Category: தலைமை கழகம்

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

பரப்புரைப் பயணம் மீண்டும் செப். 17இல் தொடங்குகிறது

ஆகஸ்ட் 25ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கிய ‘மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரைப் பயண’த்துக்கு தமிழகம் முழுதும் காவல் துறை வழங்கிய அனுமதியை திடீரென மறுத்தது. வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு, தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஆகிய பிரச்சினைகளை காவல்துறை காரணமாகக் கூறியது. அதைத் தொடர்ந்து கழகத்தின் பரப்புரைப் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் மீண்டும் பரப்புரைப் பயணம் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடங்குகிறது. செப். 20இல் நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் நிறைவு விழா மாநாடு நடைபெறும். காவல்துறைக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தோழர்களே, தயாராவீர்! பெரியார் முழக்கம் 0509209 இதழ்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணத்திற்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய வெளியீடுகள் 1) பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விரட்டும் புதிய கல்விக் கொள்கை 2) தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் – வடநாட்டுக்காரர்கள் 3) பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஒரு தொகுப்பு 4) 10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி 5) ஆர்.எஸ்.எஸ். கேள்விகளுக்கு அதிரடி பதில். முன்பதிவுக்கு : தபசி குமரன் +919444025408 உமாபதி +917299230363

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை: பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு ! மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! என்கிற முழக்கத்தோடு திராவிடர்_விடுதலை_கழகம் ஆக. 26-31 வரை தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து தொடங்கிய பரப்புரைப் பயணம் முறையாக காவல்துறையின் அனுமதி பெற்று துவங்கப்பட்டது ஆனால் தற்போது ஆக. 25இல் தொடங்கிய கழகத்தின் பரப்புரைக் குழுக்களுக்கும்,ஆக. 26இல் தொடங்கிய பரப்புரைக் குழுக்களுக்கும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. எனவே பரப்புரைப் பயணத்திட்டமும் பள்ளிப்பாளையம் நிறைவு விழா மாநாடும் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். – கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 29082019 இதழ்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஆண்டுத் தொகுப்புகள்

பள்ளிப் பாளையம் நிறைவு விழா மாநாட்டில் கிடைக்கும்! நிமிர்வோம் 2018ஆம் ஆண்டு இதழ்களின் தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை: ரூ. 500/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 2018ஆம் ஆண்டு தொகுப்பு (அழுத்தமான அட்டையுடன்) விலை : ரூ. 500/- – நிர்வாகி பெரியார் முழக்கம் 22082019 இதழ்

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம்  திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம் திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

திருக்குறள் மாநாட்டில் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 1949ஆம் ஆண்டு பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு பற்றி பலரும் பேசினார்கள். அம் மாநாட்டின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1949 ஜன. 15, 16ஆம் தேதிகளில் சென்னை பிராட்வேயில் ஒரு மாநாட்டுப் பந்தல் போடப்பட்டு ‘வள்ளுவர் குறள் – தமிழர் நெறி விளக்க மாநாடு’ என்ற தலைப்பில் அந்த மாநாட்டை பெரியார் கூட்டினார். சி.டி.டி. அரசு  அறிமுக உரையாற்ற, சோமசுந்தர பாரதியார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். முதல் நாள் மாநாட்டில் தமிழறிஞர்கள் திரு.வி.க., திருக்குறள் முனுசாமி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் இராசமாணிக்கனார், இலக்குவனார் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் நாள் 16.1.1949 அன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.  இராவ் பகதூர் சக்கரவர்த்தி நயினார் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். பேரறிஞர் அண்ணா தலைவரை முன்மொழிந்தும், நாவலர் நெடுஞ்செழியன் வழிமொழிந்தும் உரையாற்றினர். சி. இலக்குவனார், கா....

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

சென்னை திருக்குறள் மாநாட்டின் மாபெரும் எழுச்சி குறள் நெறியே தமிழர் மதம் என சூளுரை

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் காமராசர் அரங்கில் ஆக. 12 அன்று திருக்குறள் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. ஆரியத்துக்கு எதிரான தமிழர்களின் அடையாளம் திருக்குறள் என்று மாநாடு முரசறைந்தது. ‘தமிழர் மதம் குறள் மதம்; தமிழர் நெறி குறள் நெறி’ என்று பெரியார் முன் வைத்த பண்பாட்டு முழக்கத்தை முன்னெடுப்போம் என்று மாநாடு சூளுரைத்தது. மாநாடு காலை 9.30 மணியளவில் மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையோடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அருகே கூட்டமைப்பின் செயல்பாட் டாளர்கள் அறச்சுடரை ஏற்றினர். கோவை இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் பொழிலன், சோ. திருநாவுக்கரசு, சு. பழனிராசன், பேராசிரியர் ருக்மணி பன்னீர்செல்வம், இரா. வினோத்குமார் உரையாற்றினர். முனைவர் இளங்குமரனார் மிகச் சிறப்பான தொடக்க உரையாற்றினார். பாவேந்தன் நெறிப்படுத்தினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் – பெண்களும் ஆண்களும் பெரியார் சிந்தனைகளை முன் வைத்து உணர்ச்சிபூர்வமாகப்...

‘என்.அய்.ஏ.’ ஒழுங்கு முறை அமைப்புக்கு கூடுதல் அதிகாரமா? கண்டன ஆர்ப்பாட்டம்

‘என்.அய்.ஏ.’ ஒழுங்கு முறை அமைப்புக்கு கூடுதல் அதிகாரமா? கண்டன ஆர்ப்பாட்டம்

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.அய்.ஏ.) வரம்பற்ற அதிகாரம் வழங்கி, சிறுபான்மையினர், சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஜூலை 27, 2019 மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். “இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் பார்ப்பன இந்துத்துவாவை எதிர்த்து களமாடும் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன், திருமுருகன் காந்தி, மீ.த. பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கண்டன உரையாற்றினர். பெரியார் முழக்கம் 08082019 இதழ்

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

பெட்ரிசியன் கல்லூரி காமராசர் விழாவில் விடுதலை இராசேந்திரன் பேச்சு

மாணவச் செல்வங்களே! ஜாதி எதிர்ப்பாளர்களாக மாறுங்கள்! சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 15, 2019 அன்று காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கம் பகல் 11 மணியளவில் நடைபெற்றது. முதல் அமர்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘கல்விப் புரட்சி’ எனும் தலைப்பில் உரையாற்றினார். “கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கே நமது நாட்டில் ஒரு புரட்சி நடத்த வேண்டியிருந்தது என்றால், அதற்கு என்ன காரணம்? ஜாதிய சமூகமாக நாம் இருந்ததுதான். மனுதர்ம அடிப்படையில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் ‘சூத்திரர்கள்’ என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்வி உரிமையை நேர் செய்வதற்கு வந்ததுதான் ஜாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்குக் காரணம் ஜாதியடிப்படையில் திணிக்கப்பட்ட பாகுபாடுகளை ஒழித்து, ஜாதி இல்லாத சமத்துவ நிலையை உருவாக்குவதற்கே தவிர, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல. எனவே கல்விப்...

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – நடுவண் ஆட்சிக்கு எச்சரிக்கை

அணுக்கழிவு சேமிப்பு வைப்பகத்தை தமிழ்நாட்டுக்குள் திணிக்காதே! 14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை  மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப்  படமும் பிரான்சில் அணுக்கழிவு பாதுகாப்பு எவ்வளவு அபாயகர மானதாக இருக்கிறது என்பதை விளக்கும் ஆவணப்படமும் திரை யிடப்பட்டது. பின்னர் அறிவியல் அமர்வு தொடங்கியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் பியூசிஎல்-இன் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் கண. குறிஞ்சி இவ்வமர்வுக்குத் தலைமை ஏற்றார். கூட்டமைப்பின் நீண்ட காலச் செயல்பாடு குறித்து விளக்கி அமர்வை ஒருங்கிணைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் தொடக்கவுரை ஆற்றினார். அணுக் கழிவுப் புதைப்பதைத் தடுப்பதற்கு இதை வெகுமக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு...

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம்

மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை பயணம்

புதிய கல்வி என்ற பெயரில்  குலக்கல்வியை திணிக்காதே மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்காதே இளைய தலைமுறையின் உரிமை முழக்க பரப்புரை! * நாம் மண்ணின் மைந்தர்கள்தலைமுறையாக இந்த மண்ணில்பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிறவடமாநிலங்களை விட நாம்- வேறுபட்டுள்ளோம். * எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மைவாட்டினாலும் சரி; “எப்பாடுபட்டாவது- நமதுமகளை, மகனை படிக்க வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும்; என்ற கொள்கையே நமது பண்பாடு! * பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலேபோராடினார். உரிமையைப் பெற்று தந்தார்.  காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த உரிமைகளை படிப்படியாகவளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின்வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டுஉரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங்மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுதந்தார். போராடிப்பெற்ற சமூக நீதிஉரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் . இப்போது பாஜக ஆட்சியில் என்ன நடக்கிறது? ” உங்கள் கல்விக் கொள்கையை நீங்கள்தீர்மானிக்க முடியாது. நாங்களே  தீர்மானிப்போம்”என்கிறது பாஜக ஆட்சி. * நாம் வேண்டாம் என்ற ‘நீட்’டைதிணிக்கிறார்கள்; இந்தியை , சமஸ்கிருதத்தை படி என்கிறார்கள்;  கல்விவேலை இட ஒதுக்கீடுகளைப் பார்ப்பனஉயர்ஜாதியினருக்கும் தருவோம். அவர்கள்பட்டியலின ஜாதியினரை விட குறைந்தமதிப்பெண்கள் எடுத்தாலே போதும்என்கிறார்கள். மீண்டும் குலக்கல்வியை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நம் தலையில்சுமத்துகிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ன கூறுகிறது? 3,5,8 ம் வகுப்புகளுக்கும்  அகில இந்திய தேர்வுஎன்கிறது. 8 ம் வகுப்பு முடித்த 14 வயதுகுழந்தைகள் விருப்பமான தொழில்கல்வியை கற்கலாம் என்ற பெயரில்குலக்கல்விக்கு கதவு திறக்கிறது;   பாடத்திட்டத்தையும் அகில இந்தியஅடிப்படையில் தயார் செய்வார்களாம்; நமக்கான கல்விக் கொள்கையை மத்தியஅரசே தீர்மானிக்குமாம். 3 வயது முதலே கல்வியாம், 30 குழந்தைகளுக்கு குறைவான கிராமப்புற பள்ளிகளை மூடுவார்களாம். ஒருங்கிணைந்த கல்வி வளாகத்திற்கு போக வேண்டுமாம். 3 வயது குழந்தை எப்படிச் செல்லும்? அதுமட்டுமா தோழர்களே! நமது வேலை வாய்ப்புகளைவடநாட்டார்களுக்கு வாரி வழங்குகிறார்கள்; நெஞ்சு பதறும் இந்த புள்ளி விவரங்களைப்படியுங்கள். தென்னக இரயில்வேயில் திருச்சிகோட்டத்தில் சமீபத்தில் எலக்டிரிசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்டதொழில் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர்தேர்வு செய்யப்பட்டனர். அதில் 1600 பேர் வடஇந்தியர்கள். சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியநிறுவனத்தில் வேதியியல், இயந்திரவியல், மின்னியல் போன்ற 8 வகையானபொறியாளர்(ENGINEERING) பணிகளுக்கு 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. தமிழக வருமான வரித்துறையில் 2012 ல்சேர்க்கப்பட்ட 384 பேரில் 28 பேர் தான்தமிழர்கள். 2014 ல் சேர்க்கப்பட்ட 78 பேரில் 3 பேர்தான் தமிழர்கள். 2018 ல்பணியிலமர்த்தப்பட்ட 100 ஆய்வாளர்களில்ஒருவர் தான் தமிழர். * வருமான வரித்துறையின்,  டேக்ஸ்அசிஸ்டென்ட் பணியில் அமர்த்தப்பட்ட 265 பேர்களில் 5 பேர்தான் தமிழர்கள். கடந்த சிலஆண்டுகளில் 10 சதவீதத்தை கூடஎட்டவில்லை. சமீப காலமாக நடைபெற்ற இரயில்வேதேர்வுகளில் கிட்டத்தட்ட 90 சதவீத அளவில்வடமாநிலத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் 2010-2019 வரை 18% தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் வருமான வரித்துறை, கலால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் எனமத்திய அரசின் 55 வகையானஅலுவலகங்கள் உள்ளன. இவ்வாறான, பல்வேறு துறைகளில் 2011 ல் இருந்துபணியிலமர்த்தப்பட்டவர்களில் 99% வடஇந்தியர்கள்தான். 0.5% தான் தமிழர்கள். * மோடி தலைமையேற்ற கடந்த 62 மாதங்களில் தான், பாரத் மிகுமின்நிறுவனம், பெட்ரோலிய நிறுவனம், இரயில்வே, பெல் உள்ளிட்ட தமிழகத்தின்மத்திய அரசு நிறுவனங்களில் 90% வடஇந்தியர்களை பணியில் அமர்த்தியுள்ளதுமோடி அரசு. மண்ணின் மைந்தர்களாகிய நமது- கல்வி,வேலை,மொழி உரிமைகளை மறுத்துதமிழ்நாட்டை வடநாடாக்கும் முயற்சிகள்வேக வேகமாக நடக்கின்றனவிழித்துக்கொள்வோம் தோழர்களே!  இந்த ஆபத்துகளை தடுத்து நிறுத்துவோம்மக்கள் கருத்தை உருவாக்குவோம் இதற்காகவே இந்த பரப்புரை பயணம்.  உரத்து முழங்குவோம்! நடுவண் அரசே எங்கள் தலைமுறையைவாழவிடு! நாங்கள் மண்ணின் மைந்தர்கள்!

நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம்

நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம்

வருகிற ஆகஸ்டு 3 ம் தேதி நடைபெற இருந்த #நிமிர்வோம் 11 வது வாசகர் வட்டம் கூட்டம் தவிர்க்க இயலாத காரணத்தினால் தள்ளிவைக்கப்படுகிறது. மீண்டும் நடைபெறும் தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா பள்ளிபாளையம்

பயண நிறைவு நாள் மாற்றம்: #அறிவிப்பு மண்ணின் மைந்தர் உரிமை முழக்கப் பரப்புரைப் பயணம் நிறைவு விழா – இடம் மற்றும் நாள் மாற்றம் அறிவிப்பு கடந்த ஜூலை-18″ 2019 பெரியார் முழக்கத்தில் வெளிவந்த #பரப்புரை_பயண_நிறைவு_விழா – இடம் *மேட்டூர்* , நாள் – 31. 08. 2019 என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி பயண நிறைவு விழா *#பள்ளிபாளையத்தில்* ( #நாமக்கல்மாவட்டம்) *30.08.2019* *வெள்ளி* மாலை நடைபெறும் என அறிவிக்கிறோம். பயணக் குழு பொறுப்பாளர்கள் 30.08.2019 அன்று பள்ளிபாளையத்தில் பரப்புரை பயணம் நிறைவடையும் வகையில் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கும்படியும், தேவையெனில் மாநில பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். #கொளத்தூர்மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்.

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ்த் தொடர்ச்சி: கோவை சுரேஷ் பாபு   –      ரூ. 20,000 குவைத் பாண்டியன்    –      ரூ. 20,000 ‘இட்லி’ தயாரிப்பாளர் இனியவன்    –      ரூ. 20,000 சென்னை தோழர்கள் : உதயசங்கர், கார்த்திகேயன், டாக்டர் சுந்தர், –      ரூ. 20,000 கோவை தங்கவேலு, அரிகிருஷ்ணன் இணைந்து    (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம்...

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

05.05.2019 தேதியிட்ட ஈழத்தமிழர்களால் அமெரிக்காவிலிருந்து நடத்தப்படும் ”இலக்கு” வாராந்திர மின்னிதழுக்கு ‘தாயகக் களம்’ பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறித்தும், தற்போதைய ஈழச்சூழல், தமிழீழம் குறித்தும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அளித்துள்ள பேட்டி : ”போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்” ‘வன்னிக்காட்டில் அவருடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை’ – ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி. முள்ளிவாய்க்காலுக்கு முன் எமது மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்கு ஈக வரலாறு இருப்பது போல் அதற்கு தோள் கொடுத்து நின்ற தாய்த்தமிழகத்திற்கும் ஓர் ஈக வரலாறு உண்டு. கடலினும் பெரிதான ஈக நெஞ்சங்களின் ஒரு துளி சாட்சி தான் திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவரும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கொளத்தூர் தா.செ.மணி. 1984 சனவரி 05 முதல் 1986 நவம்பர் இறுதிவரையான மூன்று ஆண்டுகளுக்கு புலிகள் பயிற்சி எடுப்பதற்காக தன்னுடைய...

மே 25ல் மேட்டூரில் நாத்திகர் விழா !  சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவு !

மே 25ல் மேட்டூரில் நாத்திகர் விழா ! சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவு !

  நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி உத்தரவிட்டது. ஆனால், தங்களின் மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும்,...

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

பதியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் வாய்ப்புக்கேற்ப மாற்றிப் பேசும் கெடுவாய்ப்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டுள்ளது. அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்தும் தவறானப் போக்காகும். பாவேந்தர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல. “மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு வஞ்சர்க்கோ கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியிருப்பு விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்மானம் பாயும் தலை மேடை நமக்குத் தாண்டி அந்த வாட்படை நமைஅவரின் போருக்கு ஒப்படை” பெரியார் குறித்துப் பாவேந்தர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். 1908ஆம் ஆண்டு நடந்த புலவர் தேர்வில் மாநி லத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றவர் அன்றைய கனக சுப்புரத்தினம். மயிலம் ஸ்ரீஷண்முகன் வண்ணப்பாட்டும், மயிலம் சுப்பிரமணியர் துதியமு தும் பாடிக்கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், அதே ஆண் டில் புதுவை வேணு நாய்க்கர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் முதன்முதலாய்ப்...

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்கு வதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை....

நாத்திகர் விழா – அனுமதி கோரி வழக்கு

நாத்திகர் விழா – அனுமதி கோரி வழக்கு

நாத்திகர் விழா: அனுமதி கோரி வழக்கு! நாத்திகர் விழாவுக்கு அனுமதி அளிக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் நாத்திகர் விழா நடத்த முடிவு செய்துள்ளது திராவிடர் விடுதலைக் கழகம். இதற்கு அனுமதி அளிக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நாத்திகர் விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி, கடந்த மாதம் 28ஆம் தேதியன்று கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், அங்கிருந்த காவல் துறை ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறித் தங்களது மனுவை நிராகரித்ததாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். “கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று மாவட்டத் தேர்தல் அதிகாரியாக உள்ள மாவட்ட ஆட்சியரிடம் விழா நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தோம். எங்களது...

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?” • சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. • முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். • அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது...

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ் தேர்தல் சிறப்பிதழாக – பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கி ஏராளமான செய்திகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கூடுதல் இதழ் தேவைப்படுவோர் மார்ச் 30 தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு : 7299230363 / 9841489896 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க  தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி. கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி...

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

நாடாளுமன்ற தேர்தல் 2019 – திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு

  “திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு தீர்மானம்” திருப்பூர் 20.03.2019 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்தோம், அரசின் அடக்குமுறைகளை சந்தித்தோம் நடுவண் ஆட்சி தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து...

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் !

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் ! “ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ” சார்பாக 14.03.2019 வியாழன் காலை 10.30 மணியளவில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஐ.நா. வை ஏமாற்றி நீதியின் பிடியில் இருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கையே தமிழகத்தில் இருந்து வெளியேறு! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்தி பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வா! என்கிற முழக்கங்களுடன் தி,வி,க,த.பெ.தி.க., விசிக,மநேமக,எஸ்.டி.பி.ஐ,இளந் தமிழகம், தவாக,த.தே.ம.மு.,த.தே.வி.இ.,த.வி.க.,மற்றும் பல்வேறு தோழமை அமைப்பினர் இம்முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தலைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன்,இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், த.பெ.தி.கவின் தோழர் குமரன், த.தே.வி.இ. தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு மற்றும் பல்வேறு அமைப்பை சேர்நத தோழர்கள் கலந்து கொண்டனர். “அபிநந்தனுக்குக்கொரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? “இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து!...

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

புரட்சிப் பெரியார் முழக்கம் வாசகர்களுக்கு…

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா அனுப்பிய தோழர்களுக்கு – இதழ் ஒரு வார இடைவெளிக்குப் பிறகே கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா அனுப்பியவுடன் அடுத்த இதழ் உடனே கிடைக்கும் என்று தோழர்கள் எதிர்பார்ப்பு இயல்பானதே. ஆனால் சந்தா கிடைக்கப் பெற்று முகவரிப் பட்டியலில் இணைத்து சந்தாதாரருக்கு சென்றடைவதற்கு இடையில் ஒரு இதழுக்கான கால அவகாசம் தேவையாகிறது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சந்தா செலுத்திய பிறகு ஒரு இதழ்கூட கிடைக்கவில்லை என்றால் அது நிர்வாகத்தின் கோளாறு. உடனே அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதழ் விட்டு விட்டு கிடைக்கவில்லை என்றால் அது உள்ளூர் அஞ்சலகத்தின் கோளாறு. அஞ்சலகத்திற்கு நேரில் சென்று ஒரு முறை புகார் அளித்தால் இந்த கோளாறை சரி செய்து விடலாம். இதழ் குறித்து தொடர்புக்கு: 9841 489896 (பொறுப்பாளர்) 9444 115133 (ஆசிரியர்) பெரியார் முழக்கம் 07032019 இதழ்

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது” – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு (2011 ஆம் ஆண்டு திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம். (2016 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.

பொழிலனின்  “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

பொழிலனின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

சென்னை புத்தகக் கண்காட்சி 300 அரங்கில் பொழிலன் முன்னிலை யில் (அருவி புத்தக உலகம்) கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை ஜனவரி 11ஆம் தேதி மாலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 (பொதுமை பதிப்பகத்தில்) வேல் முருகன் நூலை வெளியிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

இலயோலா கல்லூரி வீதி திருவிழவில் இந்துத்துவப் பாசிசத்தைப் படம் பிடிக்கும் முகிலனின் ஓவியக் கண்காட்சி  இடம் பெற்றிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த சில படங்கள் இந்துக்களைப் புண்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் முகிலனை மிரட்டினர்.  இதைத் தொடர்ந்து ஓவியர் முகிலனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில்  01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஓவியர் முகிலனுக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஓவியர் முகிலனுக்கு கழகப்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சால்வை அணிவித்து பெரியார் சிலை மற்றும் புத்தகம் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி ஆகியோர் முகிலன் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் இந்துப் பார்ப்பனியப் புரட்டு வாதங்களையும் அம்பலப்படுத்தி  உரையாற்றினர். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார்...

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….* திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”பிப்ரவரி 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள்* 🗞🖋 *வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள்* 💯 *கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு* 📜 *10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு* 📢 *பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்* 🌍 *மோடி பூமியின் காவலரா?* 💸 *பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி* 👶 *மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள்* இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 *அஞ்சல் வழியாக பெற – ₹ 300/-* 💰 *தனி இதழ் விலை – ₹ 20/-* *தொடர்புக்கு : 7299230363*

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

நாளை பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி” கழகத் தலைவர் அறிவிப்பு : GST வரியால்  திருப்பூர் பனியன் தொழில் துறை கடும் வீழ்ச்சியடையவும், கோவை சிறுதொழிற்கூடங்கள் ஆயிரக்கணக்கில் மூடவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கவும் காரணமானவர் பாஜக பிரதமர் மோடி எந்த பயனும் அளிக்காத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எனும் பெயரில் ஏழை எளிய மக்களை இரவிலும் பகலிலும் தெருவில் நிறுத்தி பல பேர் உயிரிழக்க காரணமானவர் பாஜக பிரதமர் மோடி ஸ்டைர்லைட், மீத்தேன், சாகர் மாலா, கூடங்குளம் என தமிழ்நாட்டை நாசமாக்கும் திட்டங்களை ஆதரிப்பவர் பாஜக பிரதமர் மோடி. 10% பொருளாதார இடஒதுக்கீடு எனும் பெயரில் அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிராக சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயல்பவர் பாஜக பிரதமர் மோடி. புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடக் கூட வராமல் இப்போது தேர்தலுக்காக தமிழ்நாடு வருபவர் பாஜக பிரதமர் மோடி. தனது...

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி. திருச்செங்கோடு கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய முழு உரை நூல் வடிவில் திராவிடர் விடுதலைக் கழக வெளியீடு…. விற்பனையில்…. *நன்கொடை ₹ 30/-* தொடர்புக்கு : 9841489896/ 044-24980745

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

கழகத்தின் “நிமிர்வோம்” இதழ் அரங்கு கடந்த ஆண்டைப் போலவே திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரங்கு (எண்.35) தனியே எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கில் கழக வெளியீடுகள்,  பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சிய நூல்களும் கிடைக்கும். தொடர்புக்கு  : முகில் ராசு 9842248174, விஜய்குமார் 9841653200, கவிஞர் தம்பி 9789381010 பெரியார் முழக்கம் 07022019 இதழ்

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்’ இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. நூலின் விலை ரூ.25. பக்கங்கள் 40. ‘நாளை விடியும்’ இதழாசிரியரும் பெரியாரியலாளருமான திருச்சி அரசெழிலன், தனது  சொந்த செலவில் இந்த நூலை அச்சிட்டு கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ‘காந்தியைத் துளைத்த கோட்சேயின் குண்டுகள்’ எனும் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூலை இதேபோல் தனது சொந்த செலவில் அச்சிட்டு கழகத்துக்கு வழங்கினார். கழகத்தின் இயக்கப் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் அரசெழிலன் அவர்களுக்கு கழக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். – ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 31012019 இதழ்

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

ஏற்கனவே 21.01.2019 அன்று, கொளத்தூர் மணி மற்றும் கோவை இராமகிருட்டிணன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது ஆகவே யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பல ஆவணங்களையும், உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் காரணம் காட்டி வாதிட்டார். மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்கள் சார்பாக வழக்கறிஞர் திரு வீரசேகரன் ஆஜராகி இரண்டு புதிய ஆவணங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். அதில் ஒரு ஆவணம் வரும் 31.01.2019 அன்று கோவையில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் மூவரும் அதாவது திரு கி.வீரமணி, திரு கொளத்தூர் மணி மற்றும் திரு இராமகிருட்டிணன் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள், அதற்கான அழைப்பிதழ் என்றும் மற்றொன்று மேற்படி அழைப்பிதழ் விடுதலை பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி உள்ளது என்றும்...

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி  தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு

14-1-2019 இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்து பேரறிவாளன் முதலான எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரியும் ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தியும் விண்ணப்பத்தைக் கையளித்தனர். முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார். முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: திரு. இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜனவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜனவரி 2019 இதழ்

தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சிப் பேரணி கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvom@gmail.com பெரியார் முழக்கம் 17012019 இதழ்

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

சென்னையில் ‘திராவிடம்’ பயிற்சி வகுப்பு

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு சென்னையில் டிசம்பர் 14, 15 தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் 50க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர். ‘சென்னை பிரஸ் கிளப்’ அரங்கில் நடந்த இந்தப் பயிற்சி வகுப்பில் டிசம்பர் 14ஆம் தேதி பகல் 11 மணியிலிருந்து ஒரு மணி வரை ‘திராவிடம்’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். திராவிடம் தோன்றிய வரலாறு, அதன் உள்ளடக்கம், வரலாற்றுத் தொடர்ச்சி, திராவிடத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் அடங்கியுள்ள குழப்பங்களை தரவுகளோடு விளக்கினார். உரையைத் தொடர்ந்து பயிற்சி யாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க வேண்டுகோள்   இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கு உண்டு.  இவ்வடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகத் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளைத்  தங்களிடம் வலியுறுத்துகிறோம்.   இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திபெத்துப் போன்ற...

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

கொளத்தூர் தா.செ.மணி தலைவர்: திராவிடர் விடுதலைக் கழகம்   பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி திரு இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் தமிழக அரசும் கவலையோடும் அக்கறையோடும் இருப்பது தாங்கள் அறிந்ததே. அவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துவிட்ட நிலையில் தங்கள் விடுதலை வேண்டி மத்திய மாநில அரசுகளையும், இந்திய உச்சநீதி மன்றத்தையும் முறைப்படி அணுகினார்கள். அந்தச் செயல்வழியில் இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு  அவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9,2018...

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

மாலை 7.30 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சி 300 அரங்கில் தோழர் பொழிலன் முன்னிலையில் {“அருவி புத்தக உலகம்”} கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 {பொதுமை பதிப்பகத்தில்} தோழர் வேல் முருகன் வெளியிட கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். செய்தி குகன்

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 🚸 தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சி பேரணி 🗞 கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு 🗣🏴பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் 🚩🙅‍♀ பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் 🙋‍♀ அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் 💯 ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? 📲 பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி !

”நாள்காட்டி” திராவிடர் விடுதலைக் கழக மாத நாள் காட்டி ! விலை : ரூபாய் 70.00 மட்டும்.(ரூபாய் எழுபது மட்டும்) பெரியார், அண்ணல் அம்பேத்கர், மேதகு பிரபாகரன், கலைஞர்,  அறிஞர்அண்ணா, காமராஜர், எம்.ஆர்.ராதா, புரட்சிக்கவிஞர் படங்களுடன் அழகிய வடிமைப்பில்,வரலாற்று குறிப்புகளுடன் உள்ள மாத நாள்காட்டி. குறைந்த அளவே அச்சிடப்பட்டு உள்ளது. நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய எண் : தோழர் தபசி குமரன், அலைபேசி எண் : 9941759641 தலைமை நிலையச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். (திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட நிர்வாகிகளிடமும் நாள்காட்டி கிடைக்கும்

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

“காவிக்கு மறுப்பு – பெரியாரின் கறுப்பு” திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

இலட்சியத்தில் உறுதி; கட்டுப்பாட்டின் அடை யாளமே கருஞ்சட்டை என்பதை நிரூபித்தது பேரணி. காவல் துறைக்கு வேலையே இல்லை; தோழர்களே தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு கட்டுப்பாட்டுடன் – இளம் பெண்களும் ஆண்களும் பேரணியில் அணி வகுத்தக் காட்சி – எந்த அரசியல் கட்சியிலும் பார்க்க முடியாத ஒன்று. மூத்த தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே. ஆனைமுத்து; அடுத்த தலைமுறையைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் ஒரே மேடையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சி தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேடைக்குப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக பெரியாரின் வெவ்வேறு நிழல் படங்கள் திரையிடப்பட்டன. உரைகளுக்கு இடையே பெரியாரின் ஒரு நிமிட உரை இரண்டு முறை ஒளி பரப்பப்பட்டது. பெரியார் குரலையும் கருத்தையும் கேட்ட இளைஞர்கள் கூட்டம்...

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

ஜாதி ஒழிப்பு – தமிழின விடுதலை – மதவெறி எதிர்ப்பை வலியுறுத்திக் குரல் கொடுத்தது கருஞ்சட்டை மாநாடு

செயல் திசை நோக்கி வெளிச்சம் காட்டும் திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் திருச்சி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் – உரிமைப் பறிப்பு – விடுதலைக்கான இலக்கு நோக்கிய கொள்கை வழியை அடையாளப்படுத்தி தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளது. திருச்சி உழவர் திடலில் 2018 திசம்பர் 23 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளங்கள் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித் தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக் கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசியஇன அடையாள உரிமையின் கீழ்த் தங்களைத் `தமிழர்கள்’ என்றே பதிந்து கொள் வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்து கிறது. மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட...

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம்  பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

பெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம் பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது

ஆயிரமாயிரமாய் இளைஞர்கள் அணி வகுத்த கருஞ்சட்டைப் பேரணி குலுங்கியது திருச்சி மாநகர் டிசம்பர் 23, 2018 அன்று திருச்சி மாநகர் ஒரு வரலாற்றை எழுதியுள்ளது. சுமார் 200 அமைப்புகள் ஓரணியில் திரண்டு – பெரியாரே – தமிழர்களின் – தமிழ்நாட்டின் முதன்மை அடையாளம்; காவிக்கு மறுப்பு – பெரியாரின் கருப்பு என்ற முழக்கத்தோடு பல்லாயிரக்கணக்கில் திருச்சியில் திரண்டார்கள். திரும்புமிடமெல்லாம் கருப்புச் சட்டை. அதிலும் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் பெரியார் இறப்புக்குப் பின் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெரியாரையேப் பார்த்திடாத இளைஞர்கள்; அவர்களிலும் பலர் பெண்கள். தமிழ்நாடு முழுதுமிருந்தும் பல நூறு தனி வாகனங்கள் திருச்சியை நோக்கி வந்தன. பகல் 2 மணியளவில் பேரணி புறப்படும் கே.டி. திரையரங்கு அருகே கருஞ்சட்டைத் தோழர்கள் திரளத் தொடங்கினார்கள். 3.30 மணியளவில் பறை இசை முழங்க பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு அமைப்பும் தங்கள்...

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

டிசம்பர் 23 பேரணி தோழர்களே தயாராகி விட்டீர்களா?

திருச்சியில் டிசம்பர் 23இல் பெரியார் உணர்வாளர்கள் நடந்த இருக்கும் கருஞ்சட்டைப் பேரணிக்கு பேராதரவு பெருகி வருகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்று பேரணியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்புடன் தமிழ்நாட்டின் தனித்துவத்துக்கும் சமூக நீதிக்கும் சவால் விட்டு வரும் மதவெறி சக்திகளுக்கு தமிழ்நாடு – பெரியார் மண் என்பதை உணர்த்துவோம். திருச்சி கருஞ்சட்டைக் கடலாக வேண்டும் தோழர்களே! தனிப் பேருந்துகளில் அணி அணியாகத் திரளுவீர்! பெரியார் முழக்கம் 13122018 இதழ்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

சந்தா சேர்ப்பு இயக்கம்: கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புப் பணிகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்துத் தருமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் இணைப்பு சக்தியாய் விளங்குவது கழகத்தின் ஏடுகள் தான்! கழக ஏடுகளை பரப்புவதன் வழியாக கழகத்தின் வளர்ச்சியை மேலும் தீவிரமாக்க முடியும் என்பதை உணர்ந்து சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முனைப்புக் காட்டி செயல்படுமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். – தலைமைக் கழகம் பெரியார் முழக்கம் 13122018 இதழ்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அழைக்கிறது ஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்!

இந்தியா முழுதும் பிற்போக்குத்தனங்களும், சாதிய மேலாதிக்கமும் நிறைந்திருக்கிறது. ஆரியப் – பார்ப்பனிய  – இந்துத்துவ கும்பல் இந்திய ஒன்றியத்தின் அனைத்துத் தேசிய இனங்களின் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாள்தோறும் கலவரங்களும், படுகொலைகளும் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படுகின்றன. மாட்டுக் கறி வைத்திருந்தவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும், சிறுபான்மை மக்களையும் காவி வெறிக் கும்பல் அடித்துக் கொலை செய்கிறது. ஆரியப் – பார்ப்பனியத்தின் சூழ்ச்சிப் போக்குகளிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட தன் இறுதி மூச்சு வரை போராடியவர் தந்தை பெரியார். ஆனால், அத்தகைய தமிழ்நாட்டினைக் கூறுபோட்டு விற்றிட இன்றைக்கு ஆரியப் – பார்ப்பனிய இந்துத்துவக் கும்பல்களை பெருமளவில் களமிறங்கி யிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டையும், இயற்கை வளங்களையும், தனித் தன்மைகளையும் இந்தக் கும்பல்களிடமிருந்து காக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டினர்  அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டு வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவக் கும்பலை அச்சுறுத்தும் பெரு நெருப்புகளுள் தந்தை...