ராமன் பாலம்: உறுதியான ஆதாரம் இல்லை; பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்
இலங்கைக்கு இராமேஸ்வரத்தி லிருந்து இராமன் பாலம் கட்டினான் என்றும், அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என்றும் இந்துத்துவவாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடர்ந்தார். இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. ‘இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர் பாலம் இருந்ததாகக் கூற முடியாது’ இப்படிக் கூறியிருப்பவர், ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். கூறி யிருக்கிற இடம் நாடாளுமன்றம். அவர் மேலும் கூறுகிறார், ‘19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால், இராமர் பாலம் பற்றி துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றும், செயற்கைக் கோள் படங்களில் கடலில் சில பாறைகள் இருப்பது போல் கண்டறியப்பட்ட போதிலும், அது இராமர் கட்டிய பாலம் என்று கூறுவது கடினம்’ என்று தெரிவித்து இருக்கிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவார்கள், அதேபோல 19...
