ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரை கண்டித்து பல்வேறு இடங்களில் நடந்த கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்.

மேட்டூர் : ஆளுநரே வெளியேறு! ஒன்றிய அரசே, ஆணவம் பிடித்த ஆளுநரைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்தோடு மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்பு களுடன் 12.01.2023 வியாழன் மாலை 4.30 மணியளவில் மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா தலைமையில் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் குமரப்பா, ஆளுநரைக் கண்டித்து கண்டன முழக்கமிட அனைவரும் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.சதீஷ், சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், ளுனுஞஐ கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஃபைரோஸ், திராவிடர் விடுதலைக்கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

அனைவரும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டதை விளக்கி பேசினார்கள்.  நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரை நிகழ்த்தினார்.

தலைவர் தமது உரையில் “ஆளுநரின் அத்து மீறல்களையும், ஆளுநர் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராகவும், தனது அதிகார வரம்புகளை மீறியும் சனாதன தர்மம், இந்தி மொழி கொள்கை, தமிழ்நாடு என்ற சட்டபூர்வ பெயரை மாற்றல் போன்ற செயல்களால் பிஜேபி நபரை போல தொடர்ச்சியாக பேசி வருகிறார் என்றும் எனவே ஒன்றிய அரசே ஆளுநரை திரும்ப பெற வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

நிறைவாக தோழர் ஓ. சுதா நன்றி கூற கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சூரியக்குமார், செயற்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன் மற்றும் நங்கவள்ளி, வனவாசி,மேட்டூர் சுளு, மேட்டூர் நகரம், கொளத்தூர், காவலாண்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டது.

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆளுநரே வெளியேறு! ஒன்றிய அரசே ஆணவம் பிடித்த ஆளுநரை திரும்ப பெறு என்று வலியுறுத்தி 12.01.2023 காலை 11மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டக் கழகத் தலைவர் க. சக்திவேல் தலைமை தாங்கினார். ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டு மாவட்ட அமைப்பாளர் பெருமாள் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஆளுநரின் சட்டவிரோத போக்குகளையும் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளையும் விளக்கி தோழமை அமைப்புகளின் தலைவர்கள் தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

மோகன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காஜாமைதீன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி,  உதய பிரகாஷ் – தமிழ் புலிகள் கட்சி,  மாரியப்பன் – தமிழ் தேச மக்கள் முன்னணி, சுந்தரவதனம் – திராவிட இயக்க தமிழர் பேரவை, வின்சென்ட் – புரட்சிகர இளைஞர் முன்னணி,  பொன் சரவணன் – தமிழ் கலாச்சார இயக்கம், மோ.பாலு – மாநகர அமைப்பாளர் திவிக, தேவபிரகாஷ் – மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திவிக ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மாநகர செயலாளர் ஆனந்தி நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை   நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளம்பிள்ளை ஏற்காடு ஆத்தூர் சிந்தாமணியூர் சேலம் மாநகரத்தை சார்ந்த தோழர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஆளுநரே வெளியேறு! ஒன்றிய அரசே ! தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறு! எனும் முழக்கங்களுடன் கண்டண ஆர்ப்பாட்டம்

13.01.2023, வெள்ளிக்கிழமை, காலை 10:30 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் கழகப் பொருளாளர் தோழர் துரைசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டத் தலைவர்முகில் ராசு முன்னிலையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டு ஆளுநரின் தமிழ்நாட்டிற்கு எதிரான போக்கை கண்டித்தும் ஆளுநரே வெளியேறு ஒன்றிய அரசே ஆளுநரை திரும்பப் பெறு என வலியுறுத்தி தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

கண்டன உரையாற்றியோர் :  சீனிவாசன்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி,  தமிழ் அமுதன் – பொறுப்பாளர், புரட்சிகர இளைஞர் முன்னணி;   ஷேக் அலாவுதீன் – தலைமைக் கழகபேச்சாளர், ளுனுஞஐ கட்சி;  டேவிட் – அணைமேடு; வே. கார்மேகம் – மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் கனல் மதி, மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாணவர் கழகப் பொறுப்பாளர் மகிழவன், இணையதள பொறுப்பாளர் பரிமளராசன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

விடுதலைச் செல்வன் நன்றியுரையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

ஈரோடு :  14-01-2023 திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டம் சார்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பேரன்பு கண்டன உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது காவல்துறையினர் தங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறி தோழர்கள் அனைவரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

கைதான தோழர்கள் விவரம்:  மாநில அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், எழிலன்- ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர், செல்வகுமார்- ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர், கண. குறிஞ்சி – ஒருங்கிணைப்பாளர், சமூக நீதிக் கூட்டமைப்பு தோழர்கள் கணேசன், திருமுருகன், பெருந்துறை பழனிச்சாமி, பேரன்பு, பிரபு, சென்னிமலை கார்மேகம்.

 

 

பெரியார் முழக்கம் 19/01/2023 இதழ்

 

You may also like...