மழை கொட்டிய நிலையிலும் இடம் மாற்றி நடந்தது கழகக் கூட்டம்

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 28 அன்று திருவேற்காடு வேலப்பன் சாவடியில்வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுஎன்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒருவார காலமாகவே வடசென்னை கழகத் தோழர்கள் ஏசுகுமார், செந்தில், சங்கீதா, ராஜி மற்றும் தென்சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கடை கடையாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி நிதி திரட்டினர். . தினேஷ் குமார் தலைமையில் கூட்டம் தொடங்கி காவை இளவரசுமந்திரமா தந்திரமாநிகழ்ச்சியை நடத்தி முடிக்கும்போது மழை கொட்டத் தொடங்கிவிட்டது. உடனே கழகத் தோழர்கள் மேடைக்கு அருகே இருந்த வர்த்தக நிறுவனங்களின் மேற்கூரையிடப்பட்ட வராண்டாவில் இருக்கைகள் ஒலிபெருக்கிகளை மாற்றி கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர். ஒரு கருத்தரங்கம்போல் கூட்டம் தொடர்ந்து நடந்தது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர். தோழியர் சங்கீதா வரவேற்புரையாற்றினார். ரமேஷ் பிரசாந்த் முன்னிலை வகித்தார். தோழர் ராஜி நன்றி கூறினார். தோழர்கள் இறுதி வரை கருத்துகளைக் கேட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பகுதியில் கழகக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியார் முழக்கம் 10082017 இதழ்

You may also like...