மயிலைப் பகுதி கழகத் தோழர்களின் சீரிய மக்கள் பணி

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மயிலாப்பூர் பகுதி தோழர்கள் 21.07.2017 அன்று  விசாலாட்சி தோட்டம், பல்லக்கு நகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் வராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த பகுதி மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு பொது மக்களிடம் கையொப்பம் வாங்கி மயிலாப்பூர் பகுதி கழகத் தலைவர் இராவணன் தலைமையில் அந்த பகுதியின் “சென்னை குடிநீர் வாரியம்” ஆய்வாளரை சந்தித்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதைத் தொடர்ந்து,  மயிலாப்பூர் பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப் படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொது மக்களுக்கு இடையூறான வேலையில் ஈடுபடும் நபர்களை தடுக்கக் கோரியும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசு அலுவலர்களே முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்ட துணை தாசில்தாரை சந்தித்து தோழர்கள் மனுவை கொடுத்தனர்.

அதன் பின்பு, மந்தைவெளி முதல் பட்டினம்பாக்கம் வழியாக பிராட்வே செல்லும் மாநகர பேருந்து (21சூ) சமீபகாலமாக இயங்கவில்லை. அந்த வரிசை கொண்ட மாநகர பேருந்து களை மீண்டும் இயக்கக் கோரி மந்தவெளி பணிமனையில் தோழர்கள் மனு கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

பெரியார் முழக்கம் 27072017 இதழ்

You may also like...