வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 28072017
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக வடசென்னை மாவட்டம் நடத்திய வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் 28.07.2017 மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது…நிகழ்ச்சியின் தொடக்கமாக தோழர். இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியின் தொடக்க உரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதை கண்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லாமே தந்திரமே என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பொதுக்கூட்டத்தின் இடையில் மழை பெய்த காரணத்தால் அருகில் இருந்த கடைவீதிகளின் வாசலில் வந்திருந்த தோழர்கள் முன்னிலையில் கூட்டத்தை தொடர்ந்தனர்.
கூட்டத்தின் பேச்சாளர்களை வரவேற்று தோழர்.வ.சங்கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினர்.
அதன் பின் “புதிய கல்விக்கொள்கை குலக்கல்விக்கு மாதிரியே என்ற தலைப்பில் தோழர் P B பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை) அவர்கள் தனது ஆழமான கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினர்.
அடுத்ததாக, கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்அவர்கள் பறிப்போகும் மாநில உரிமைகள்- ஒற்றை தேசக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்தன்மை அழிப்பே என்ற தலைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளில் பார்ப்பனர்களுக்கான முக்கியத்துவம் குறித்தும், தேசப்பக்தர்களால் கட்டப்படுகிற சமூக சீரழிவுகள் போன்றவைகளையும் உள்ளடக்கி சிறப்பான கருத்துகளை பதிவு செய்து சிறப்புரையாற்றினர்.
பின்பு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மத்திய, மாநில வேலை வாய்ப்பு திட்டமிட்டு தவிர்க்கப்படும் தமிழர்கள் என்ற தலைப்பில் 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய அலுவலகங்களில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பானது பறிப்போகின்ற நிலையில் இந்திய நாட்டில் தென்இந்தியர்கள் மொத்தமாக 3% பேர் மட்டுமே மத்திய அலுவலகங்களில் இருப்பதாகவும் புள்ளி விவரங்களோடு தனது கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினர்.
அதன் தொடர்ச்சியாக, வட சென்னை பகுதியில் புதியதாக கழகத்தில் இணைந்துள்ள தோழர்கள்.தினேஷ் மற்றும் தோழர்.ரமேஷ் ஆகிய இருவருக்கும் கழகத் தலைவர், கழகத்தின் மாத இதழை கொடுத்து சிறப்பித்தார்.
இறுதியாக, தோழர்.ராஜூ அவர்கள் சிறப்புரையாற்றிய தோழர்கள், வந்திருந்த தோழர்கள், காவல்துறைக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.