பயப்படாதீங்க; பா.ஜ.க.வுக்கு ஆபத்தில்ல…!
¨ ஆளுநர் அவர்களே தமிழ்நாடு அரசு ஒப்புதல் கேட்பது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தான், ஏதோ ஆபாச வீடியோ தடைச் சட்டம் என்று நினைத்து அதனால் தமிழக பாஜகவுக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படாதீர்கள்.
¨ ஆன்லைன் சூதாட்ட தடையை வைத்துக் கொண்டே சூதாட்டம் நடத்துகிறார் ஆளுநர் மசோதா காலாவதியாக கடைசி நாளில் விளக்கம் கேட்டு அனுப்புவது ‘சூப்பர்’ சூதாட்டம்.
¨ ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்பா என்று கேட்கிறார் ரவி நியாயம் தான் ஒன்றிய ஆட்சியின் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கவே கூடாது இப்போதாவது அவருக்கு புரிந்தது நல்லது
– விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து
பெரியார் முழக்கம் 01122022 இதழ்