பேராவூரணி கழக ஆர்ப்பாட்டத்தில் ‘எவிடென்ஸ்’ கதிர் பேச்சு
ஜாதி ஆணவ படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவல்துறை ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில் – தமிழகத்தில் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அவர்களை ஒடுக்கு வதற்காக, அவர்களின் குரல்களை நசுக்கு வதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை போராளிகள் மீது அரசு பாய்ச்சுகிறது. நியாயப்படி ஜாதியின் பெயரால் ஆணவ படு கொலை செய்பவர்களையும், கொலையை தூண்டுபவர்களையும் தான் அந்த சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். ஆணவ கொலையாளிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 174...
