மோடி பிற்படுத்தப்பட்டவரா?
காங்கிரசு கட்சி யின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறியுள்ள கருத்து முக்கியமானது (9.5.2014).
மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதி வகுப்பில் பிறந்த நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குஜராத் மாநில முதல்வராகப்பதவியேற்றார்.
அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து தனது ஜாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைத்துக் கொண்டார். இதனால் உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த வகுப்பினரிடம் மோடி மன்னிப்புக் கேட்கவேண்டும். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மோத் கன்சீஸ் என்ற ஜாதிப்பிரிவு உள்ளிட்ட 40 ஜாதிப் பட்டியலை பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைத்தது. இதில் எதுவுமே மோடியின் ஜாதி அல்ல; மோடி மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். வேறுபாடு கண்டு பிடிக்க முடியாத பெயர் ஒற்றுமை காரணமாக தனது ஜாதிப் பிரிவையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள் இரகசியமாக சேர்த்து அரசாணையை வெளியிட்டார். இந்த மாற்றம் அவரது அமைச்சரவையில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரிந்ததாகும். ஊடகத்திலும் இந்த அரசாணை குறித்து எந்த ஒரு தகவலும் கூறாமல் மறைத்து விட்டனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இது.
மோடி தேநீர் விற்றாரா?
மோடி தேநீர் விற்றதாகக் கூறுவதும் கேள்விக்குறியே! ஒருகாலத்தில் தான் தேநீர் விற்றதாக மோடி கூறிவருவதும் பொய். அவரது உறவினர் நடத்திய உணவகத்தில் பொழுதுபோக்காக சில காலம் வேலை பார்த்ததையே அவர் அப்படி திரித்துக் கூறுகிறார் என்று சக்தி சிங் கூறினார்.
நிமிர்வோம் ஜுலை 2018 மாத இதழ்