வன்னியர் இட ஒதுக்கீடு இரத்தானது ஏன் ?
பாட்டாளி மக்கள் கட்சியுடன், தேர்தல் கூட்டணி நோக்கத்துக்காக அக்கட்சி விதித்த நிபந்தனைகளை ஏற்று, கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அவசரம் அவசரமாக வன்னியர் தனி இட ஒதுக்கீடு மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின், அரசு எந்த புதிய முடிவையும் வெளியிட முடியாது என்பதால், ஆணையத்தின் அறிவிப்பு வெளி வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அன்றைய முதலமைச்சர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இப்போது மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை 10.5ரூ இட ஒதுக்கீட்டை இரத்து செய்து விட்டது. நீதிமன்றம் ஏன் இரத்து செய்தது என்பது குறித்து ஆங்கில ‘இந்து’ நாளேடு(3.11.2021) எழுதியுள்ள தலையங்கத்தின் சில முக்கியமான கருத்துக்கள். 1) பிப்ரவரி 2021 இல் சட்டசபையில் 10.5ரூ இட ஒதுக்கீடு வந்த போது அரசியல் சட்டத்தின் 102 ஆவது திருத்தம் அமலில் இருந்தது. இதன்படி பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்...