பாரூக் இறையை மறுத்ததற்கா இரையானாய்?

பாரூக்
இறையை மறுத்ததற்கா
இரையானாய் மதவெறி மலத்திற்கு
நீ
மனிதம் பேசியதற்கா
மரணம் பூசியிருக்கிறார்கள்
மலம் தின்னிகள் …

பாரூக்
பெயருக்காக
சிறையை தந்த மதமே
கொள்கைக்காக
மரணம் தந்ததும் நீயோ …

நீ
கழுத்தறுப்பட்டு வீசப்பட்டிருக்கிறாய்
மனிதமற்ற
மதங்களுக்கு புதிதில்லை
மக்களின் கழுத்தறுப்பது …

மதங்கள்
அன்பை போதிக்கின்றன
கைமாறாய்
பாரூக் போன்ற
மனிதங்களை தின்று …

பாரூக்
உன் குடும்பம்
அழுகை நிறுத்தும்
நேரம் காத்திருக்கிறோம்
எங்கள்
கையாலாகாத்தனத்தை சொல்லி அழ …

இரா. செந்தில் குமார்

whatsapp-image-2017-03-17-at-09-56-05 whatsapp-image-2017-03-17-at-11-49-50

You may also like...