Author: admin

ஒன்றுபட்ட தமிழகம் – 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது

ஒன்றுபட்ட தமிழகம் – 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை 161ஆவது விதியின் கீழ் இராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதை வரவேற்று பாராட்டுகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது வரை இல்லாத ஒரு அதிசயமாக தமிழக அரசின் இந்த முடிவை அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒருமித்து வரவேற்றிருப்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி ஒரு பொதுக் கருத்தை தமிழ் மண்ணின் உணர்வாக மாற்றியது கடந்த காலங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பரப்புரைகளும் போராட்டங் களும், செங்கொடியின் உயிர்த் தியாகமும்தான். சமுதாயத்தைப் பக்குவப்படுத்தி விட்டால் சட்டம் அதன் பின்னால் ஓடி வரும் எனும் சமூகவியலை இது மெய்ப்பித்திருக்கிறது. இதுவே இந்த மண்ணை சமூகநீதிக்கும் சுயமரியாதைக்குமான விளைச்சல் பூமியாக்கிட பெரியார் பின்பற்றிய அணுகுமுறையும்கூட! மாநில அரசுக்கு  அரசியல் சட்டப் பிரிவு 161இன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு கூட்டாட்சி அமைப்பில் மாநில இறையாண்மையை உறுதி செய்கிறது. இதே வழக்குகளில்...

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

ஈரோடு வடக்கு – ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.09.2018 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் வேலுச்சாமி  தலைமையில் மாவட்ட செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.  கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் விழாவை கோபியில் அனைத்து இயக்கங்களும் இணைந்து ஊர்வலம் நடத்துவது எனவும், மாவட்ட முழுவதும் அய்யா பிறந்த நாள் விழாவினை தமிழர் கல்வி மீட்பு பரப்புரை பயணமாக வாரந்தோறும் ஞாயிறன்று ஒவ்வொரு ஒன்றியங்களாக நடத்துவது எனவும், பரப்புரை பயணத் தொடக்க நிகழ்வாக செப்டம்பர் 23 அன்று குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட கலந்துரையாடல் 02.09.2018 அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி மாவட்ட...

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி நிர்வாகியும், மேட்டூர் அனல் மின் நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை வேதியரும் பெரியாரியலாளருமான ப. தமிழ்க்குரிசில் (62) 3.9.2018 அன்று மேட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பெரும் கவலை கொண்டு பணி ஓய்வுக்குப் பிறகு முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோது வெளியிட்ட போது தொகுப்புப் பணியில் பெரும் பங்காற்றிய பெருமைக்குரியவர் தமிழ்க்குரிசில். மேட்டூர் அருகே கொளத்தூரில் இரவு பகலாக பல வாரங்கள் தொகுப்புப் பணி நடந்த போது பணிகளை ஒருங்கிணைத்து ‘குடிஅரசு’ இதழ்களில் உள்ளது உள்ளவாறே அப்படியே வெளி வர வேண்டும். அப்போது தான் இது வரலாற்று ஆவணமாக எதிர்காலத்தில் நிற்கும் என்பதில் கவனம் செலுத்தி கவலையோடு பணியாற்றியவர் தமிழ்க் குரிசில். இறுதி வணக்கம் செலுத்திட கழகத்  தோழர்களும் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆதரவாளர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். கழகக்...

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மேற்கொண்ட சென்னைக் குழுவினருக்கு மக்கள் பேராதரவை வெளிப்படுத்தினர். தோழர்கள் இராவணன், முரளி, அருண், இரண்யா, தேன்ராஜ், செந்தில், பிரியா, ஓவியா – வெயில், மழை என்று பாராமல் கழக துண்டறிக்கையைக் கொடுதது கடைகளில் நிதி வசூல் செய்தனர். ஏழு நாளில் 16,000 துண்டறிக்கையை மக்களிடையே கொடுத்தனர். மக்களும் தாமாக முன் வந்து துண்டறிக்கை வாங்கி படித்தது மிகச் சிறப்பு. பயணத்தில் கடை வசூல் மட்டும் ரூ.60,000/- கிடைத்தது. இதில் சிறு வியாபாரிகளே அதிக ஆதரவு தந்தனர். கூடுவாஞ்சேரியைச் சார்ந்த நாடி ஜோதிடர் பழனிச்சாமி என்பவர், பயணச் செலவுக்கு ரூ.2000 நிதியளித்தார். கண்டிகையில் பிரச்சாரத்தைக் கேட்ட பக்தர் ஒருவர் ரூ.500 நன்கொடை வழங்கினார். இப்படி பயணத்தில் ஏராளமான பக்தர்கள் நிதி உதவி தந்தும், பழம், குளிர் பானம், தேநீர் என்று அவர்களால் இயன்ற அளவில் வழங்கி ஆதரவு தந்தனர். பெரியார் இயக்கத்தைச் சார்ந்த வர்கள் நம்...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மோடி படம் வைக்கச் சொல்லி மிரட்டல்

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மோடி படம் வைக்கச் சொல்லி மிரட்டல்

பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல் டீலர்களுக்கு இத்தகைய வாய்மொழி உத்தரவை வழங்கியுள்ளது. இந்த உத்தரவு குறித்து இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கோகி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பெட்ரோல் நிலையங்களில் வைக்குமாறு உத்தரவிடுகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு சப்ளை நிறுத்தப்படும் என்ற மறைமுக அச்சுறுத்தலும் விடுக்கப்படுகிறது” என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஏரியா அதிகாரிகள் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கும் திட்டத்தை குறிப்பிட்டு ஒரு படம் வைக்க வேண்டும் என்ற உத்தரவே அது. நிறுவனங்களின் பிராந்திய அதிகாரிகளிடமிருந்தோ, விற்பனை அதிகாரிகளிடமிருந்தோ எழுத்து பூர்வமாக இது...

‘விநாயகன்’ ஊர்வலம் :  சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

‘விநாயகன்’ ஊர்வலம் : சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

விநாயகன் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் விநாயகர் சிலைகளை இரசாயன பொருட்களைக் கொண்டு தயார் செய்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 03.09.2018 காலை 11 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர். பெரியார் முழக்கம் 06092018 இதழ்

ரிசர்வ் வங்கி ஒப்புதல் : பண மதிப்பு நீக்கம் படுதோல்வி?

ரிசர்வ் வங்கி ஒப்புதல் : பண மதிப்பு நீக்கம் படுதோல்வி?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016, நவடம்பர் 8ஆம் நாள் நள்ளிரவு பிரதமர் மோடி அறிவித்தவுடன் இந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கத்திலிருந்த மதிப்பான ரூ.15.44 இலட்சம் கோடியில் கறுப்புப்பணம் முடங்கிவிடும்; புரட்சிகர அறிவிப்பு என்றெல்லாம் கூறப்பட்டது. வேடிக்கை என்ன வென்றால் இதில் 99.3 சதவீதம் (ரூ.15.28 இலட்சம் கோடி) அப்படியே வங்கிக்கு திருப்பி மாற்றப்பட்டுவிட்டன என்று இப்போது ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. திரும்பி வராமல் முடங்கியது 0.71 சதவீதமான 10 ஆயிரம் கோடிதான். இந்த 10 ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை முடக்க, ரூ.2.25 இலட்சம் கோடி மதிப்பு மிக்க உள்நாட்டு உற்பத்திகளும், வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன. தங்கள் சேமிப்புத் தொகையை அன்றாட செலவுக்கு வங்கியிலிருந்து எடுப்பதற்காக நாடு முழுதும் மக்கள் கியூ வரிசையில் நின்று அதில் 100 பேர் உயிரிழந்தனர். ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டதோடு 1000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 2000 ரூபாய்...

ஜாதகப்படி ஆட்சி நடத்தும் உ.பி.  ‘சாமியார்’ முதலமைச்சர்

ஜாதகப்படி ஆட்சி நடத்தும் உ.பி. ‘சாமியார்’ முதலமைச்சர்

உத்தரபிரதேசத்தில் காவி சாமியார் ஆதித்ய நாத் என்பவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி நடக்கிறது. அங்கிருந்து வரும் செய்திகள், காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமா என்ற சிந்தனைக்கே அழைத்துச் செல்கிறது. சட்டத்தைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, ஜாதகத்தை சட்டமாகக் கொண்டு அங்கே ஆட்சி நடத்துகிறார்கள். “ஜாதகப்படி நீ சிறை செல்ல வேண்டியிருக்கும். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் குற்றம் செய்யாத போதே ஒரு நாள் சிறைக் காவலில் இருந்து விட்டால் குற்றம் செய்து விட்டு சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்க முடியும். இதுதான் பரிகாரம்” என்று சோதிடர்கள் தன்னை நாடி வரும் தொழிலதிபர்களிடமும் வாடிக்கை யாளர்களிடமும் கூறுகிறார்களாம். அதை நம்பி தங்களை ஒரு நாள் சிறைக் காவலில் வைக்கு மாறு மாவட்ட ஆட்சித் தலை வருக்கு பலரும் மனுப் போடு கிறார்களாம். மாவட்ட ஆட்சித் தலைவரும் அவர்கள் ‘ஜாதகத்தை’ சோதிடர்களைக் கொண்டு பரிசீலித்து ஜாதகப்படி சரியாக இருந்தால் ஒரு நாள் ‘லாக்-அப்’ பில் இருக்க அனுமதிக்கிறார்களாம். இது...

ஈழப் போரில் சரணடைந்த குழந்தைகளின் கதி என்ன?

ஈழப் போரில் சரணடைந்த குழந்தைகளின் கதி என்ன?

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் அய்.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ‘யுனிசெப்’ அதிகாரியிடம் சென்னையில் நேரில் அளிக்கப்பட்ட மனுவின் உள்ளடக்கம். ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாம லடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில் (ஐஊஞஞநுனு) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம். இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் வலுக் கட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப் பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின்...

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு – நேரில் மனு

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு – நேரில் மனு

ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற் போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாமலாக்கப்பட்ட 20000க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்ப ட்டது. ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரிபாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம்  ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் பார்வேந்தன்,  மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அனைத்திந்திய துணைத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, உரிமைத் தமிழ் தேசத்தின் ஆசிரியர் ...

கழக தலைவர் நிகழ்ச்சிகள் – புகைப்படங்கள்

கழக தலைவர் நிகழ்ச்சிகள் – புகைப்படங்கள்

ஐநா பொதுச் செயலருக்கும்,  ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு சென்னை 31082018 அனிதா நினைவு நூலக திறப்பு விழா குழுமூர் 01092018 மயிலாடுதுறை – அன்பு இணையேற்பு விழா

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள் சென்னை அணி புகைப்படங்கள் திருப்பூர் அணி புகைப்படங்கள் குடியாத்தம் அணி புகைப்படங்கள் மயிலாடுதுறை அணி புகைப்படங்கள்  

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு ! தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான 28.08.2018 அன்று கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு ! கேரளாவின் மழை வெள்ளத்திற்காக நிவாரண நன்கொடைகளை மக்களிடம் பெறும்போது இரயில் நிலையத்தில் காவல்துறை அநாகரீகமான செயலை கண்டித்தற்காக தோழர்.வளர்மதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தோழர்.வளர்மதி 01.09.2018 காலை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்த தோழர்கள் அவரை வரவேற்றனர். தோழர்.வளர்மதி புழல் சிறை அருகே உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கும், இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்டோர் நிலை குறித்து ஐ.நா விடம் இன்று ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை விடப்பட்டது To: ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம்  ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்குசெய்யப்பட்டிந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன்,...

ஐநா பொதுச் செயலருக்கும்,  ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

தோழர் கொளத்தூர் மணி                                31.8.2018 தலைமை ஒருங்கிணைப்பாளர்   ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும்.  ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில்(ICPPED) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம். இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த...

தி.மு.க.வின் தலைவராகியுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்

தி.மு.க.வின் தலைவராகியுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்

இன்றைய (28.08.2018)வாட்ஸ் அப் செய்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பொதுக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் பொது மக்களின் பார்வைக்காக தொலைக்காட்சி ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல முயற்சி என்பதை நாம் பாராட்ட வேண்டும். “திராவிட இயக்கம் ஒரு கடுமையான நெருக்கடி சூழலில் இப்போது இருந்துகொண்டு இருக்கிறது. கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று டெல்லியில் ஆளுகிற பார்ப்பன-மதவாத சக்திகள், தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை ஒழிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிற நிலையில் ஸ்டாலின் இப்போது தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்”. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தனித்துவமான அடையாளங்கள், திராவிட இயக்க அரசியல் ஆகியவற்றிலிருந்து அவர் நிச்சயமாக அவர் விலகிச் செல்ல மாட்டார் என்ற நம்பிக்கை எல்லோரையும் போல நமக்கும் இருக்கிறது. குறிப்பாக சுதந்திர நாள் செய்தியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிடுகையில், “இந்தியா என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட, பல்வேறு...

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான இன்று (28.08.2018)… கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

ஐ.நா அலுவலகம் முன்பு ஒன்றுகூடல் சென்னை 31082018

ஐ.நா அலுவலகம் முன்பு ஒன்றுகூடல் சென்னை 31082018

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நாளை (31.08.2018)காலை 10 மணிக்கு ஐ.நா அலுவலகம் முன்பு, கஸ்தூரிபாய் ரயில் நிலையம் அருகில்… #ஒன்றுகூடல்….. இலங்கை அரசால் ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 20,000க்கும் மேலான தமிழர்கள் எங்கே? திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

உனது நா…  எங்களது வாள்! – கனிமொழி

உனது நா… எங்களது வாள்! – கனிமொழி

  நீயின்றி இயங்காது எம் உலகு! பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச் சென்றது யார்? உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்… வண்டியில் இருந்து இறங்கி, நீ வீசும் சினேகப் புன்னகை… அதற்குப் பின்னால், எப்போதும் ததும்பும் நகைச்சுவை… மேடையில் இருந்து, “உடன் பிறப்பே” என்று அழைக்கும்போது, ஒரு கோடி இதயங்கள் ஒரு வினாடி உறைந்து துடிக்குமே அந்தக் கணம்… இதற்கு மாற்றாய் எதைத் தருவாய், நாளை முதல்...

வாசகர்களிடமிருந்து…

வாசகர்களிடமிருந்து…

‘நிமிர்வோம்’ ஜூன் 2018 இதழ் வி.பி.சிங் சிறப்பிதழாகவே வெளி வந்திருப்பது மிகச் சிறப்பு. உ.பி.யில் வடநாட்டில் பிறந்தவராக இருந்தாலும், வட நாட்டவருக்கே உரிய வழமையான இந்து வெறி மதவாதம், பழமைவாதம் என்ற சிந்தனையிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு, சமூக நீதி – சமத்துவம் என்று சிந்தித்த வி.பி.சிங், உண்மையிலேயே ஒரு அதிசய மனிதர் தான். தனது பிரதமர் பதவியையே தூக்கி எறிந்து, அவர் பாதுகாத்துத் தந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டில்தான் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட அரசு ஊழியரும் பயன் பெற்று வருகிறார்கள். அந்த நன்றி உணர்ச்சி இல்லாத சமூகத்தில் ‘நிமிர்வோம்’ நன்றி உணர்வுடன் அவருக்கு சிறப்பிதழை வெளியிட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும். சொல்லப் போனால் தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க.வுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாத நிலையில் முரசொலி மாறனுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர் அவர். தி.மு.க.கூட அவரை மறந்து விட்டது என்பது ஒரு சோகம் தான். – நா. கண்மணி, திருச்சி ஏ.ஜி.நூராணி...

மோடி பிற்படுத்தப்பட்டவரா?

மோடி பிற்படுத்தப்பட்டவரா?

காங்கிரசு கட்சி யின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறியுள்ள கருத்து முக்கியமானது (9.5.2014). மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதி வகுப்பில் பிறந்த நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குஜராத் மாநில முதல்வராகப்பதவியேற்றார். அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து தனது ஜாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைத்துக் கொண்டார். இதனால் உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த வகுப்பினரிடம் மோடி மன்னிப்புக் கேட்கவேண்டும். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மோத் கன்சீஸ் என்ற ஜாதிப்பிரிவு உள்ளிட்ட 40 ஜாதிப் பட்டியலை பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைத்தது. இதில் எதுவுமே மோடியின் ஜாதி அல்ல; மோடி மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். வேறுபாடு கண்டு பிடிக்க முடியாத பெயர் ஒற்றுமை காரணமாக தனது ஜாதிப் பிரிவையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள் இரகசியமாக சேர்த்து அரசாணையை வெளியிட்டார். இந்த மாற்றம் அவரது அமைச்சரவையில் இருந்த...

‘ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்’ கதை

‘ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்’ கதை

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான்.  ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான்.  கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, கூலி தருகிறேன் என்று கூறி, காவிரி நடு ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் ஓடக்காரன் துணையோடு. ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார். அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்று விட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப்...

நெஞ்சத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!

நெஞ்சத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!

திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டன்பாளையம் – தீண்டாமை ஒழிப்புச் சட்டத்துக்கு சவால் விட்டிருக்கிறது. தமிழகம் முழுதும் இதுபோல் எத்தனையோ ‘பாளையங்களில்’ நடக்கும் ஜாதி வெறித் தீண்டாமை இன்னும் வெளிச்சத்துக்கு வராமலே இருக்கிறது என்பதே உண்மை. ஜாதி வெறி இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த தோழர் பாப்பாள் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சமைத்த உணவு தீட்டாகி விட்டதாகக் கூறி அவரைப் பணி இடமாற்றம் செய்வதற்குத் தூண்டி அரசு அதிகாரிகளையும் பணிய வைத்திருக்கிறார்கள் அங்கே உள்ள கவுண்டர் சமூகத்தின் ஒரு பகுதியினர். இத்தனைக்கும் பாப்பாள் சொந்த ஊர் அது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் சத்துணவு சமையராக அவர் பணியாற்றத் தொடங்கியபோது இதே ஜாதி வெறி எதிர்ப்புக் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர்தான் அவர். இடையில் ஒரு தலைமுறை மாற்றம் வந்த பிறகும் ‘ஜாதி வெறி’ மனநிலை மட்டும் 15 ஆண்டுகளாக மாறாத நிலையில் இருக்கிறது என்பதுதான் இதில்...

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஒரு அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆளுநர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இந்த ‘அதிகார ஆக்கிரமிப்புகள்’ நடந்தன. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இது தீவிரம் பெற்று ‘ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்புகள்’ ஒரு நிலைத்த அரசியல் நடவடிக்கைகளாகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டில் வேறு புதிய வடிவத்தில் எழுந்து நிற்கிறது. இறையாண்மையுள்ள ஒரு மாநில அரசு தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளை தானாகவே முன் வந்து ஆளுநரின் கால்களில் வெட்கப்படாமல் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரின்  அதிகார அத்துமீறல்களை எதிர்த்து எதிர்க் கட்சிகள் தான் போராடுகின்றன. போராடினால் 7 ஆண்டு சிறை என்கிறது – ஆளுநர் மாளிகை அறிவிப்பு....

மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் அய்.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ர. பிரகாசு

மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் அய்.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ர. பிரகாசு

அனைத்திந்திய ‘தலித் மகிளா அதிகார் மான்ச்’ என்ற இந்த தலித் பெண்கள் அமைப்பு இந்தியாவில் நடந்த ஜாதி ரீதியான வன்முறைகளைத் தொகுத்து ஜூன் 21ஆம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவின் (ருசூழஊசு) கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது. புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிப்பது, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நிலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாத இந்துத்துவ சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக்குவது, தாழ்த்தப்பட்டவர்களை ’தலித்’ என்று அழைக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டது போன்ற செயல்கள் அண்மைக் காலங்களில் நடந்தன. இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் தான் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு அரண்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கவே செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டது என்றும் மோடி தொடர்ந்து சில இடங்களில் பதிவு செய்தார்....

பெரியாரின் ‘பயணம்’

பெரியாரின் ‘பயணம்’

90-வது வயதில்  மூ  180 கூட்டம். 91-வது வயதில்  மூ  150 கூட்டம். 93-வது வயதில்  மூ  249 கூட்டம். 94-வது வயதில்  மூ  229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம். இத்தனையும், கடும் நோயின் வலி களுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்….. சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட் டிருக்கும்….. இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்கச் செய்தார்? எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கச் செய்தார் ? அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா? நான் சொல்வதை கேட்டால் தான் உனக்கு சொர்க்கம்; என்னை வணங்காவிட்டால் நரகம் என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக் கிடையில்………… நான் தலைவன் நான் தவறே செய்தாலும் என்னை நீ ஆதரித்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில், யார் சொன்னாலும், நானே...

வேட்டி இந்து பண்பாடா? – செ.கார்கி

வேட்டி இந்து பண்பாடா? – செ.கார்கி

சிலர் இன்று வேட்டி என்பது இந்து பண்பாடு அது தமிழரின் பண்பாடு கிடையாது என சொல்லும் போக்கு உள்ளது. அது தவறான வாதமாகும். வரலாற்று வளர்ச்சி என்பது சுழல் ஏணி வரிசையில் முன்னோக்கி போவது.  இருக்கும் ஒரு வளர்ச்சி கட்டத்தில் இருந்து இன்னும் கூடுதலான ஒரு வளர்ச்சிக் கட்டத்திற்கு  செல்வதுதான் வளர்ச்சி. அப்படித்தான் சமூகம் மாறிவந்துள்ளது. எந்தச் சமூகமும் இருக்கும் நிலையில் இருந்து திடீரென சுழலேணியில் கீழ்மட்டத்தில் வந்து விழுந்துவிடாது. இந்த அடிப்படியில் இருந்துதான் நாம் வரலாற்றையும் மாறிவரும் மனிதர்களின் பண்பாடுகளையும் மதிப்பிட வேண்டும். உலகின் எல்லா சமூகங்களும் அநாகரிக நிலையில் இருந்துதான் நாகரிக நிலையை எட்டி இருக்கின்றன. எந்தச் சமூகம் அர்த்தமற்ற பழமையை கொண்டாடு கின்றதோ அந்தச் சமூகம் அறிவியல், பண்பாடு, என அனைத்திலும் தேங்கிவிடும். ஆனால் அப்படி தேங்கிப்போன சமூகங்களை இன்று உலகில் காண்பது அரிது. முதலாளித்துவத்தின் அபாரமான வளர்ச்சியானது தனது கரங்களை இந்தப் புவிப்பரப்பு எங்கும் பரப்பி...

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)

ஆதி திராவிடர்களுக்கு யாராவது நன்மை செய்ய வேண்டுமென நினைத்தால், பொதுக் கிணறு, கோவில், பள்ளிக்கூடம் ஆகியவற்றில் நம்மோடு கலந்து வாழ்வதற்கு அனுமதிப்பதுதான்! பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன. பெரியார் சாதி சங்க...

‘தலித்’ வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்

‘தலித்’ வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்

“கிரிக்கெட்டில் வியர்வை சிந்த வேண்டியதில்லை; பிறரைத் தொட வேண்டியதில்லை; சுறுசுறுப்பும் தேவையில்லை. இவை பார்ப்பனர்களின் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக இருப்பதாலேயே, ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டு துறையுமே பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்தியாவின் 85 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணியில் விளையாடிய 289 ஆண் கிரிக்கெட் வீரர்களில், 4 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில், கறுப்பின மக்களின் குறைவான பிரதிநிதித்துவம் கருத்தில் கொள்ளப்பட்டதைப்போல, இந்தியா வில் தாழ்த்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் குறைவான பிரதிநிதித்துவம், கண்டுகொள்ளப் படவில்லை. தென்னாப்பிரிக்க விளையாட்டுத் துறையின் தூண்டுதலால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், கறுப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது. இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு வரை, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், எந்த சர்வதேச போட்டியையும் நடத்த அனுமதிக்கப் படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராமதாஸ் அத்வாலே (மத்திய அமைச்சர்), கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டை கொண்டுவர தொடர்ச்சியாக வலியுறுத்தி...

மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

“மதங்களைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட மத ஆட்சிகள், அந்தக் கொள்கையை கைவிடுமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டு” என்று இங்கிலாந்தில் உள்ள ‘பிரிஸ்டல் பல்கலைக்கழகம்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முடிவுகளை சர்வதேச புகழ்  பெற்ற ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழ் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு – புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. “ஒரு நாடு எந்த அளவுக்கு மத நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏழ்மையில் சிக்குண்டு கிடக்கிறது” என்று புதிய ஆய்வு கூறுகிறது. அல்பேனியாவிலிருந்து ஜிம்பாவே வரை உள்ள உலகின் பல்வேறு நாடுகளின் தனி மனித வருவாய், சமூகப் பிரச்சினை, நாணய மதிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை சேகரித்து விரிவாக நடத்தப்பட்ட ஆய்வு இது. மதச்சார்பின்மை என்ற கொள்கை வளர்ச்சிக்கு ஒரு முன் நிபந்தனை. மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுவதாலேயே பொருளாதார வளர்ச்சி தானாக வந்து விடும் என்பது இதன் அர்த்தமல்ல” என்று...

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் – சு. அறிவுக்கரசு

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் – சு. அறிவுக்கரசு

பழந்தமிழ் இலக்கியங்கள் என்பதற்காகக் கொண்டாடப்பட வேண்டிய அவசியமில்லை. நல்ல கருத்துகளை ஏற்பதும் பழமையான மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளுவதுமே அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக முடியும். தம் மொழி இழந்து, நம் மொழி பேசும் நிலைக்கு ஆளாகியும்கூட, பார்ப்பனர் தம் பழக்க வழக்கங்களை விடாது கைக் கொள்கின்றனர். தொல்காப்பியம் கூறிய சின்னங்களுக்குப் பதிலாக சிகரெட்டும், விஸ்கி தம்ளரும் தம் கையில் ஏந்தி இன்று இருந்தாலும் மார்பில் முப்புரி நூலை விடாது அணிந்து தம் உயர்வைக் காட்டியே வருகின்றனர் என்பதை மறக்க முடியுமா? தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா போன்ற இன்றைய நிலப் பகுதிகள் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் அது கோண்ட்வானா என அழைக்கப்படலாம் எனவும் அதன் வடபகுதியில் ‘லெமூரியா’ இருந்தது என்றும் அதுவே தமிழ் இலக்கியம் கூறும் ‘நாவலந்தண்பொழில்’ என்றும் கூறுவர். 340 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்கோள் ஒன்றினால் இந்நிலப்பரப்பில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்ததாகவும்...

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  சமூகத்தின் இளைஞர் – சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார். இது சூத்திரர்களால் – சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு...

கழக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நன்கொடை: கோபி இராம இளங்கோவன்-க.ம. நாத்திகராணி புதிய இல்லம் திறப்பு

கழக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நன்கொடை: கோபி இராம இளங்கோவன்-க.ம. நாத்திகராணி புதிய இல்லம் திறப்பு

கழக வெளியீட்டு செய லாளர் கோபி இராம இளங் கோவன், க.ம. நாத்திக ராணி இணையரின் புதிய பெரியார் இல்லத் திறப்பு விழா, ஆகஸ்ட் 11ஆம் தேதி பகல் 12 மணியளவில் கொளப் பலூரில் சிறப்புடன் நிகழ்ந்தது. தா.செ. பழனிச்சாமி, கோ. இராமகிருஷ்ணன் ஆகியோர் புதிய இல்லத்தைத் திறந்து வைத்தனர். நிகழ்வையொட்டி மதுரை வேம்பனின் தந்திரவியல் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் ஆசைத்தம்பி வரவேற்புரையைத் தொடர்ந்து கோபி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பா. வெங்கிடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். இல்லத் திறப்பு விழா மகிழ்வாக கோபி. இளங்கோ கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 பொதுச் செயலாளரிடம் வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழகத் தோழர்கள் பெருமளவில் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30082018 இதழ்

கழக மாநாடு தமிழக அரசுக்கு கோரிக்கை ‘நீட்’டுக்கு விலக்கு கோரி – தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

கழக மாநாடு தமிழக அரசுக்கு கோரிக்கை ‘நீட்’டுக்கு விலக்கு கோரி – தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

2018 ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் நிகழ்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள்: கலைஞருக்கு வீர வணக்கம் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், சூத்திரர் இழிவு ஒழிப்பு இலட்சியத்தை நிறை வேற்றிட அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக்க – இரண்டு முறை – தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் மற்றும் சட்டம் நிறைவேற்றியவரும்,  திராவிட இயக்கத்தின் அடிப்படையான சமூக நீதிக் கொள்கைகளைக் கட்டிக் காப்பாற்றி விரிவு செய்து – மேலும் செழுமையாக்கி இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை ஜன நாயகப்படுத்தியவரும், சூத்திரர் களுக்கான ஆட்சியை நடத்து கிறேன் என்று சட்டப் பேரவையில் முதல்வராகப் பிரகடனம் செய்தவரும், தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்று பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் புரட்சியை சட்டப் படி நடைமுறைக்குக் கொண்டு வந்தவரும், ‘சிலை வைக்க வேண்டிய தலைவர்’ என்று...

அனிதா இல்லத்தில் சென்னை பயணக் குழுவினர்

அனிதா இல்லத்தில் சென்னை பயணக் குழுவினர்

சென்னை பரப்புரைக் குழுவினர் அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதா இல்லத்துக்கு 25.8.2018 மாலை 4 மணியளவில் சென்றனர். அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் அனைவரையும் வரவேற்றார். அனிதா இல்லத்துக்கு அருகே புதிதாகத் திறக்கப்பட இருக்கும் அனிதா நினைவு நூலகக் கட்டிடத்துக்கு சென்றனர். அங்கே ‘நீட்’ தேர்வை ஒழித்து, அனிதாவின் கனவை நனவாக்குவோம் என்று உறுதி ஏற்றனர். கழக வெளியீடுகளை நூலகத்துக்கு வழங்கி தோழர்கள் விடைபெற்றுத் திரும்பினர். உறுதிமொழி காணொளி பெரியார் முழக்கம் 30082018 இதழ்

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) நில உரிமையாளர் தனது நிலத்தை திரும்பக் கேட்டால் குத்தகைதாரர் மிகக் குறைவாக கேட்பது மூன்றில் ஒரு பகுதி நிலமோ அல்லது அதற்கு ஈடான பணமோ. நில உரிமையாளர் அதிகாரம் மிக்கவராக இருந்தால், மூன்றில் ஒரு பகுதி நிலத்தை வழங்கிவிட்டு மீதி நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். நில உரிமையாளரின் அதிகார பலம் குறையக் குறைய குத்தகைதாரரின் பங்கு கூடும். நில உரிமையாளர் உள்ளூர்க்காரராக இல்லாமலும் சாதி மற்றும் இதர பலம் இல்லாதவராக இருந்தால் ஒரு சென்ட் நிலம் கூட பெற முடியாது. ஆக, இந்தப் பேரத்தை தீர்மானிப்பது இவர்கள் இருவரது பலங்கள்தான். பதிவுபெற்ற...

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் கடல்போல் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுக்குப் பொறுப்பேற்று செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை யிலான செயல் வீரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகரம் முழுதும் கழகக் கொடிகளும் மாநாட்டுக் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. மாநாட்டு மேடைக்கு ‘சமச்சீர் கல்வி நாயகன் கலைஞர் மேடை’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாலை 3 மணியிலிருந்தே 6 பயணக் குழுக்களும் பறை இசை ஒலி முழக்கங்களோடு பெரம்பலூர் நோக்கி வந்து நகரையே குலுக்கின. சென்னை பயணக்குழு தனது நிறைவு பரப்புரையை பெரம்பலூர் கூட் ரோடு சந்திப்பில் நிகழ்த்தியது. மாலை 6 மணியளவில் பறை...

பரப்புரைப் பயணத்தில் விற்பனையாகிறது கழகத்தின் புதிய வெளியீடுகள்!

பரப்புரைப் பயணத்தில் விற்பனையாகிறது கழகத்தின் புதிய வெளியீடுகள்!

சலுகை விலையில் 6 புத்தகங்களின் தொகுப்பு ரூ.150/- இடஒதுக்கீடு உரிமைப் போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி அம்பேத்கர்-காமராசர் ஒரு வரலாற்றுப் பார்வை – கொளத்தூர் மணி கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்பு தமிழை இழிக்கும் வேத மரபு – விடுதலை இராசேந்திரன், வாலாசா வல்லவன் மத்திய அரசு பணிகளில் தமிழர் உரிமைப் பறிப்பு – கு. அன்பு காந்தியை சாய்த்த கோட்சேவின் குண்டுகள் – விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கம் 23082018 இதழ்

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

“தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணத்தின்” சென்னை மாவட்ட பரப்புரைக் குழு 20.08.2018 அன்று காலை 9.30 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து பரப்புரைப் பயண முழக்கத்தோடு பயணத்தைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து கிண்டி கத்திபாரா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மா.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்) மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பயணத்தின் முதல் பரப்புரைப் பயணக் கூட்டம் நங்கநல்லூர் சுரங்க பாதை அருகே காலை 11 மணிக்கு “விரட்டு” கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத் தோடு தொடங்கப்பட்டது. அருள்தாஸ், தமிழர் உரிமை பாடல்களைப் பாடினார். இரண்டாவது கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு பரப்புரைப் பயணம் தொடங்கியது. பரப்புரைப் பயண தோழர்களுக்கு நங்கநல்லூர் பகுதியை சார்ந்த குகனாந்தன் மதிய உணவை தோழர்களுக்கு  ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு, மாலை 3 மணிக்கு பரப்புரைப் பயணம் கோவிலம்பாக்கம் பேருந்து...

சிறைவாசி தண்டனைக் குறைப்புகளின் முழு தகவல்களையும் வழங்க ஆணையர் உத்தரவு சிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்

சிறைவாசி தண்டனைக் குறைப்புகளின் முழு தகவல்களையும் வழங்க ஆணையர் உத்தரவு சிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்

ராஜீவ் கொலை வழக்கில் நீதி மன்றங்களால் நிரூபிக்க முடியாத குற்றச் சாட்டுகளுக்குப் பிறகும் 26 ஆண்டு களாக சிறைக் கம்பிகளுக்குள் இருந்து உறுதி தளராது சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் பேரறிவாளன். டெல்லி அதிகார பீடத்தில்  ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் தங்கள் அதிகாரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது முழுமையான அதிகாரச் செல் வாக்கையும் முறைகேடாகப் பயன் படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக குடியரசுத் தலைவர் வழியாக இவர்களின் விடுதலைக்கான தடையைப் பெற்று உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்தது நடுவண் ஆட்சி. நாட்டைக் கெடுத்ததே நேரு வின் குடும்பம் என்று பேசி வரும் பா.ஜ.க.வும், சங்பரிவாரங்களும் ராஜீவ் கொலைக் குற்றத்தில் நேரடி தொடர் பில்லாத சிறைவாசிகளின் விடுதலையை உறுதியாக மறுக்கின்றன என்றால் பார்ப்பன அதிகார வர்க்கம் ஆட்சிகளை தங்களின் பார்ப் பனிய திசையில் செலுத்திக் கொண்டிருக்...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாகச் சமீப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட போதும், நிலச் சீர்திருத்தம் இம்மாநிலத்தில் சரிவரச் செயல்படுத்தப் படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ஒரு சாரரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இக்குற்றச் சாட்டின் அடிப்படையில் நோக்கினால், நிலப் பிரபுத்துவம் தமிழகத்தில் தொடர்கிறது என்றுதான் எவரும் ஊகிப்பர். அதன் விளைவாகப் பெரும்பான்மையான சாகுபடி நிலங்கள் குத்தகைக்கு அடைக்கப்பட்டும் வேளாண் வருமானத்தில் பெரும் பகுதி குத்தகையாக வசூலிக்கப்படும் சூழலும் நிலவ வேண்டும். குறிப்பாகக் காவிரி டெல்டா போன்ற செழிப்பான பகுதிகளில் இத்தகைய நிலச் சுவான்தார் முறை உக்கிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறை என்ன? நிலப் பிரபுத்துவம் பெருமளவு...

நன்கொடை

நன்கொடை

கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வெங்கட் – இராஜேஸ்வரி இணையரின் குழந்தைக்கு “அறிவுக் கனல்” என கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெயரிட்டார். அதன் நினைவாக இயக்க நிதியாக ரூ. 1000 கொடுத்தனர். பெரியார் முழக்கம் 23082018 இதழ்