‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளி வந்த கட்டுரை ‘திராவிட மாடலே’ சம வளர்ச்சியை உருவாக்கும் சேலம் தரணிதரன்
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் அரசியல் தத்துவம். அது எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூகத் தலையீடுகள் (Targeted Social Interventions) என்றழைக்கப் படுபவை அக்குறிக்கோளுக்கு வழிகாட்டு வதாக அமைந்துள்ளன. சமமின்மை (Inequality) என்பது இந்தியா வின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று என்கிறார் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட். அப்பிரச்சினையை எதிர் கொள்வதில் சமூகத் தலையீடுகளின் பங்கு முக்கியமானது. சமவாய்ப்புக்கான செயல்பாடுகள் தமிழ் நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டன. சென்னை மாநகராட்சியால் பள்ளி மாணவர் களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம் நவம்பர் 17, 1920இல் தொடங் கப்பட்டது. 1956ஆம் ஆண்டு இத்திட்டம் காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. அதனை அடுத்து, ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் நலிந்தோருக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. சம வாய்ப்புக்கான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடலின் முக்கிய அம்சமாகும். இத் திட்டங்கள் ஏழை, எளியவர்களின்...
