பெரியார் காட்டிய பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்!
பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையார், – பெரியார் மறைவுக்குப் பிறகு, தலைவர் காட்டிய வழியில் பயணத்தைத் தொடங்கினார். பெரியார் விட்டுச் சென்ற பணிகளை எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் பெரியார் போட்டுத் தந்த பாதையில் சென்று முடிப்போம் என்று உறுதியேற்று கருஞ்சட்டைத் தோழர்கள் அணி வகுத்தனர். பெரியார் மரணத்தைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் ‘திரும்பி வருகிறேன்’ என்று ‘விடுதலை’ ஏட்டில் விடுத்த அறிக்கை இது: என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும், என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து-விடுகிறேன். உடனே அய்யாவின் அந்தப் புன்னகை முகம் என் கண்முன் தோன்றி, “பைத்தியக்காரி, இவ்வளவுதானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்து எடுத்துச் சொல்விவந்த கருத்துகளை உன்னிடத் திலேயே காணமுடியவில்லையே! நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைப்பிடிப்பவளாய் இருக்கப் போகிறாயோ! சாதாரணப் பெண்களைப் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே!...
