அடிபணியும் தமிழக அரசு

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம்

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக களமிறங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களை கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறது தமிழக அரசு. அவர்களை பிணையில் விடுவிக்கவும் கூடாது என்று ‘ஓ.என்.ஜி.சி.’ பார்ப்பன அதிகாரவர்க்கம் தனது முழு அதிகாரச் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது.

நெடுவாசல் – கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக அவர்கள் கோரிக்கையின் நியாயங்களை விளக்கி சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கை வழங்கிய மாணவி வளர்மதியை காவல்துறை ஜூலை 16ஆம் தேதி கைது செய்து குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. 23 வயது வளர்மதி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டம் பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு இதழியல் படிக்கிறார். ‘ஓ.என்.ஜி.சி.’யை எதிர்ப்போர் எல்லோருமே தேச விரோதிகளாம். மத்திய அரசிடம், ‘ஓ.என்.ஜி.சி.’க்கு அவ்வளவு செல்வாக்கு! தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் அவ்வளவு குலை நடுக்கம்! தமிழ் மக்கள் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள் தேச விரோதிகளா?

பெரியார் முழக்கம் 03082017 இதழ்

You may also like...