497 T.T.V.தினகரன் அணி பா.ஜ.க.விடம் சரணடைந்து விட்டதற்கான அறிகுறிகள் 18072017

அஇஅதிமுக அதிகாரப்பூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” பத்திரிக்கையில் “காவி அடி கழகத்தை அழி” என்ற கவிதை ஒன்று மூன்று நாட்களுக்கு முன்பு வெளி வந்தது.

பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தது அந்த கவிதை. பரபரப்பாக மூகநூலில் பதியப்பட்டதும் கூட. பாரதீய ஜனதா கட்சி, அஇஅதிமுகவை மூன்றாக பிளந்து கட்சியை ஒழிப்பதற்கு சதி செய்கிறது. மாநிலங்களின் உரிமைகளை குறுக்கு வழியில் தலையீட்டு தடுக்கிறது என்று கடுமையான விமர்சனங்களை கொண்ட அந்த கவிதை. அந்த கவிதையை எழுதியவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த “மருது அழகுராஜ்”.

சித்ரகுப்தன் என்ற புனை பெயரில் அந்த கவிதையை எழுதியிருந்தார் மருது அழகுராஜ். இப்போது இந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தினகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்திருப்பதாக ஆங்கில நாளோடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

தினகரன் இதை பற்றி கூறுகையில் அழகுராஜ் சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதிய கவிதை கழகத்தின் கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கிறார். ” நீண்ட விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பபட்டிருக்கிற அழகுராஜ் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு மேடை பேச்சுகளை எழுதி கொடுத்தவர். 2010ஆம் ஆண்டு முதல் இந்த ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தவர்”.

தினகரன் அணியும் பாரதீய ஜனதா கட்சியிடம் சரணடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் வந்து கொண்டிருக்கின்றன.

சிந்திப்போம்.!

நன்றி…வணக்கம்…

– தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்

You may also like...