கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக பள்ளிப்பாளையத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை எதிர்த்துப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக, பள்ளிப்பாளையம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்

17.07.2017 அன்று  மாலை 5:00 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனே வெளியேற்று, ஓ.என்.ஜி.சி. க்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெறு, பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட செயலாளர்  மு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன்,அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்

பெரியார் முழக்கம் 27072017 இதழ்

You may also like...