Author: admin

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சென்னை 19082017

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சென்னை 19082017

ஆகஸ்ட் 06 முதல் 12 வரை நடைபெற்று முடிந்த சமூக நீதி – சமத்துவ பரப்புரை பயணத்தை பற்றியும்…. மதவாத சக்திகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் பெரியார் கைத்தடி ஊர்வலம்…. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா… போன்றவைகளை பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நாளை (19.08.2017 சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவகத்தில் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது…. சென்னை மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்… திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தொடர்புக்கு : 7299230363

497 T.T.V.தினகரன் அணி பா.ஜ.க.விடம் சரணடைந்து விட்டதற்கான அறிகுறிகள் 18072017

497 T.T.V.தினகரன் அணி பா.ஜ.க.விடம் சரணடைந்து விட்டதற்கான அறிகுறிகள் 18072017

அஇஅதிமுக அதிகாரப்பூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” பத்திரிக்கையில் “காவி அடி கழகத்தை அழி” என்ற கவிதை ஒன்று மூன்று நாட்களுக்கு முன்பு வெளி வந்தது. பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தது அந்த கவிதை. பரபரப்பாக மூகநூலில் பதியப்பட்டதும் கூட. பாரதீய ஜனதா கட்சி, அஇஅதிமுகவை மூன்றாக பிளந்து கட்சியை ஒழிப்பதற்கு சதி செய்கிறது. மாநிலங்களின் உரிமைகளை குறுக்கு வழியில் தலையீட்டு தடுக்கிறது என்று கடுமையான விமர்சனங்களை கொண்ட அந்த கவிதை. அந்த கவிதையை எழுதியவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த “மருது அழகுராஜ்”. சித்ரகுப்தன் என்ற புனை பெயரில் அந்த கவிதையை எழுதியிருந்தார் மருது அழகுராஜ். இப்போது இந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தினகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்திருப்பதாக ஆங்கில நாளோடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. தினகரன் இதை பற்றி கூறுகையில் அழகுராஜ் சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதிய கவிதை கழகத்தின் கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கிறார். ” நீண்ட விடுமுறையில்...

இராவணன் – கழக மாநாட்டில் தோழர் மணி அவர்களின் ஆண் குழந்தைக்கு கழக தலைவர் பெயர் சூட்டல்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயண நிறைவுவிழா திருச்செங்கோடு மாநாட்டில் சம்பூகனை கொன்று ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கியவன் அயோக்கியன் இராமன். தன் எதிரியின் மனைவி தனக்கு அடிமையாக இருந்தும் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்ற சமூகநீதி காத்தவன் இராவணன் எனக்கூறி தோழர் மணி அவர்களின்மகனுக்கு இராவணன் என்ற பெயர் சூட்டலுடன் இனிதே முடிந்தது மாநாடு “இராவணன்” திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டு மேடையில் மணி – பிரியா இணையரின் ஆண் குழந்தைக்கு ‘இராவணன்’ என்று தோழர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார். பெரியார் முழக்கம் 17082017 இதழ்

சமூக நீதி சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள் திருச்செங்கோடு 12082017

மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...

தோழர் கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்! மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!!

தோழர்.கொளத்தூர் மணி-க்கு துணை நிற்போம்! மதவாத-சாதிவெறி சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்!! ************************* முத்துராமலிங்கத்தைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசியதாக தோழர்.கொளத்தூர் மணி மீது இந்து மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட சாதி வெறியர்கள் தங்களது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முத்துராமலிங்கம் குறித்த அவரது பேச்சிற்கு சாதிப் பாசம் அப்பட்டமாக வெளிப்படும் வண்ணம் இதுகாறும் தங்களை முற்போக்காளராகக் காட்டி வந்த பலரும் ்எதிர்வினையும் அறிவுரையும் வாரி வழங்கி வருகிறார்கள். முத்துராமலிங்கத்தைப் முக்கி முக்கி புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்நிலையில் சாதிவெறித்தனத்தின் உச்சபட்ச நடவடிக்கையாக தோழர்.மணி கடந்த 01.08.2017 அன்று மதுரைக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். முத்துராமலிங்கம் என்பவர் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர். சனநாயகப்பூர்வமாக சாதியாதிக்கத்திற்கு எதிராக தனது தன்மான உணர்வை வெளிப்படுத்திய காரணத்திற்காகவே இமானுவேல் சேகரனை கொலை செய்வதற்கு துணை நின்றவர். தன் சாதியைச் சார்ந்த அப்பாவி உழைக்கும் மக்களுக்கு சாதி வெறியூட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவியவர். இதனால் மறவ்ர்,பள்ளர்...

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத் துவக்க விழா பொதுக்கூட்டம் சென்னை 06082017

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்.! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்.! தமிழகம் ழுழுவதும் “சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத்தின்” துவக்கப் பொதுக்கூட்டம்…. நாள் : 05.08.2017, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, இடம் : கங்கையம்மன் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை. கருத்துரை: தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி கழகத் தலைவர், திவிக தோழர்.விடுதலை.க.இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக “விரட்டு” கலைக்குழுவின் வீதி நாடகம், கலை நிகழ்ச்சி நடைபெறும். “சூழ்ந்து வரும் ஆபத்துகளை முறியடித்து தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம் வாரீர்….!”  

தமிழக மருத்துவ சேவையை  முடக்கும் ‘நீட்’

தமிழக மருத்துவ சேவையை முடக்கும் ‘நீட்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை நாம் உருவாக்கிய கல்வி அமைப்பு. அந்த அமைப்பை நாம் பார்ப்பன ஆதிக்கத்தி லிருந்து பறித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பகிர்ந்தளித்தோம். பிரிட்டிஷ்காரர் நாட்டை ஆண்டபோது பிரிட்டிஷார் வழங்கிய நமக்கான சொற்ப அதிகாரங்களோடு மாகாண சபையை நமது முன்னோர்களான நீதிக் கட்சியினர் வழியாக ஆட்சி செய்தோம். 1928ஆம் ஆண்டிலேயே நாம் இந்த கல்வி வேலைவாய்ப்புகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். “சுதந்திர”த்துக்குப் பிறகு காமராசர் ஆட்சி யில் சமூகநீதி இலவசக் கல்வி மடை திறந்த வெள்ளம்போல் பரவியது. தொடர்ந்து அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சி யிலும் நாம் நமக்கான இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கொள்கையைக் கொண்டே முன்னேறினோம். அதனால்தான் மண்டல் பரிந்துரையை அமுலாக்கி, மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, அதன் காரணமாகவே பிரதமர்...

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் தமிழ்நாட்டின் கனிமவளங்கள் மிக மோசமாக சுரண்டப்பட்டு வருகின்றன. இதற்கு இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாக காவிரி பாசனப் பகுதி, பாலாற்றுப் பகுதிகள் குறிவைக்கப்படு கிறது. இந்தப் பகுதிகளில் 500 அடி ஆழத்தில் நிலக்கரி பெருமளவில் இருக்கிறது. அதன் இடுக்குகளில் மீதேன் எரிவாயு இருக்கிறது. இந்த எரிவாயுவை எடுக்க ‘கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ என்ற தனியார் நிறுவனத் துக்கு 2010ஆம் ஆண்டு  அனுமதி அளித்தது இந்திய  அரசு. 32 ஆண்டுகள் மீத்தேன் எடுப்பதும் 100 ஆண்டுகள் நிலக்கரி எடுப்பதும் திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி, பாசனப் பகுதி நிச்சயமாக பாலைவன மாகிவிடும். பூமியின் சராசரி வெப்ப நிலையை கடுமையாக உயர்த்துவது மீத்தேன் வாயு. இதை எடுக்கும் முறைக்கு ‘நீரியல் விரிசல்’ என்று பெயர். பூமிக்கடியில் இருக்கும் பாறைகளை உடைத்து நொறுக்கி ‘மீத்தேன்’...

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள்,...

விவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்

விவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுதும் 2000 விவசாயிகள் கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 200 விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்து விட்டனர். பெரும் தொழில் நிறுவனங்கள் அரசு பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்வதற்கு ‘வராக் கடன்கள்; செயல்படாத சொத்துக்கள்’ என்று பெயர்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது பார்ப்பன அதிகாரவர்க்கம். கல்லூரி படிப்புக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத மாணவர்களின் படத்தை வங்கி விளம்பரப் பலகையில் ஒட்டி அவமானப்படுத்தும் பார்ப்பன வங்கி அதிகாரக் கும்பல், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத பண முதலைகளின் பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வெளியிட மறுக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வங்கிகளில் ‘பெரும் பணத் திமிங்கிலங்கள்’ கடனாக வாங்கி, பட்டை நாமம் போட்ட தொகை...

உணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்

உணவு உரிமையைப் பறிக்கும் பார்ப்பனியம்

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம்  மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை போடுகிறது பா.ஜ.க.  ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடம். • கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்த மாட்டிறைச்சி 1850 கிலோ மெட்ரிக் டன். • 2015-2016இல் இந்தியாவுக்கு மாட்டிறைச்சி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 28,802 கோடி. • கடந்த ஆண்டு இந்தியாவும் பிரேசிலும் தலா 19.60 சதவீதம் தனித்தனியாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து முதலிடத்தில் சரிசமமாக நிற்கின்றன. ஆனால் பிரேசில் நாட்டில் ‘பசு தெய்வம்’ என்ற கூப்பாடுகள் ஏதும் இல்லை. • ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டிறைச்சி. • வேத கால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிட்டார்கள். ‘இந்திரன்’ என்ற கடவுளுக்குப் பிடித்த மாட்டிறைச்சியை பார்ப்பனர்கள் ‘அக்னி’ யாகத்தில் பலியிட்டதை ரிக்வேதம் கூறுகிறது. • பலியிடப்பட வேண்டிய பசு உள்ளிட்ட மிருகங்களை எப்படி...

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் மோடியின் பா.ஜ.க. ஒவ்வொரு நாளும் திணித்து வரும் இந்தி – இந்துத்துவா எதிர்ப்பை, தமிழ்நாடு, கருநாடகம், கேரள மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. குழுக்கள் பா.ஜ.க.விடம் அடங்கிப் போய் சரணாகதி நிலையில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளிக்கின்றனர். மாட்டிறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் மோடி ஆட்சியின் சட்டத்தை புறந்தள்ளிய கேரள அரசு, அந்த சட்டத்தை நீக்கி மாநிலத்துக்கு தனி சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. வீடுதோறும் மக்களை சந்தித்து இந்த சடங்கு கலாச்சாரங்களை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். ‘குடும்ப பிரபோதன்’ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் பிரணாய் விஜயன், இது மனுதர்ம திட்டம் என்று அறிவித்தார். மீண்டும் ‘திராவிட நாடு கோரிக்கை எழும்’ என்று கேரளாவில் சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கிவிட்டார்கள். இப்போது கருநாடக முதல்வர் சித்தராமய்யாவும் இந்திக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். கருநாடக அரசு மும்மொழித்...

பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் 1966ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருச்சியில் தொடங்கப் பட்டது துப்பாக்கித் தொழிற்சாலை, பொதுத் துறை நிறுவனம். இந்திரா காந்தி திறந்து வைத்தார். இந்திய இராணுவத்துக்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முதலிடத்தில் நிற்கும் இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கப் போகிறது, மோடி ஆட்சி. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 72,500 கோடி நிதி திரட்டு வதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறது மோடி ஆட்சி. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இந்தத் தொழிற் சாலையைச் சார்ந்து வாழும் அய்ந்து கிராமங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி ஆட்சி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து துறைகளையும் செயலிழக்கச் செய்கிறது. யூத மத வெறி இஸ்ரேலிடம் அதிகமான இராணுவத் தளவாடங்கள் வாங்கப்படுகின்றன. பார்ப்பனியமும் ஜியோனிசமும்...

அடிபணியும் தமிழக அரசு

அடிபணியும் தமிழக அரசு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக களமிறங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களை கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறது தமிழக அரசு. அவர்களை பிணையில் விடுவிக்கவும் கூடாது என்று ‘ஓ.என்.ஜி.சி.’ பார்ப்பன அதிகாரவர்க்கம் தனது முழு அதிகாரச் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது. நெடுவாசல் – கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக அவர்கள் கோரிக்கையின் நியாயங்களை விளக்கி சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கை வழங்கிய மாணவி வளர்மதியை காவல்துறை ஜூலை 16ஆம் தேதி கைது செய்து குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. 23 வயது வளர்மதி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டம் பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு இதழியல் படிக்கிறார். ‘ஓ.என்.ஜி.சி.’யை எதிர்ப்போர் எல்லோருமே தேச விரோதிகளாம். மத்திய அரசிடம், ‘ஓ.என்.ஜி.சி.’க்கு அவ்வளவு செல்வாக்கு! தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் அவ்வளவு குலை நடுக்கம்! தமிழ் மக்கள் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள் தேச விரோதிகளா?...

கீழடியில் நடக்கும் கீழறுப்பு

கீழடியில் நடக்கும் கீழறுப்பு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் சிவகங்கை அருக உள்ள கீழடியில் தமிழர் சங்ககால வாழ்வியல் குறித்து சான்றாதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கண்டறிந்திருக்கிறது. ஜாதி, மதங்கள் இல்லாத ஒரு வாழ்வே சங்ககாலத் தமிழர்கள் வாழ்வு என்று இந்தத் தடயங்கள் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்துத்துவா திணிப்புக்கு இது எதிரானது என்பதால் தொல்பொருள் தடயங்களை ஒரு மூட்டையில் கட்டி பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் வீசி விட்டனர். நீதிமன்ற வழக்குகள், பொது மக்கள் எதிர்ப்பு வந்த பிறகு மீண்டும் ஆய்வுகள் தொடங்கின. நேர்மையான ஒரு அதிகாரி முறையாக தொல்பொருள் ஆய்வுகளைத் தொடங்கினார். அவரை திடீரென்று இடமாற்றம் செய்தது மோடி ஆட்சி. மக்கள் கொதித்தெழுந்தார்கள். கீழடியைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன், நிர்மலா சீத்தாராமனை முற்றுகையிட்டார்கள். தமிழர்கள் பண்பாடு பார்ப்பனிய இந்துத்துவா பண்பாடு அல்ல என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை முடக்க முயலுகிறது மோடி ஆட்சி....

மூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’

மூடப்படுகிறது ‘செம்மொழி ஆய்வு நிறுவனம்’

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?  தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்ட பிறகு ‘செம்மொழி தமிழ் ஆய்வு மய்யம்’ சென்னையில் அமைக்கப்பட்டது. தனித்து இயங்கிய இந்த ஆய்வு மய்யத்தை இழுத்து மூடிவிட்டு, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக மாற்ற மோடி ஆட்சி முடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியைத் தவிர்த்து பிறமொழி நிறுவனங்கள் அனைத்தையும் ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு துறையாக இணைக்க மோடியின் மனித வள மேம்பாட்டுத் துறை முடிவெடுத்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகளை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் என்பதை மோடி ஆட்சி ஏற்கத் தயாராக இல்லை. தேசிய இனங்களை இந்த பார்ப்பனிய கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, தேசிய இனங்களின் மொழிகளை சமஸ்கிருத, இந்தி ஆளுகைக்குக் கீழே அடக்க முயலும் பார்ப்பன சதியை தமிழர்களே! தமிழ் மொழிப் பற்றாளர்களே புரிந்து கொள்ளுங்கள்! பெரியார் முழக்கம் 03082017 இதழ்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி – மதுரை உண்ணாவிரதத்தில் தோழர் பால்.பிரபாகரன் எழுச்சியுரை

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு  மொழியாக ஆக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார் செய்தி – வைரவேல் காணொளியை காண

இந்து மக்கள் கட்சியை தடை செய் – கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் 01082017

ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் இந்துமத வேடதாரி, பார்ப்பன அடிவருடி அர்ஜூன்சம்பத்தை கைது செய்… இந்து மக்கள் கட்சியை தடை செய்…  என்ற முழக்கத்தோடு கோவையில் 01082017 மாலை 5 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாளர் நேரு அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

01082017 மாலை 3 மணி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! நீதி மன்றங்களில் தமிழை் வழக்காடு மொழியாக்க வலியுருத்தி போராடி வரும் மதுரை வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை செல்லும் வழிலேயே பாதியில் மறித்து ஜனநாயக உரிமைகளை மீறி கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . வழக்கறிஞர்களை சந்திக்கச் செல்லும் வழிபில் நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 9.30 மணிக்கு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மாலை 3.00 மணிக்கு நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கழக தலைவரும், தோழர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

கழகத் தலைவர் கைது மதுரை 01082017

கொளத்தூர் மணி கைது… திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மதுரையில் நடைபெரும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்திற்கு சென்ற போது நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்…. தடை மீறி செல்ல விருந்த திராவிடர் விடுலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் ஆதரவாளர்கள் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கைது செய்யப்பட்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி காவல்துறையால் தடுத்து வைப்பு

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க கோரிப்ு லவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை திண்டுக்கல்லில் காவல் துறையினர் மதுரைக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? கருத்தரங்கம் சென்னை 29072017

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? #கருத்தரங்கம்…. நாள் : இன்று (29.07.2017)மாலை 5 மணிக்கு இடம் : கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை -04 #கருத்தாளர்கள் : தோழர்.பண்ருட்டி.இராமச்சந்திரன் தோழர்.கொளத்தூர் மணி தோழர்.ஆழி.செந்தில்நாதன் தோழர்.செந்தில் தோழர்.ஜவாஹிருல்லா தோழர்.தியாகு தோழர்.T.S.S.மணி வாருங்கள் தோழர்களே.! ஈழத் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 28072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக வடசென்னை மாவட்டம் நடத்திய வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் 28.07.2017 மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது…நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர். இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியின் தொடக்க உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதை கண்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லாமே தந்திரமே என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பொதுக்கூட்டத்தின் இடையில் மழை பெய்த காரணத்தால் அருகில் இருந்த கடைவீதிகளின் வாசலில் வந்திருந்த தோழர்கள் முன்னிலையில் கூட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தின் பேச்சாளர்களை வரவேற்று தோழர்.வ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினர். அதன் பின் “புதிய கல்விக்கொள்கை குலக்கல்விக்கு மாதிரியே என்ற தலைப்பில் தோழர் P B பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை) அவர்கள் தனது ஆழமான கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினர். அடுத்ததாக, கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்அவர்கள்...

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை பெயரை நீக்க முயற்சி

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை என்கிற பெயரை நீக்கி, ‘அம்மா மாளிகை’என்று மாற்ற முயற்சிக்கும் அதிமுகவின் சதி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தால் தற்காலிகமாக முறியடிப்பு செய்தி – வைரவேல்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்று பெருமைக்குரியவர் களாக இருந்த நாம் – இன்று வாழ்வுரிமை இழந்து நிற்கிறோம். காலம் காலமாக நமது முன்னோடித் தலைவர்கள் பெரியாரும் காமராசரும் அண்ணாவும் அவர் வழி வந்த தலைவர்களும் கட்டிக் காத்த தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளை நடுவண் பா.ஜ.க. மோடி ஆட்சியிடம் பறி கொடுத்துவிட்டு நிற்கிறோம். நமது தனித்துவத்தை அழிக் கிறார்கள்; இந்தியப் பண்பாட்டை – பார்ப்பனியப் பண்பாட்டைத் திணிக்கிறார்கள்; நாம் இழந்து நிற்கும் உரிமைகளில் சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் சிந்தனைக்குக் கொண்டு வருகிறோம். 2006ஆம் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வை நாம் ஒழித்து விட்டோம்; பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரியில் நமது மாணவ மாணவிகளை சேர்த்தோம்; கடும் உழைப்பால் நல்ல மதிப்பெண் எடுத்துக்கூட நமது வீட்டுச் செல்வங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. ‘நீட்’ தேர்வை எழுது என்று கட்டாயப்படுத்துகிறது மோடி ஆட்சி. திக்கு...

சென்னை விழாவில் கொளத்தூர் மணி பேச்சு பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் ‘பெரியாரும் காமராசரும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை: “காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசை வீழ்த்தியே தீருவேன் என அறிவித்த பெரியார், அதே காங்கிரஸ் கட்சியில் இருந்த காமராசரை அரவணைத்தார் என்றால் அதற்கு என்ன காரணம்? பெரியாரின் அடியொற்றி செயல்பட்டார் காமராசர் என்பதுதான். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்கான தடைகளை தகர்ப்பதில் பெரியாருக்கு இருந்த அதே உணர்வு காமராசருக்கும் இருந்திருக்கிறது. பெரியாருக்கு இருந்த கருத்து வீரியம் காமராசருக்கும் இருந்திருக்கிறது. காமராசரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரது மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கொள்கைத் தாக்கம் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளிப் பருவத்திலேயே ‘மந்திர-தந்திரங்களை’ காமராசர் எதிர்த்திருக்கிறார். பீதாம்பர அய்யர் என்பவர் ‘மந்திரங்களை’ செய்ததை நேரில் பார்த்து அவர் எப்படி எல்லாம்...

சீனா – இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்”

சீனா – இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்”

‘அண்டை நாடுகளுடன் இந்தியா போர் தொடுக்குமானால் இந்தியாவால் 10 நாள்கள்கூட தாக்குப் பிடிக்க முடியாது’ – இப்படி ஒரு கருத்தை ஏதேனும் ஒரு இயக்கத்தின் தலைவர் கூறியிருந்தால், ‘தேச விரோதி’ என்ற கூச்சல் காதைத் துளைத்திருக்கும். “தேச விரோதிகளைக் கைது செய்”, “குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளு” என்று பார்ப்பன பா.ஜ.க. “ராஜாக்கள்” பாய்ந்து குதறியிருப்பார்கள். இந்து முன்னணிகள் முற்றுகைப் போராட்டம் என்று கிளம்பியிருக்கும். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்திருக்கும். ஆனால் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது – மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கைக் குழு. அதன் பரிந்துரையில்தான் இந்த அபாயச் சங்கு ஊதப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல; இராணுவ தொழிற்சாலை வாரியத்தின் செயல்திறனில் குறைகள் மலிந்திருப்பதை சுட்டிக்காட்டியும் அரசின் நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையை மோடி ஆட்சி நாடாளுமன்றத்திலும் கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது. எந்த நேரத்திலும் சீனாவோடு போர் வெடிக்கலாம் என்ற செய்திகள்...

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை எதிர்த்துப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக, பள்ளிப்பாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 17.07.2017 அன்று  மாலை 5:00 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனே வெளியேற்று, ஓ.என்.ஜி.சி. க்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெறு, பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட செயலாளர்  மு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்,அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர் பெரியார் முழக்கம் 27072017 இதழ்

மயிலைப் பகுதி கழகத் தோழர்களின் சீரிய மக்கள் பணி

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மயிலாப்பூர் பகுதி தோழர்கள் 21.07.2017 அன்று  விசாலாட்சி தோட்டம், பல்லக்கு நகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் வராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த பகுதி மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு பொது மக்களிடம் கையொப்பம் வாங்கி மயிலாப்பூர் பகுதி கழகத் தலைவர் இராவணன் தலைமையில் அந்த பகுதியின் “சென்னை குடிநீர் வாரியம்” ஆய்வாளரை சந்தித்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். அதைத் தொடர்ந்து,  மயிலாப்பூர் பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப் படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொது மக்களுக்கு இடையூறான வேலையில் ஈடுபடும் நபர்களை தடுக்கக் கோரியும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசு அலுவலர்களே முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியாளர்...

சமூக நீதிப் பயணம் – சென்னை மாவட்டம் தயாராகிறது

23.07.2017 மாலை 6 மணிக்கு சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக யுவராஜ் கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் ஆகஸ்ட் 05, 2017 தொடக்க பொதுக்கூட்டம் முதல் ஆகஸ்ட் 12, 2017 மாலை திருசெங்கோட்டில் நடைபெறவிருக்கும் நிறைவு விழா பொதுக்கூட்டம் வரை தமிழ்நாடு முழுவதும் “சமூக நீதிப் பரப்புரை பயணம்” குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, 28.07.2017 வடசென்னை, திருவேற்காடு பகுதியில் “வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றியும், கடந்த 15.07.2017ல் நடைபெற்று முடிந்த காமராசர் விழா பற்றியும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்), தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இயக்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்....

கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24072017

பல எதிர்ப்புகளை கடந்து கொட்டும் மழையில் கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24072017 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார். தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மீ.த.பாண்டியன்.தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் வெ.கனியமுதன். துனை பொது செயலாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேரறிவாளன். பொதுச் செயலாளர். தமிழ் புலிகள் கட்சி பெரியார்.சரவணன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர். தமிழக வாழ்வுரிமை கட்சி கா.சு.நாகராசு. ஒருங்கிணைப்பாளர்.பெரியார் திராவிடர் கழகம் சிதம்பரம். மாவட்ட செயலாளர். ஆதித்தமிழர் கட்சி தலித்.ராஜா ஆதித்தமிழர் பேரவை தாஹா. SDPI கட்சி மேலூர் தொகுதி தலைவர். இரணியன். பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர் பரமக்குடி கர்ணன் ,ரமேஸ் ,சகாயராஜ் ,கோபால் உள்ளிட்ட தோழர்களும் தோழமை அமைப்பு தலைவர்கள் தோழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும்...

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வனவாசி, சேலம் 24072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். நாள் : 24.07. 2017 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : பேருந்து நிலையம்,வனவாசி, சேலம் மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். தலைவர்,திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் வே.மதிமாறன், எழுத்தாளர். தோழர் காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.