரைப்படத்தை பற்றியும் இயக்க தோழர்கள் இதற்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசி கலந்துரையாடலை முடித்தார்
தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு – ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம் 30042017
“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று… ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்…. இன்று காலை (30.04.2017) 10 மணிக்கு ஆரம்பமானது.தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர்.வீ.சிவகாமி அவர்கள் வந்திருந்த அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கான சிறுகதை, விளையாட்டு பயிற்சி என பல்வேறு விதமாக கலந்துரையாடினார்…. வந்திருந்த சிறுவர், சிறுமிகளுக்கு குளிர்பானம் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது…. மதிய பொழுதில் சமூக கல்வி நிறுவனத்தின் தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்கள் சிறுவர், சிறுமிகளுக்கு ஓவியப்போட்டி, சிறுகதை என பல்வேறு பயிற்சிகளை அளித்து சிறுவர், சிறுமிகளுடன் பழகி கலந்துரையாடினார்கள்…. இறுதியாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் பழகு முகாமின் சிறுவர், சிறுமிகளை வழிநடத்திய தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்களுக்கு கழக மாத இதழ் நிமிர்வோம் புத்தகத்தை வழங்கினார். அதையடுத்து வந்திருந்து பழகு முகாமில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ்...
தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை 30042017
“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று…. காலை தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள், இயக்க தோழர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் வந்திருந்தனர்….. தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் வீரவணக்கம் முழக்கம் எழுப்பி, தோழர்.பத்ரி நாராயணன் அவர்களுடன் தன்னுடைய வாழ்நாள் அனுபவங்கள் அவரின் பெரியாரின் கொள்கையும் பற்றியும் பேசி தனது ஆழ்ந்த இரங்கலோடு மரியாதை செலுத்தினார்கள்… நினைவிடத்தில் வந்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி , திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளின் தோழர்கள், தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்தினார்கள்… தமிழ்நாடு அறிவியல் மன்றத்திலிருந்து வந்திருந்த தோழர்.வீ.சிவகாமி அவர்கள் தோழர்.பத்ரி நாராயணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்…....
“பாவேந்தர்” பாரதிதாசன் 127வது பிறந்தநாள் சென்னை 29042017
தை ஒன்றே தமிழர் புத்தாண்டு என்று முழங்கிய மக்கள் கவிஞன் “பாவேந்தர்” பாரதிதாசன் 127வது பிறந்தநாளான இன்று 29042017 … சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “பாவேந்தர்” பாரதிதாசன் அவர்களின் திருஉருவச்சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தோழர். தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்… கழக வழக்கறிஞர் தோழர்.துரை அருண் சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன், மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்களுடன் மாவட்ட தோழர்கள் பங்கேற்றனர்
“ஜாதி ஒழிப்புப் போராளி” புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை 23042017
“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை பெரம்பூர் சடையப்ப தாஸ் தெருவில் அமைந்துள்ள தாய் ராம்பாய் பவன் 23042017 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது. இந்நிகழ்வில் கருத்துரை தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அம்பேத்கரை திசை திருப்பும் சதி என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம் பற்றியும் மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை வழங்கினர் அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள் ஆழமான புரிதலோடு அனைவரும் அறிந்து சென்றார்கள்.
“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் நினைவு நாள் – குழந்தைகள் பழகு முகாம் சென்னை 30042017
“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள்…. ” ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்” வருகிற ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கிறது…. இடம் : விஜய் திருமண மண்டபம், லாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை -600014 பயிற்சியாளர்கள் : ஆசிரியர்.வீ.சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர்.ஜெ.சியாம் சுந்தர், சமூக கல்வி நிறுவனம். சிறப்பு அழைப்பாளர் : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக வருங்கால இளைய சமுதாய தோழர்கள், தோழிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெற வாரீர்….. குறிப்பு : * காலை 8 மணியளவில் தோழர்.செ.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த இயக்கம் சார்ந்த தோழர்கள் அனைவரும் வரவும்….. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை 14042017
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை சார்பாக அண்ணல் அம்பேத்கர் 126 ஆம் பிறந்தநாள் விழா அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கழகத் தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் டாக்டர்.அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் சென்னை மாவட்ட இயக்க தோழர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த கழக தோழர்கள் வாகன ஊர்வலமாக டாக்டர் அம்பேத்கருக்கு முழக்கமிட்டு டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்….. டாக்டர்.அம்பேத்கருக்கு திராவிடர் விடுதலைக் கழக மயிலாப்பூர் பகுதி தோழர்கள் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் கேக் வெட்டி…..அந்த பகுதி மக்களுக்கு கேக் வழங்கப்பட்டது…. இறுதியாக ராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் டாக்டர்.அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை 15042017
திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பாக….. “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்” கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்…. மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்து சைதாப்பேட்டை T.K. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்…. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 செய்தி ஜான் மண்டேலா
தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும் கருத்தரங்கம் சென்னை 04042017
04042017 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும்,...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த மாணவர்கள் எழுச்சியை அடக்கும் பொருட்டு தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டி தன தாக்குதலுக்கு ஆளான நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம் பகுதி தலித் மக்களுக்கு அனைத்திந்திய மாணவர் அமைப்பு சார்பாக பொருளுதவியும், நிதியுதவியும் மாணவர் அமைப்பு நிர்வாகி தோழர் அன்பு தலைமையில், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர். ஜெயபிரகாஷ், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி, திவிக தோழர்.இரா. செந்தில் குமார் (FDL) கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினர். மாணவர் அமைப்பை சார்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை கள ஆய்வு செய்து, அவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டிருந்த முப்பது குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பொருளுதவியும், மருத்துவ உதவி தேவைப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு பண உதவியும் வழங்கினர். உதவிகள் பெற்ற...
சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 02042017
திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று 2.4.17 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் உமாபதி தலைமையில் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நடந்து. இதில் குறிப்பாக புரட்சி பெரியார் முழக்கம் சந்தா உயர்த்துதல், நிமிர்வோம் இதழ் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்தல் மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம் நடத்துதல் என பல்வேறு தளங்களில் பெரியரியலை முன்னெடுப்பதை கலந்தாலோசிக்க பட்டது.
தோழர் ஃபாரூக் குடும்ப நிதி – இனமுரசு சத்தியராஜ் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்
இனமுரசு சத்தியராஜ் அவர்கள் தோழர் ஃபரூக் குடும்ப நிதியாக ௹பாய் ஒரு லட்சம் வழங்கினார். இனமுரசு சத்தியராஜ் அவர்கள், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக Rs 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) வழங்கினார். அப்போது திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், கழகத் தோழர் செந்தில் Fdl ஆகியோர் இருந்தனர்.
சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்…
ஞாயிறு 02042017 மாலை 5 மணியளவில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர். உமாபதி தலைமையில் நடைபெறவிருக்கிறது டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா… புரட்சி பெரியார் முழக்கம் வார ஏடு சந்தா … நிமிர்வோம் மாத இதழ் சந்தா… என பல்வேறு விசயங்களில் நமது அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க படவுள்ளது. ஆகையால், சென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட இயக்க தோழர்கள், சென்னை மாவட்ட பகுதி தோழர்கள், அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் இதில் கலந்துக் கொள்ள கோருகிறோம். இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், நடேசன் சாலை, டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை- 600004 தொடர்புக்கு : 7299230363
தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும்…. கருத்தரங்கம் சென்னை 26032017
மனிதநேயப் போராளி … தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும் …. கருத்தரங்கு சென்னை இராயப்பேட்டையில் 26032017 நடைபெற்றது. கருத்தரங்கம் தோழர் ஃபாரூக்கின் படத்திறப்போடு துவங்கியது. கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் … நாத்திகர்கள் மேடைகளில் நமது தோழமை இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு அவர்களது உரையை துவங்கும் போது ” உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று பிரார்த்தித்தவனாக .. உங்கள் முன் பேச துவங்குகிறேன் ” என்றே துவங்குவர். அது நாத்திகர்களின் மேடை மற்றும் நம் கொள்கைக்கு மாறானது என்ற போதும், அது தோழர்களின் கருத்துரிமை என்றும், அதற்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது என்றும் ., தோழமை அமைப்புகளின் கொள்கை உணர்விற்கு நாத்திகர்கள் மேடை எவ்வாறு கருத்துச் சுதந்திரத்தோடு நடந்துக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டினார் … இந்த கருத்தை கருத்தரங்கிற்கு வந்திருந்த...
தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 19032017 அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழநாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மத்திய கைலாஷ் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20 மாணவர்கள் கைது
சென்னையில் தோழர்கள் சாலை மறியல்
ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். “கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்
தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 19032017
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் 19032017 அன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்
தோழர் ஃபாருக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கைது செய் ஆர்ப்பாட்டம்
மதவெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோவை திராவிடர் கழக தோழர் பாரூக் படுகொலைக்கு காரணமான மதவெறியர்களை கண்டித்து காவல் துறையே கைது செய் என்று ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து பின் சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கருகில் சாலை மறியலில் ஈடுப்பட்ட திவிக, தபெதிக, சேவ்தமிழ் இயக்க தோழர்கள் 60 கைது.
பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய்?
பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய் மதவெறி மலத்திற்கு நீ மனிதம் பேசியதற்கா மரணம் பூசியிருக்கிறார்கள் மலம் தின்னிகள் … பாரூக் பெயருக்காக சிறையை தந்த மதமே கொள்கைக்காக மரணம் தந்ததும் நீயோ … நீ கழுத்தறுப்பட்டு வீசப்பட்டிருக்கிறாய் மனிதமற்ற மதங்களுக்கு புதிதில்லை மக்களின் கழுத்தறுப்பது … மதங்கள் அன்பை போதிக்கின்றன கைமாறாய் பாரூக் போன்ற மனிதங்களை தின்று … பாரூக் உன் குடும்பம் அழுகை நிறுத்தும் நேரம் காத்திருக்கிறோம் எங்கள் கையாலாகாத்தனத்தை சொல்லி அழ … இரா. செந்தில் குமார்
தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 17032017
17032017 மாலை, தோழர் ஃபாரூக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை தோழா் ஃபரூக் அவா்களை படுகொலை செய்த கொலைகாரர்களை உடனடியாக கைது செய்ய வலியுருத்தி கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17. 03. 2017 வெள்ளி நேரம் : மாலை 4:00 மணிக்கு,, இடம்: சென்னை, அண்ணா சாலை, சிம்சன் பொியாா் சிலை அருகில். தலைமை : தோழர் உமாபதி, மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் . அனைத்து தோழா்களும் வரவும். திராவிடர் விடுதலைக் கழகம். சென்னை மாவட்டம் பேச:7299230363
பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017
தமிழர்களை அழிப்பதையே ஒரே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் மார்ச் 14 காலை 10 மணி சென்னை காவிரி நதி நீர் மறுப்பு பவானி, மேகதாது, பாலாறு தடுப்பணைகள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத் திணிப்பு தமிழக மீனவர்கள் படுகொலையில் கூட்டுச்சதி என்று தமிழர்களை அழிப்பதையே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் தமிழின விரோதி பாஜகவை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்
இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று முழக்கத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இனக்கொலை விசாரணைக்கு இலங்கை அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தத் தீர்மானம் கொண்டு வா ! என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் …. உணர்வாளர்களே , தோழர்களே வாருங்கள் … 05032017 மாலை 3 : 00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் 72992 30363
மாணவர் எழுச்சிக்கு அரணாய் சென்னை திவிக
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அரணாய், அமர்க்களமாய் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் …. எதிரி பீட்டா ( PETA) அல்ல … அந்த போர்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் இந்துத்துவாவே ( RSS) என்பதை முழக்கங்கள் மூலமாகவும், பதாகைகள் மூலமாகவும், வீதி நாடகங்கள் மூலமாகவும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாணவர்களும் தெளிவாக பொது எதிரியை கண்டுக்கொண்டு பாஜக மோடி அரசையும், ( RSS) ஆர் எஸ் எஸ் யையும் கண்டித்து முழக்கங்களால் விண்ணை அதிர வைத்தனர். சென்னையிலுள்ள தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக சென்னை மாவட்டசெயலாளர் தோழர் இரா. உமாபதி தலைமயில் திவிக மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பிரகாசு முன்னிலையில் போராட்டத்தில் கலந்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர் . தோழர் பிரபாகரன் பிணமாக நடித்திட , திவிக தோழர்கள் உடலுரிமை இயக்க தோழர் இரன்யாவின் தலைமையில் ஒப்பாரி வடிவில் தமிழகத்தின் நசுக்கப்படும் உரிமைகளை...
17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா சென்னை 12012017
தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு … திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நடத்தும் … 17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா … வாருங்கள் தமிழர்களாய் இணைந்து மனிதர்களாய் கொண்டாடி மகிழ்வோம் … நாள் : 12 : 01 : 2017 இடம் : வி . எம் . தெரு, இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
திமுக தலைவர் கலைஞர் உடல்நலத்தை கழகத் தலைவர் விசாரிப்பு சென்னை 02012017
கலைஞரின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவர் இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இன்று சென்றார்கள். அப்போது திமுக பொருளாளர் வரவேற்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, பொன்முடி இருந்தார்கள்.
எண்ணூரில் மதவாத எதிர்ப்பு கருத்தரங்கம்
சென்னை மாவட்டம் எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் சார்பாக 20.11.2016 அன்று மாலை “மதவாதம் – கல்வி வியாபாரக் கொள்கைக்கு எதிராக பொது வெளி கருத்தரங்கம்” அரிகரன் தலைமையில் சிறப்புடன் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “ஆட்சியில் இந்துத்துவம்: விளைவுகள் – சவால்கள்” என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். இந்துத்துவம் இந்து என்று சொல்லப்படுகிறவர்களுக்கு எப்படியெல்லாம் கல்வி தர மறுக்கிறது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன் வைத்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகள் குறித்து விரிவாகப் பேசினார். தோழர் பகத்சிங் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்துக் கொண்டனர். செய்தி: செந்தில்FDL பெரியார் முழக்கம் 24112016 இதழ்
மனிதர்களை சாக்கடைக்குள் இறக்கும் அவலத்தை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்
சாக்கடைக் குழிக்குள் மனிதர்களை இறக்குவதை சட்டம் தடை செய்தாலும் நடைமுறையில் அரசு நிறுவனங்களே மீறிக் கொண்டிருக்கின்றன. சென்னை மாநகராட்சி, சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதைக் கண்டு கொள்வதே இல்லை. ஒப்பந்தக்காரர்களிடம் இந்தப் பணியை ஒப்படைத்து விட்டதாகக் கூறி தப்பி விடுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சாக்கடைக் குழியில் தொழிலாளர்கள் இறங்கியதை கழகத் தோழர்கள் தடுத்து நிறுத்தி ஒப்பந்தக்காரர் மீது காவல் துறையிலும் புகார் கொடுத்து வழக்கு பதிய செய்துள்ளனர். இது குறித்த செய்தி: சென்னை மாவட்டம் 123 ஆவது வட்டத்தில் சில துப்புரவு தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த பக்கமாக சென்ற திராவிடர் விடுதலைக் கழகம் மயிலை பகுதி தோழர்கள் அதை கண்டவுடன் அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை வேலை வாங்கிய ஒப்பந்தக்காரர் பிரகாசு மற்றும் மாநகராட்சி அதிகாரி சுந்தர்ராஜன் இருவரிடமும் தோழர்கள் கேள்விகளை முன் வைத்து வாதத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கழிவுகளை...
மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு – FASR நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி மோதல் கொலைகளை கண்டித்து 19 : 11 :2016 சனிக்கிழமையன்று காலை 10 : 00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ” கண்டன ஆர்ப்பாட்டம் ” திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றுகிறார். சென்னை மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
வடசென்னையில் கழகக் கூட்டம்: பெண்கள் பெருமளவில் பங்கேற்பு
வட சென்னை மாவட்டக் கழகச் சார்பாக புளிந்தோப்பு கே.பி.பார்க்கில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக பாடகர் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து காவை இளவரசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அப்பகுதி மழலைகளை மட்டுமில்லாமல் இளைஞர்களையும், பெண்களையும் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முனைவர் சுந்தரவள்ளி பெரியாரின் சிந்தனைகள், கொள்கைகள், இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார், இந்துத்துவத்தின் திணிப்பு போன்றவைகளை பற்றி குழந்தைகளுக்கும் புரியும் எளிய முறையில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் முழுமையான டாஸ்மாக் போதையில் இந்துத்துவ பிரதிநிதியாக வந்து இதெல்லாம் பேசக்கூடாது என்றார். எதெல்லாம் என்று கேட்டதற்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது மட்டும்தான் போலும். நம் தோழர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பேசிய முனைவர், அந்த அண்ணனுக்காகவும் தான் எங்கள் பிரச்சாரம் என்றார். அடுத்து பேசிய சென்னை மாவட்ட செயலாளர்...
“தீபாவளி புனிதமா ? வணிகமா?” சென்னையில் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்
விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள், மாணவியர்கள், தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கை களை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா. உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்
சென்னையில் முற்றுகைப்போராட்டம் ,கைது !
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 26.04.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக பொதுச்செயலாளர் தோழர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை.முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இம்முறைக்கப்போராட்டத்தின் போது சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று !உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே ! என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முற்றுகையில் ஈடுபட்ட கழக தோழர்கள் கைதுசெய்யப்பட்டு மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டார்கள். இம்முற்றுகைப் போராட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,மாவட்ட தலைவர் வேழவேந்தன்,மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார்,கழக வழக்கறிஞர் அருண் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.
கழகத் தோழர் பாரூக் அவர்களின் சார்பாக கழகத் தலைவர் அறிவுரை கழகத்தில் வாதம் சென்னை 09112016
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரண ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரத்தின் போது, காவல்துறை சில இந்து முன்னணியினரை கைது செய்ததோடு, இந்து முன்னணியினரை சமாதானப்படுத்தும் நோக்கில் சில இஸ்லாமியரை கைது செய்தது . அதில் கோவையை சேர்ந்த பெயரில் மட்டுமே இஸ்லாமிய அடையாளம் உடைய இறை மறுப்பாளரான திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் “பாரூக் ” கையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது. இந்து அமைப்புகள் தந்த அழுத்தத்தால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிந்தது காவல்துறை. அவருக்கு வழங்கப்படும் சட்ட வாய்ப்பான அறிவுரை கழகத்தின் ( Advisory board) முன்பு ஆஜர் படுத்த , இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ” பாரூக் ” சார்பாக அவர் பக்க நியாயங்களை அறிவுரை கழகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் முன்பு எடுத்துரைக்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி “பாரூக்...
கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 03112016
முன்னாள் IAS அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் ஊடகத்தில் புராண கற்பனை கதாபாத்திரமான இராமனை கொளுத்துவேன் தன் கருத்தினை பதித்ததற்காக … பார்ப்பன இந்துத்துவ ஊடகம் தினமலர் அவரை பற்றிய விவரங்களுடன் செய்தியை வெளியிட்டு, அவரின் அலைபேசி எண்ணையும் அதில் பதித்து, பார்ப்பன அடிமைகளை தூண்டும் விதமாக இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாய் பார்ப்பன கும்பல் ஒரு முன்னாள் அதிகாரி என்றும் கருத்தில் கொள்ளாமல் தன் காலித்தனத்தை காட்டும் விதமாக, அவரை தரக்குறைவான வார்த்தைகளாலும், அவரை ஜாதியின் பெயரால் இழிவு படுத்தியும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளது. அவர்களை கண்டித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதச்சார்ப்பின்மை இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 03 11 2016 வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடந்தது . அதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன் தன் கண்டனத்தை இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக பதிவு செய்தார்.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை 05112016
வட சென்னை மாவட்டம் சார்பாக புளிந்தோப்பு கே.பி.பார்க் கில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 05112016 அன்று நடைபெற்றது. கழக பாடகர் தோழர் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார் . தொடர்ந்து தோழர் காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அப்பகுதி மழலைகளை மட்டுமில்லாமல் இளைஞர்களையும், பெண்களையும் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முனைவர் .சுந்தரவள்ளி பெரியாரின் சிந்தனைகள் , கொள்கைகள் , இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார், இந்துத்துவத்தின் திணிப்பு போன்றவகளை பற்றி குழந்தைகளுக்கும் புரியும் எளிய முறையில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் முழுமையான டாஸ்மார்க் உதவியுடன் போதையில் இந்துத்துவ பிரதிநிதியாக வந்து இதெல்லாம் பேசக்கூடாது என்றார். எதெல்லாம் என்று கேட்டதற்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது மட்டும்தான் போலும், நம் தோழர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து பேசிய முனைவர் அந்த அண்ணனுக்காகவும்...
அறிவுரைக் குழுமம் முன் கழகத் தலைவர் வாதம் சென்னை 08112016
இன்று 08.11.2016 மதியம் 2 மணியளவில் அறிவுரைக் குழுமம் முன் கழக தலைவர் அவர்கள் நேரில் வாதுரைக்கிறார். கடந்த மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதையடுத்து கோவையில் இந்து மதவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். அந்த வன்முறை செயல்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத கழக தோழர் பாரூக் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தமிழக காவல் துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியுள்ளது. இவ்வழக்கின் மீதான அறிவுரை குழுமத்தின் விசாரணை இன்று 8.11.2016 மதியம் 2 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அவ்வமயம் நேரில் ஆஜராகி கழக தோழர் பாரூக் அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சென்னை 05112016
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் வடசென்னை மாவட்ட தோழர்கள் கழக பாடகர் தோழர் அருள்தாஸ் தலைமையில், தோழர் விஜயன் வரவேற்புரையில், தோழர் பாஸ்கர் தோழர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் 5:11:2016 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணியளவில் புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . நிகழ்காலத்திலும் பெரியாரின் தேவையை உணர்த்தும் பல்வேறு தலைப்புகளில் பொதுச்செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன், முனைவர். சுந்தரவள்ளி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை அருண், சிறப்புரையாற்றுகிறார்கள். தோழர் காவை. இளவரசன் வழங்கும் அறிவியல் நிகழ்ச்சி மந்திரமா – தந்திரமா மற்றும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தோழர் வேலு நன்றியுரையுடன்நிகழ்ச்சியை முடித்து வைப்பார் . அனைத்து பகுதி தோழர்களும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை
தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது . மாணவர்கள், மாணவியர்கள் தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கைகளை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணிதொகுதி MLA ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். செய்தி : தோழர் உமாபதி, மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
இலங்கை துணை தூதரக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 26102016
யாழ் பல்கலை மாணவர்கள் சிங்களக் காவல்துறையால் சுட்டுக் கொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகை – 400 பேர் கைது. கடந்த 2016 அக்டோபர் 21அதிகாலை கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (பவுன்ராஜ்) சுலக்சன் ஆகிய யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிங்களக் காவல்துறை இரு தமிழ் மாணவர்களைச் சுட்டுக் கொன்ற உண்மையை மறைத்து, அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் காட்டவே முதலில் முயன்றனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை இப்போது சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது சொல்லியிருக்கும் சமாதானங்கள் ஏற்புடையவையாக இல்லை. இரு மாணவர்களும் காவலரணில் வண்டியை நிறுத்தாமல சென்றதால் சுட நேரிட்டது என்ற விளக்கத்தை இப்போதைய சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள மனோ கணேசனே ஏற்கவில்லை. துரத்திப்பிடிக்கத்தானே உங்களுக்கு அதிநவீன 1000 சிசி மோட்டார் சைக்கிள்கள் தரப்பட்டுள்ளன என்று அவர் கேட்டுள்ளார். சுடுவதென்றாலும் முதலில் வான் நோக்கியும் பிறகு...
தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் சுவரொட்டி
உண்மையை உரக்க சொன்ன தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து, அவருக்கு மிரட்டல் விடுக்கும் பார்ப்பனீய சக்திகளை எச்சரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
பாஜக தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 07102016
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறி தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மதவாத பா.ஜ.க வை கண்டித்து முற்றுகையிட்ட கழக தோழர்கள் 54 பேர் கைது ! 07.10.2016 காலை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி தலைமையில் பாஜகவை கண்டித்து முழக்கமிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற கழக தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி,தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார்,காஞ்சீபுரம் ரவிபாரதி,மாவட்ட பொறுப்பாளர்கள் வேழவேந்தன்,ஏசுகுமார், பிரகாசு உள்ளிட்ட தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’
நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருமணம் பதிவு செய்த பின்னர் இருவரும், பெரியண்ணனின் சகோதரியின் ஊரான ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் தங்கி தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினர். ஜாதி மாறி நடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தன்னை ஜாதியின் காப்பாளனாகக் கருதிக்கொள்ளும்...
பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை போராட்டம் ! சென்னை 07102016
தமிழர்க்கு எதிரான பா.ஜ.க வின் போக்கை கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணை பிறப்பித்தும், அதை மதிக்காமல் ஏற்க மறுக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக முற்றுகைப் போராட்டம் . தமிழக விவசாய் மக்களை விட கர்நாடக தேர்தலையே முக்கியமாக கருதும் மதவாக பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தோழர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு மதவாத பாஜக விற்கு எதிரான பதிவை வலுப்படுத்த வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது – சென்னை திவிக மனு
அரசு அலுவலகங்களில் மத சார்புடைய ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாதென அரசு கொண்டுவந்த அரசாணையை கட்டாயம் அமலில் கொண்டுவர வலியுறுத்தியும், பூஜை நடைபெறும் அலுவலகங்களை கண்காணித்து தடுத்தும், மீறும் அலுவலகங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க கோரியும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் 05 : 10 : 2016 புதன்கிழமை இன்று காலை 11 : 00 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகம் வேப்பேரியில் மனு கொடுக்கப்பட்டது . மேலும் அவர் செய்தியாளர்களிடம் அரசாணையை மீறி பூஜை நடைபெறும் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று பதிவு செய்தார். நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. உமாபதியுடன் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
